முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இராம ஸ்ரீநிவாசனை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சார ஊர்வலம்

மதுரை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் இராம ஸ்ரீநிவாசனை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா


மதுரை நேதாஜி சாலை தொடங்கி தெற்கு ஆவணி மூல வீதி வழியாக விளக்குத்துண் பகுதி வரை பிரச்சார ரத ஊர்வலம் மூலமாக பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் உள்துறை அமைச்சரின் வருகையை முன்னிட்டு மதுரை மாநகரப் பகுதி முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.


மதுரை நேதாஜி சாலை தெற்கு ஆவணி மூல வீதி விளக்குத்தூண் பகுதிகளில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.  மேலும் திருமயம் முதல் லெ விளக்கு வரை நேற்று மாலை முதல் பாதுகாப்பு பலமாய் இருந்து சில வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், பொதுமக்கள், வணிகர்கள் நடந்து சென்றனர்.   மேலும் பிரச்சார ஊர்வலம் நடைபெறும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே நிற்கக்கூடிய வாகனங்களில்



வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள உயரமான கட்டிடங்களில் நின்றபடி காவல்துறையினர் முழுவதுமாக கண்காணித்தனர்.நேற்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஊர்வலம் நடைபெற்றது. பாதுகாப்புக் காரணங்களுக்காக மாலை 3 மணி முதல் வணிக நிறுவனங்கள் செயல்படத் தடை விதிக்கப்பட்டது.

அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதனால், நேற்று று மாலையே சுவாமி வீதி உலா உள்ள நிலையில் பக்தர்கள் அதற்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.  உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொராதாபாத்தில் கடைசியாக தேர்தல் பரப்புரை செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா.ஆறு நாட்கள் கழித்து ஏப்ரல் 9 ஆம் தேதி மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தை அஸ்ஸாமிலிருந்து ஆரம்பிக்கிறார்.

இடையில் ஐந்து நாட்கள் அமித்ஷா ஏன் பிரச்சாரம் செய்யவில்லை என்று பார்த்தால் 

ஏப்ரல் 4, 5 தேதிகளில் தமிழ் நாட்டில் பிரச்சாரம் செய்யவிருப்பதாக அறிவித்து விட்டு கடைசி நேரத்தில் ஜகா வாங்கியதும் பலருக்கும் புரியாத நிலையில் ஏப்ரல் மாதம் 4, 5-ஆம் தேதிகளில் திட்டமிட்டிருந்த அமித் ஷாவின் பிரசாரம் ரத்தான நிலையில், 9-ஆம் தேதி சென்னைக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் இது குறித்துப் பேசிய மாநிலத் தலைமை. ‘எவ்வளவோ கேட்டும் அமித் ஷா பிரசாரத்துக்கு வர மறுக்கிறார். ஸ்மிருதி இரானி, ராஜ்நாத் சிங் போன்றவர்கள் வந்தாலும், அவர்களின் முகங்கள் மக்கள் மத்தியில் பரிச்சயமில்லை. அமித் ஷாவைப் பிரசாரத்துக்கு வரச் சொல்லுங்கள்...’ என கூறியிருக்கிறார்கள் . அதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்திலிருந்து சொன்ன பிறகே பிரசாரத்துக்கு சம்மதம் சொன்னாராம் அமித் ஷா. சிவகங்கை, மதுரை, தென்காசி, கன்னியாகுமரி தொகுதிகளில், `ரோடு ஷோ’  என தவறாகக் கூறும் பிரச்சார ஊர்வலம் நடத்துவதற்கும் ஏற்பாடானது. அதற்குள், சிவகங்கை பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ் மீது         மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி  ஐநூத்தி சொச்சம் கோடி ரூபாய் காலி. கோடிகளைச் சுருட்டியதா பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி வேட்பாளர் மீது காங்கிரஸ் கட்சி புகார் கொடுத்திருக்கு. 

 மயிலாப்பூர் இந்து  சாஸ்வத நிதி நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்த எம்.கே.பாலனை எரிச்சுக் கொன்னு போட்ட கதைலாம் இப்போது நினைவுக்கு வருகிறது. 

புகார் கொடுத்தவர்கள் தரப்பு பெரிதாக அழுத்தமில்ல. சுருட்டினதா சொல்லப்படற பகுதியகலும்

 பெரிதாக பதட்டம்இல்ல. 

 விரிவாக எழுதுவதற்கு இன்னும் 

கொஞ்சம் விபரம் தேவை. இது தேர்தல் முடிந்து பின்னர் பேசப்படுமா என்பதே எழுவினா ? நிதி மோசடிப் புகார் வெடிக்கவும், காரைக்குடி பிரச்சார ஊர்வலத்தைக் ரத்து செய்யச் சொல்லி விட்டாராம் அமித் ஷா. அதுமட்டுமல்ல, ‘யார்மீது என்ன புகார் இருக்கிறது என்பதைச் சொல்ல மாட்டீர்களா...’ எனதா தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின்  நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது!”

பிரதமர் நரேந்திர மோடி-உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் செயல்பாடுகள்  மீது ஆர்எஸ்எஸ்க்கு திருப்தியில்லை என்பதோடு  2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில்  அறிவிக்கப் பட்டுள்ள 417 வேட்பாளர்களில் பாதி நபருக்கு மேல் ஆர்எஸ்எஸ் ஒப்புதலின்றி சீட் தரப்பட்டதாகவே தகவல்... தங்களது இரும்புப் பிடிக்குள் பாரதிய ஜனதா கட்சியை வைத்திருக்கவே விரும்பும் ஆர்எஸ்எஸ்க்கு பிரதமர் நரேந்திர மோடியும் - உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தன்னிச்சையாச் செயல்படுவது சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதைச் சூசகமாக பலமுறை தெரிவித்த பிறகும் எந்த மாற்றமும் இல்லை என்பதால் ஆர்எஸ்எஸ் மிகவும் அப்செட்டாம். 

கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகளில் இந்த முறை 100 தொகுதிகளில் வெற்றி பெறுவது கடினம் என்பதால் கடந்த முறை தோல்வியுற்ற தொகுதிகளில் சிலவற்றை யாவது வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி உள்பட மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு சீட் வழங்கியுள்ளனர். தமிழ் நாட்டில் டிடிவி தினகரன், ஓ.ன்னீர் செல்வம் , நடிகை ராதிகா சரத்குமார், ஜான் பாண்டியன் போன்றோரை பாரதிய ஜனதா கட்சி களமிறக்கியுள்ளதன் பின்னணி இதுவே. ஆனாலும்  ஆர்எஸ்எஸ் பிரதிநிதியான தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் மற்றும் நாடெங்குமுள்ள கேசவ விநாயகம் போன்ற மாநில அமைப்புச் செயலாளர்கள் மூலம் ஆர்எஸ்எஸ் பாரதிய ஜனதா கட்சியினரின் தன்னிச்சையாக போக்கைக் கட்டுப்படுத்த கடிவாளம் போடுகிறது. ஆனால் இவர்களுக்கு எதிராகவே பாஜகவில் சில முக்கியத் தலைவர்கள் நிழல் யுத்தம் நடத்தி வருகிற நிலையில் 

இன்னும் தேர்தல் முடிவதற்கு முன்  என்னென்ன நடக்குமோ பார்க்கனும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...