காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கடிதம்.
கள்ளக்குறிச்சியில் கள்ள விஷச்சாராயம் குடித்ததில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் குறித்து அவர் கூறி இருப்பதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்தவர்களில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். 159 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் துயர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டின் ஆன்மாவையும் அசைத்துள்ளது.
கணவனை, தந்தையை, மகனை இழந்தவர்களின் அழுகுரல்கள் தொடர்பான வீடியோக்கள் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இந்த மிகப் பெரிய மனித துயரத்துக்கு வார்த்தைகள் மட்டும் ஆறுதலைத் தராது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் தெரிவித்த பாஜக, வறுமையின் பிடியில் உள்ள அந்தகா குடும்பங்களுக்கு உதவிகளையும் அளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய துயரம் முழுக்க முழுக்க மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. ஒருவேளை ஆளும் திமுக-இண்டியா கூட்டணி ஆட்சிக்கும், சட்டவிரோத மதுபான மாஃபியாவுக்கும் இடையே உள்ள ஆழமான தொடர்பு இல்லாமல் இருந்திருந்தால், இன்று 56 உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய துயரம் முழுக்க முழுக்க மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. ஒருவேளை ஆளும் திமுக-இண்டியா கூட்டணி ஆட்சிக்கும், சட்டவிரோத மதுபான மாஃபியாவுக்கும் இடையே உள்ள ஆழமான தொடர்பு இல்லாமல் இருந்திருந்தால், இன்று 56 உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.
கடந்த ஆண்டு மே மாதம் தமிழகத்தின் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச் சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்தனர். அப்போதே, மாநிலத்தில் உள்ள சட்டவிரோத மதுபான மாஃபியா குறித்து திமுக அரசை பாஜக எச்சரித்தது.
எனினும், அந்த எச்சரிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை. தற்போதைய துயர சம்பவத்திலும், இந்த சட்டவிரோத கள்ளச் சாராய வணிகம் எவ்வாறு தண்டனையின்றி, திறந்த வெளியிலும், பகல் நேரத்திலும், வெளிப்படையாக அரசு மற்றும் காவல்துறையின் அனுசரணையுடன் நடக்கிறது என்பதை ஊடகங்கள் மற்றும் விசாரணை அறிக்கைகள் தெளிவாக்கியுள்ளன.இத்தகைய பேரிடர் நடந்த போது, உடனடியாக மக்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அரசும் காவல்துறையும் பிரச்னைகளில் இருந்து தப்பிப்பதில் மும்முரமாக இருந்தது. அதனால், மேலும் பலர் உயிரிழக்க நேரிட்டுள்ளது. இது அரசு நடத்திய கொலை.
இந்த சம்பவம் குறித்து விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள திமுகவின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். மாநில காவல்துறையோ, சிபிசிஐடி காவல்துறையினரோ நேர்மையான விசாரணை நடத்துமா?கருணாபுரம் பகுதியில் அதிகளவில் தலித் மக்கள் வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர். இவ்வளவு பெரிய பேரழிவு நடந்தபோது, உங்கள் தலைமையிலான காங்கிரஸ் கட்சி இதைப் பற்றி மௌனம் காத்தது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
இந்தியா கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, அரசுக்கு எதிராக குரல் கொடுக்காமல், மக்களையே குறை கூறியுள்ளார்.இத்தருணத்தில், சிபிஐ விசாரணைக்கு செல்லவும், முத்துசாமியை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவும் திமுக-இந்தியக் கூட்டணி தமிழக அரசை நீங்கள் வலியுறுத்த வேண்டும் என்று பாஜகவும் ஒட்டுமொத்த தேசமும் கோருகின்றன.
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி அமைதியை கடைபிடிப்பதை கைவிட்டு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சென்று சந்திக்கவில்லை என்றாலும், இப்பிரச்னை குறித்து குறைந்தபட்சம் குரல் எழுப்பவேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு நடைபெறும் போராட்டத்தில் உங்களையும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறேன்.
மதுபான மாஃபியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அதனை மூடிமறைப்பதில் மாநில அரசு மும்முரமாக இருந்தது. உயிரிழப்புகள் அதிகரிக்க இது வழிவகுத்தது. இவ்வளவு பெரிய பேரழிவு சம்பவம் நடந்தபோதும், உங்கள் தலைமையிலான காங்கிரஸ் கட்சி மவுனம் சாதித்து வருவது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. இந்த நேரத்தில், பாஜகவும், நாடும் திமுக-இண்டியா கூட்டணிக்கு நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோருகிறது. தமிழக அரசு சிபிஐ விசாரணையை ஏற்பதையும், அமைச்சர் முத்துசாமியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில்கள்ளக்குறிச்சி விஷ கள்ளச்சாராயச் சாவுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இன்று மனு அளித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷ கள்ளச்சாராயம் குடித்த 58 பேர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதுடன் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டது.இதனிடையே இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென பல அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில் தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இன்று சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அளித்த மனுவில் .தமிழகம் முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் பெருகியிருக்கும் கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருள்கள் புழக்கத்தை, திமுக அரசு கண்டும் காணாமல் இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திமுக அரசின் இந்த அஜாக்கிரதையால், கள்ளக்குறிச்சியில் 60 உயிர்களை, கள்ளச்சாராயத்துக்குப் பறிகொடுத்துள்ளோம். கள்ளச்சாராய விற்பனையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து சிபிஐ விசாரணை கோரி,
கட்சியின் மூத்த தலைவர்களுடன் இணைந்து, மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு R.N. ரவி அவர்களைச் சந்தித்ததாகவும்.
மேலும், இத்தனை உயிர்கள் பலியான பின்னரும், இதற்குப் பொறுப்பான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முதலமைச்சர் திரு ஸ்டாலின் இருப்பதும், பொதுமக்களிடையே பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. உடனடியாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய முதலமைச்சரை வலியுறுத்த வேண்டும் என்றும், மாண்புமிகு ஆளுநரைக் கேட்டுக் கொண்டோம். என பாஜகவில் மாநிலத் தலைவர் தெரிவித்தார்.
கருத்துகள்