முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொலைத்தொடர்புத் துறையில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்குனர்கள் சங்கத்தின் வருடாந்திர நிகழ்ச்சியில் அமைச்சர் பேச்சு

வரும் ஆண்டுகளில் மேற்கொள்ளப்படவுள்ள தொலைத்தொடர்புத் துறை சீர்திருத்தங்களுக்கு இணங்க தொழில்துறையும் சேவையின் தரத்தை மேம்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் பேச்சு

வரும் ஆண்டுகளில் நாட்டின் தொலைத்தொடர்புத் துறை மேலும் பல சீர்திருத்தங்களை சந்திக்கும் என்றும், தொழில்துறையும் தனது பங்கிற்கு சேவையின் தரத்தை குறிப்பிட்டதக்க அளவில் மேம்படுத்த வேண்டும் என்றும் மத்திய தொலைத் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார் .  டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்குனர்கள் தொழில்துறையின் பிரதிநிதிகள் அடங்கிய முக்கிய அமைப்பான  டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்குனர்கள் சங்கத்தின் வருடாந்திர நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டு பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். மத்திய தொலைத் தொடர்புத் துறை இணையமைச்சர் திரு தேவுசிங் சவுகான் மற்றும் இதர பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சேவையின்  தர அளவுருக்கள் கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை, தொலைத்தொடர்புத் துறை அணுக வேண்டும் என்றும் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். தற்போதைய நிலையை விட சேவையின் தர அளவுருக்களை மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகரிப்பதற்கு புதிய ஆலோசனை அறிக்கையை இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு தொலைத்தொடர்பு துறைக்கு அவர் அறிவுறுத்தினார்.


ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பத்தின் பயணம் மிகவும் உற்சாகமாக இருக்கும் என்று கூறிய அவர், பல்வேறு நாடுகள் 40 முதல் 50% சேவையை வழங்குவதற்கே பல வருடங்கள் தேவைப்பட்டதை சுட்டிக் காட்டினார். ஆனால் நாம் மிக தீவிரமாக பணியாற்றுவதோடு குறுகிய காலத்திற்குள் 80%  சேவை என்ற இலக்கை அரசு நிர்ணயித்திருப்பதோடு,  குறைந்தபட்சம் 80%ஐ நாம் நிச்சயம் அடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய இணையமைச்சர் திரு தேவுசிங் சவுகான், வளரும் நாடு என்ற நிலையிலிருந்து இந்தியா வளர்ந்த நாடாக மாறி வருவதாகவும், இதை அடைவதில் தொலைத் தொடர்புத் துறை அளப்பரிய பங்களிப்பை வழங்கும் என்றும் தெரிவித்தார். சுகாதாரம், கல்வி சுரங்கம், போக்குவரத்து, தளவாடங்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதில் ஐந்தாம் தலைமுறை இணைப்பு மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்றார் அவர்.

“ஐந்தாம் தலைமுறை மற்றும் அதைக் கடந்த தொழில்நுட்பத்திற்கு கதி சக்தி தொலைநோக்குப் பார்வை” என்பது இந்த ஆண்டு வருடாந்திர நிகழ்வின் கருப்பொருளாகும். நிகழ்ச்சியின்போது ‘கதி சக்தி-இந்தியாவில் அதிகரிக்கப்பட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பின் துவக்கத்திற்கான பாதை' என்ற தலைப்பிலான வெள்ளை அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. மேலும் 

தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டுக்கும் தொலைத்தொடர்பு இணைப்பை உறுதி செய்து, சேவையின் தரத்தை துறை அதிகாரிகள் மேம்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தல்

நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தொலைத்தொடர்பு  இணைப்பை உறுதி செய்தல், சேவையின் தரத்தை மேம்படுத்துதல் ஆகிய பொதுவான இலக்குகளில் துறை அதிகாரிகளிடையே ஒழுங்குமுறையிலிருந்து  வளர்ச்சி வரையிலான உணர்வில் மாற்றம் தேவை என்று மத்திய தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். கள அலுவலர்கள், தலைமையக துறை அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளின் இரண்டு நாள் உச்சிமாநாட்டில் நேற்று உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். மத்திய தகவல் தொடர்பு இணையமைச்சர் திரு தேவுசிங்  சவுகானால் நேற்று காலை  தொடங்கி வைக்கப்பட்ட இந்த உச்சிமாநாட்டில், தொலைத் தொடர்புத்துறை சம்பந்தமான பல்வேறு விஷயங்கள் குறித்த இணை பங்குதாரர்களின் பணி குழுக்களின் பரிந்துரைகள் அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் பிற்பகலில் எடுத்துரைக்கப்பட்டது.

  டிஜிட்டல் பொருளாதாரத்தின் உலகளாவிய டிஜிட்டல் உள்ளடக்கத்தில் தரமான தொலைத்தொடர்பு இணைப்பின் அவசியத்தை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் சுட்டிக் காட்டினார். தொழில்துறை மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து, துறை மற்றும் தலைமையகத்தில் உள்ள துறை அலுவலர்கள் பணியாற்றினால் மட்டுமே தொழில்நுட்பத்தின் மாறும் தன்மைக்கு ஏற்றவாறு தொலைத்தொடர்புத் துறையை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று அவர் கூறினார். பழங்கால தொலைத்தொடர்பு சட்டங்களுக்கு பதிலாக வலுவான மற்றும் எதிர்காலத்துக்கு ஏற்ற சட்டம் அவசியம் என்றும், இது தொடர்பான வரைவு அறிக்கை, பொது மக்களின் ஆலோசனைகள்/ கருத்துக்களுக்காக விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 முன்னதாக உச்சிமாநாட்டின் துவக்க விழாவில் பேசிய அமைச்சர் திரு தேவுசிங்  சவுகான், 5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை நோக்கிய முன்னேற்றத்தில் தொலைத்தொடர்புத் துறையின் பங்களிப்பை வலியுறுத்தினார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...