முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னையில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணம் நிகழ்ச்சியில் அமைச்சர் பியூஷ் கோயல் உரை

மகளிருக்கு அதிகாரமளிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது:


மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் 

மகளிருக்கு அதிகாரமளிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். சென்னை அமைந்தகரை, அண்ணாநகர் மற்றும் நொளம்பூரில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணம் தொடர்பான நிகழ்ச்சிகளில் இன்று (08.01.2024) கலந்து கொண்டு அவர் பேசினார்.

மோடியின் உத்தரவாத வாகனம் மக்களின் எதிர்ப்பார்ப்புகளையும் தாண்டி அரசுத் திட்டப் பலன்களை வழங்குகிறது என்று அவர் தெரிவித்தார். இந்தப் பயணம் மக்கள் பங்கேற்புடன் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக அவர்  கூறினார். 50 நாட்களில் 10 கோடிப்  பேரை சென்றடைந்துள்ளது  என்று கூறிய அவர், அரசு திட்டங்கள் குறித்து மக்களிடையே இந்தப் பயணம் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார்.  திட்டங்களின் பயன்கள் தகுதியான நபர்களின் வீடுகளுக்கே சென்றடைவதாக அவர் தெரிவித்தார். இந்தப் பயணம்  புதிய இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியாவை நோக்கியது என்று அவர் தெரிவித்தார்.



பிரதமர் திரு நரேந்திர மோடியின் செயல்பாடுகள் 140 கோடி மக்களின் மனதில் நம்பிக்கையை விதைத்து அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும்  81 கோடி பேர் பயனடைவதாகவும், இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டத்தின் கீழ் பத்து கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ஏழைகள் நல உணவுத் திட்டத்தில் 3.5 கோடி பேர் பயனடைவதாகவும், இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்தில் இதுவரை 40 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்



தேசத்தின் வளர்ச்சிக்கு, தமிழ்நாட்டின் வளர்ச்சி முக்கியமானது என,  கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  பிரதமர் பேசியதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.  நல்லாட்சிக்கான செங்கோல் அமிர்த காலத்தின் அடையாளமாகத் திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார். ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆகிய 4 தரப்பினரின் முன்னேற்றத்தில் அரசு அதிக கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டின் மகளிர் சக்தியை கண்டு தாம் வியப்படைவதாக அவர் குறிப்பிட்டார்.  மாநிலத்தில் மகளிர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதாக அவர் தெரிவித்தார். 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு  வங்கிக் கடன்கள் சாதாரண மக்களுக்கு எளிதில் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். தற்போது, அந்த நிலை மாறியுள்ளதாகவும், சாதாரண மக்கள் எளிதில் கடன் பெற முடிவதாகவும் அவர் தெரிவித்தார்.  அவர்கள் உரிய முறையில் கடன்களை திருப்பிச் செலுத்துவதால் லாபத்தில் இயங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி திகழ்கிறது என்று அவர் கூறினார்.


பிரதமர் திரு நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் நலனில் அதிக அக்கறைக் கொண்டுள்ளதாகக் கூறிய  திரு பியூஷ் கோயல், மாநில மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் போது முத்ரா வங்கிக் கடன் திட்டம், பிரதமரின் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பயன்களை பயனாளிகளுக்கு குறிப்பாக பெண் பயனாளிகளுக்கு அதிக அளவில் அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு எம் அண்ணாதுரை, வங்கி உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இன்றைய நிகழ்ச்சிகளுக்கிடையே சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் இல்லத்திற்கு சென்ற திரு பியூஷ் கோயல், அங்கு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். விஜயகாந்தின் மனைவி திருமதி பிரேமலதா மற்றும் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...