முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயிருடன் உள்ள நபரை இறந்ததாக அரசு அறிவித்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் உறவினர் வழக்கு

 இலங்கை அகதியிடம் தமிழ்நாடு அதிகாரிகள். 


 நீங்க இறந்துவிட்டீர்கள் உங்களை விடுவிக்க முடியாது என அதிர்ச்சிப் பதில்

நீங்கள் இறந்து விட்டதால், உங்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க முடியாதெனக் கூறி, அரசின் அகதிகள் சிறப்பு முகாமில் உயிருடன் உள்ள இலங்கை அசைலம் விசா  அகதியிடம், தமிழ்நாடு அரசு அலுவலர்கள் கையெழுத்துப் பெற்றது அதிர்ச்சியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் பலவிதமான குற்றவியல் வழக்குகளில் கைதாகி, சிறைத் தண்டனை முடித்த நிலையில் வெளிநாட்டினர், திருச்சிராப்பள்ளி சிறப்பு அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவது வழக்கம்.

தற்போது, இலங்கைத் தமிழர்கள் உட்பட, 140 க்கும் அதிகமானோர், முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதில் இலங்கையைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரும் ஒருவர்.

கிருஷ்ணகுமார் உறவினர்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டுமனக் கூறி, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையத்துக்கு, அவரது உறவினர்  கடிதம் மனுவாக கொடுத்திருந்தார்.

ஆனால், கிருஷ்ணகுமார் இறந்துவிட்டதாக அரசிடமிருந்து பதில் வந்துள்ளது.

அதை ஆட்சேபித்து, கிருஷ்ணகுமாரின் உறவினர் நாகேஸ்வரி சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில்:

மதுரை மாவட்டம் உச்சப்பட்டி அகதிகள் முகாமில், எனது இரு மகள்களுடன் வசித்து வருகிறேன்.

எனது தங்கை மகன் கிருஷ்ண குமார், சட்டவிரோதச் செயல்பாடுகள் காரணமாக, 2015 ஆம் ஆண்டில், இராமநாதபுரம் மாவட்ட கியூ பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணை முடிவில் 

அவர் மீதான குற்றங்களுக்கு, 2018 ஆம் ஆண்டு, இராமநாதபுரம் நீதிமன்றம், அவருக்கு பத்நாண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததை எதிர்த்து, அவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார். விசாரணையில், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை, ஏழாண்டுகளாகக் குறைக்கப்பட்டது.

அவரின் சிறை தண்டனை முடிந்த பின், திருச்சிராப்பள்ளி அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். என் தங்கை மகனை, எங்கள் குடும்பத்தினருடன் நிரந்தரமாக தங்க வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதுகுறித்து, கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதியில், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர், அயலக நலத்துறையின் அலுவலர்களுக்கு கடிதமெழுதினேன். எனது கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை. அதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். எனது கோரிக்கையைப் பரிசீலித்து உரிய முடிவெடுக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. நான்கு வாரங்கள் கடந்த பிறகும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதியில் எனது தங்கை மகனுக்கு, தமிழ்நாடு  அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையத்திடமிருந்து, கடிதம் ஒன்று வந்துள்ளதில், 'மனுதாரர் கிருஷ்ணகுமார் ஏற்கனவே இறந்து விட்டதால், கோரிக்கையைப் பரிசீலிக்க இயலாது' என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் கிருஷ்ணகுமார் குறித்து, எந்த விதமான தகவலையும் உறுதிப்படுத்தாமல், இப்படியொரு தவறான கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து, என் தங்கை மகனை, எங்கள் குடும்பத்துடன் தங்க வைப்பது தொடர்பாக, அரசுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது.

சிறைத் தண்டனை முடிந்து, சிறப்பு அகதிகள் முகாமிற்கு வருபவர்களை, கோரிக்கை அடிப்படையில், உறவினர்களுடன் தங்க அரசு அனுமதிக்கிறது. அந்த வகையில், நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள், தங்கள் உறவினர்களுடன் வசித்து வருகின்றனர். திருச்சிராப்பள்ளி அகதிகள் முகாமிலுள்ள கிருஷ்ணகுமார், தன் சிற்றன்னையுடன் தங்க அரசிடம் உரிய அனுமதி கேட்டார். ஆனால், 'அவர் இறந்துவிட்டார்' எனக் கடிதம் அனுப்பி, அவரிடமே கையெழுத்துப் பெற்றுள்ளனர்.

சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள நபருக்கு தினமும் அரசு, 175 ரூபாயைத் தருகிறது. இறந்து போனவருக்கு எப்படி அரசு பணம் கொடுத்து வந்தது? அது மொத்தத்தில் அலட்சியத்தோடும் கவனக்குறைவு அலுவலர்களின்  செயல்பாடு தான், உயிரோடு இருப்பவரை இறந்து விட்டதாக, அபத்தமான செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு என்ன தண்டனை கொடுக்கப் போகிறது? இதுவும் வாழ்வுரிமைச் சட்டத்தில் குற்றம் தானே

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...