முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐஐடி மெட்ராஸில் இந்திய அறிவுசார் அமைப்புகளுக்கான மையம்

இந்திய அறிவுசார் அமைப்புகளுக்கான மையத்தை ஐஐடி மெட்ராஸ் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கணிதம் மற்றும் வானியல், இந்திய கட்டிடக்கலை

பொறியியல், இந்திய அரசியல் மற்றும் பொருளாதார சிந்தனை, இந்திய

அழகியல் மற்றும் இலக்கண மரபுகள் போன்ற கருப்பொருள்களில்

இம்மையம் கவனம் செலுத்தும்.

இந்திய அறிவுசார் அமைப்புகளுக்கான மையத்தை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை தொடங்கியுள்ளது.

டெல்லியில் உள்ள இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ஐசிசிஆர்) தலைவர் டாக்டர் வினய் சஹஸ்ரபுத்தே, டெல்லியில் உள்ள இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் தலைமை இயக்குநர் திரு. குமார் துஹின் ஆகியோர் இம்மையத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த மையம் கவனம் செலுத்த உள்ள நான்கு கருப்பொருள் பகுதிகள்:

இந்தியாவில் கணிதம் மற்றும் வானியல், கட்டிடக்கலை பொறியியல், வாஸ்து மற்றும் சிற்பக்கலை, இந்திய அரசியல் மற்றும் பொருளாதார சிந்தனை, இந்திய அழகியல் மற்றும் இலக்கண மரபுகள்.

மையத்தின் தொடக்கவிழா 6 ஆகஸ்ட் 2022 (சனிக்கிழமை) அன்று

நடைபெற்ற போது, இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ஐசிசிஆர்) தலைவர் டாக்டர் வினய் சஹஸ்ரபுத்தே இந்நிகழ்ச்சியில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அறிவியல், தொழில்நுட்பம், கட்டிடக் கலை, மொழியியல், கலைகள், கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உலகிற்கு இந்தியா ஆற்றிய பங்களிப்பு குறித்து விரிவான ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இதன் கண்டுபிடிப்புகள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்த மையத்தின் முதன்மை ஆய்வாளராக டாக்டர் ஆதித்ய கொலச்சனா செயல்பட்டு வருகிறார். பேரா. அருண் மேனன், பேரா. மனு சந்தானம், பேரா. சந்தோஷ்குமார் சாஹு, பேரா. சுதர்சன் பத்மநாபன், பேரா. ராஜேஷ்குமார், பேரா. ஜோதிர்மயா திரிபாதி ஆகிய ஐஐடி ஆசிரியர்கள் இம்மையத்தின் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இந்த மையத்திற்கான நிதியுதவியை இந்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில் அதன் இந்திய அறிவுசார் அமைப்புகள் பிரிவு வழங்கி வருகிறது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய ஐசிசிஆர் தலைமை இயக்குநர் திரு. குமார் துஹின், இந்தியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து சர்வதேச பார்வையாளர்களிடையே விழிப்புணர்வை உருவாக்க ஐஐடி மெட்ராஸ்-ன் இந்திய அறிவுசார் அமைப்புகளுக்கான மையம், இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ஐசிசிஆர்) ஆகியவை இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார்.

ஐசிசிஆர், ஐஐடி மெட்ராஸ் இடையிலான ஒத்துழைப்பை முறைப்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திரு. குமார் துஹின், பேரா. ரகுநாதன் ரெங்கசாமி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ஐஐடி மெட்ராஸ்-ன் டீன் (குளோபல் என்கேஜ்மெண்ட்) பேரா. ரகுநாதன் ரெங்கசாமி பேசும்போது, இந்திய அறிவுசார் அமைப்புகள் தொடர்பாக தரமான ஆராய்ச்சியை இம்மையம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில்வதற்கும், இந்திய கல்விமைய வளாகங்களை சர்வதேச மயமாக்குவதற்கும் உகந்த சூழலை இம்மையம் உருவாக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மையத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் முக்கிய முடிவுகள் ஆராய்ச்சி முடிவுகள்: இந்திய அறிவுசார் அமைப்புகள் தொடர்பான தரமான ஆராய்ச்சியை இந்த மையம் வெளியிடுவதுடன், கல்விக் கருத்தரங்குகள், மாநாடுகளை நடத்தி கண்டுபிடிப்புகளைப் பரப்புவது இம்மையத்தின் குறிக்கோளாகும். வெளியில் உள்ள அறிஞர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களையும் இணைத்து இந்த ஆராய்ச்சிப் பணிகள் நடைபெறும்.

கற்பித்தல் முடிவு: தொடக்கத்தில் கருப்பொருள் பகுதிகளை வடிவமைத்து, இதுதொடர்பான பாடப்பிரிவுகளை ஐஐடி மெட்ராஸ் மாணவர்களுக்கு இந்த மையம் வழங்கும். பின்னர், இப்பாடப்பிரிவுகளை என்பிடெல் தளத்தில் விரிவாக வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது பொதுமக்களை சென்றடைதல்: இந்திய அறிவுசார் அமைப்புகளின் பல்வேறு அம்சங்களை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே பிரபலப்படுத்த பயிற்சிப் பட்டறைகளை நடத்த இம்மையம் திட்டமிட்டுள்ளது. பிரபலமான கட்டுரைகள், சமூக ஊடகப் பதிவுகள் போன்றவை மூலமாகவும் மக்களைச் சென்றடைய இந்த மையம் திட்டமிட்டு உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...