முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதுரை மாநகராட்சியில் பத்தாயிரம் லஞ்சம் பெற்ற வரித்தண்டலருடன் உதவியாளரும் கைது

மதுரை மாநகராட்சியில் பத்தாயிரம் லஞ்சம் பெற்ற வரித்தண்டலருடன் உதவியாளரும் கைது.

மதுரை மாநகராட்சியில் சொத்துவாி பெயர் மாற்றத்துக்கு ரூபாய் பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர், மற்றும் உதவியாளரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர்  கைது செய்தனர்.

மதுரை மாநகராட்சி  ஆறாவது வார்டுக்கு உட்பட்ட கண்ணனேந்தல் விஜயலட்சுமிநகர் பரசுராமன் ( 74 வயது) உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராவார். அவரது மனைவியின் பெயரிலுள்ள சொத்துக்களை  மூத்த மகனான ஈஸ்வரக் கண்ணனுக்கு மாற்ற முடிவு செய்து அந்த  இடத்திற்கான சொத்துப் பெயர் மாற்றம் செய்வதற்கு மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட அலுவலகத்தில் மே மாதம் 13- ஆம் தேதி விண்ணப்பித்தார்.

ஓய்வு பெற்ற ஆசிரியர் பரசுராமன் அளித்த மனு, மதுரை மாநகராட்சி மண்டலப் பிரிவு அலுவலகம் கண்ணனேந்தல்  வரிவசூல் செய்யும் பிரிவிற்கு வந்திருக்கிறது. அந்த மனுவை மாநகராட்சி  ஆறாவது வார்டு வரித்தண்டலர் ஆறுமுகம் (50 வயது) விசாரணை செய்துள்ளார். இவர் சிக்கந்தர்சாவடியைச் சேர்ந்தவராவார். பின்னர் சம்பந்தப்பட்ட இடத்தை 15- ஆம் தேதியன்று அவரும், அவரது உதவியாளராக உள்ள உறவினருமான சுதாகர் (வயது 25) ஆகியோர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொணடதைத் தொடர்ந்து ஆய்வு செய்த இடத்தை முழுவதும் அளந்து பெயர் மாற்றம் செய்வதற்கு ரூபாய். 20 ஆயிரம் லஞ்சமாகக் கொடுத்தால் உடனே கையெழுத்திட்டுத் தருவதாக வரித்தண்டலர் ஆறுமுகம் தெரிவித்தாராம். ஆனால் பரசுராமன், நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் தன்னிடம் அவ்வளவு பணமில்லை எனக் கெஞ்சிய அதைதொடர்ந்து லஞ்சத்தை ரூபாய்.15 ஆயிரமாகக் குறைத்துப் பேரம் பேசினார்கள் அதற்கும் ஆசிரியர் ஒப்புக்கொள்ளவில்லை கடைசியாக ரூபாய். பத்தாயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தாராம் ஆறுமுகம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத  பரசுராமன், மதுரை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்ததையடுத்து புகாரைப் பெற்றுக்கொண்ட மதுரை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பரசுராமனிடம் அவர் கொண்டு வந்து கொடுத்த பத்தாயிரம் பணத்தை அரசு சாட்சிகள் முன்பு பினாப்தலின் இரசாயனப் பவுடர் தடவிய பத்தாயிரம் ரூபாயை லஞ்சப் பணத்தைக் கொடுத்து அனுப்பியதை அடுத்து நேற்று முன்தினம் காலை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அறிவுறுத்தலின் படி, பரசுராமன் அந்த பணத்துடன் கண்ணனேந்தல் மாநகராட்சி வரிவசூல் மையத்திற்கு சென்று கொடுத்து நிலையில் 

அங்கு மதுரை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக்  கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையில் ஆய்வாளர் குமரகுரு மற்றும் துறையினர் மறைந்து நின்றிருந்து. பில் கலெக்டர் ஆறுமுகத்திடம் ரூபாய் .பத்தாயிரத்தை பரசுராமன் கொடுத்திருக்கிறார். அந்த பணத்தை அவர் வாங்கி உதவியாளர் சுதாகரிடம் கொடுத்த நிலையில் உடனே மறைந்திருந்து கண்காணித்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விரைந்து  அவர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து கைது செய்து விசாரணை நடத்திய பிறகு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் நீதிபதி உத்தரவின் பேரில் நீதிமன்றக் காவலில் சிறையிலடைத்தனர்.. இச்சம்பவம் குறித்து மதுரை மாநகராட்சியில் உள்ள இதற ஊழல் செய்யும் ஊழியர்கள் மத்தியில் பயத்தை உருவாக்கியுள்ளது‌.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...