இந்தோனேசிய அதிபர், பிரதமருடன் தொலைபேசி மூலம் உரையாடல், மத்திய பிரதேச முதல்வர், மஹாராஷ்டிரா ஆளுநர் உள்ளிட்டோர் சந்திப்பு
புதிதாக பொறுப்பேற்கவுள்ள இந்தோனேசிய அதிபர், பிரதமருடன் தொலைபேசி மூலம் உரையாடல் – இரு தலைவர்களும் கூட்டாண்மை உத்தி குறித்து விவாதித்தனர்
இந்தோனேசிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரபோவோ சுபியான்டோ, இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரபோவோ சுபியான்டோவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிபராக பொறுப்பேற்கவுள்ள அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். நமது நாகரீக உறவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவிற்கும், இந்தோனேசியாவிற்கும் இடையிலான விரிவான உத்திபூர்வ கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.”மத்தியப் பிரதேச முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு
மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்”.பிரதமருடன் மகாராஷ்டிர ஆளுநர் சந்திப்பு
மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு ரமேஷ் பயஸ் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
மகாராஷ்டிர ஆளுநர் திரு ரமேஷ் பயஸ், பிரதமர் @narendramodi –யைச் சந்தித்தார்.
கருத்துகள்