20 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன் பட்டப் போட்டியில் 16 பதக்கங்கள் வென்ற இந்திய மல்யுத்த வீரர்கள் குழுவுக்கு பிரதமர் பாராட்டு
20 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன் பட்ட போட்டியில் 16 பதக்கங்கள் வென்ற (ஆடவர் மற்றும் மகளிர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தலா 7 மற்றும் கிரேக்கோ-ரோமன் பிரிவில் 2) இந்திய மல்யுத்த வீரர்கள் குழுவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
“நமது மல்யுத்த வீரர்கள் மீண்டும் நமக்கு பெருமை தேடித் தந்துள்ளனர். 20 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன் பட்டப் போட்டியில் 16 பதக்கங்கள் வென்ற (ஆடவர் மற்றும் மகளிர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தலா 7 மற்றும் கிரேக்கோ-ரோமன் பிரிவில் 2) இந்திய மல்யுத்த வீரர்கள் குழுவுக்கு வாழ்த்துக்கள். இது இந்தியாவின் மிகச் சிறப்பான செயல்பாடு. எதிர்கால இந்திய மல்யுத்தம், பாதுகாப்பான கரங்களில் இருப்பதை இது உணர்த்துகிறது.”
கருத்துகள்