முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்ணை கொலை செய்த வழக்கில் கிளி சொன்ன சாட்சியால் இருவருக்கு ஆயுள் தண்டனை

உத்தரப் பிரதேச பெண்ணை கொலை செய்த வழக்கில் கிளி சொன்ன சாட்சியால் இருவருக்கு ஆயுள் தண்டனை


. உத்தரப் பிரதேசம் ஆக்ரா நகரில் விஜய் சர்மா மனைவி நீலம் சர்மா. 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதியில் கணவர் பிள்ளைகளுடன் வெளியே சென்ற நிலையில், தனியாக இருந்த நீலம் சர்மா கொலை செய்யப்பட்டார். கணவர் திரும்பி வந்து பார்த்த போது கொலை செய்தவர்கள் வீட்டிலிருந்து எந்தப் பொருட்களையும் திருடவில்லை அதுசந்தேகத்தை அதிகப்படுத்திய.நிலையில் விஜய் சர்மா வீட்டில் அவரது மனைவி நீலம் வளர்த்த கிளி, அவர் இறந்த பின் சாப்பிடாமல் அமைதியாக இருந்ததைக் கவனித்த விஜய் சர்மா ஒருவேளை கிளி கொலையாளியை நேரில் பார்த்திருக்கலாமோ என சந்தேகப்பட்டு .கொலை தொடர்பாக தான் சந்தேகப்படும் சில நபர்களின் பெயர்களை கிளியிடம் ஒவ்வொன்றாக கூறியுள்ளார். தன்து மருமகன் பெயரைக் கூறியபோது கிளி ஆவேசமடைந்து ஆசு, ஆசு எனக் கத்தியதாம் இதுகுறித்து விஜய் சர்மா காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார்.

அப்போதும் அந்த கிளி ஆசு பெயரை சொல்லும் போது மட்டும் ஆவேசத்துடன் கத்தியதையடுத்து  காவல் நிலையத்தில் ஆசுவிடம் விசாரணை மேற்கொண்டனர்.அதில் தன் நண்பர் ரோணியுடன் சேர்ந்து நீலம் சர்மாவைக் கொலை செய்ததை குற்றவாளி ஒப்புக்கொண்டார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முகமது ரஷீப், குற்றம் சாட்டப்பட்ட ஆசு, ரோணிக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூபாய். 72 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்திய சாட்சியச் சட்டம், 1872 ன் கீழ் சாட்சிகளுக்கான வகுமுறை விதிகளாக 167 பிரிவுகள் உள்ளன.  செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி 1872 ஆம் வருடம் அமுலுக்கு வந்தது இந்தச் சட்டம். அதன் படி கிளி சாட்சியாக முடியுமா என்பது எழு வினா ?

இருந்தாலும் இந்திய மத நம்பிக்கை படி இறைவன் சிவன் சாட்சி சொன்ன வரலாறு திருவிளையாடல் புராணத்தில் உண்டு அதாவது  கண்ணீர் வடியக் கதறிய ரத்னாவளிக்கு .. “ஈசனே...இது என்ன சோதனை..? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்..? சொல் இறைவா..சொல்....?”

ரத்னாவளி பெரும் குரலெடுத்துக் கதறியழ ...அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல் :

"நாங்கள் சாட்சி.."

குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க....

ஈசன் அங்கே எழுந்தருளி நின்றாராம்..!


“ ஆம்...இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான்.

ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக ,கல்யாணம் நடந்த இடமான திரும்புறம்பயத்திலிருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் ,இந்த மதுரை ஆலயத்தில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் ‌சாட்சியாக இருக்கும்..” என்று சொல்லி மறைந்தாராம் ஈஸ்வரன்...! 

. அப்போது பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம்..!

இப்போதும் , மதுரையில் அருள்மிகு சொக்கநாத சுவாமி சன்னதிக்கு வெளிப் பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில்... 



வன்னி மரம் , கிணறு, சிவலிங்கம் ஆகிய மூன்றும் இருக்கிறது...!

கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் 

“இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை..” 

.'திருவிளையாடல்' படத்தில் வரும் பாடலில் 

“சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன்

திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?”

பாடலின் இடையில் வரும் வரிகள் இவை ...!

இத்தனை வருடங்களாக இந்த பாடல் வரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே....

அது என்ன சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை..? என யாரும் கேள்வி கேட்கவில்லை 

 சிவனின் திருவிளையாடல்களில் அதுவும் ஒன்று.

.காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன் ....அவன் பெயர் அரதன குப்தன் ....மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு , மதுரையிலேயே வாழ்ந்தானாம்.

காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த , அவன் தங்கைக்கும் , தங்கையின் கணவருக்கும் 

தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை.

எதிர்பாராமல் ஒரு நாள் , அரதன குப்தனின் தங்கையும் , அவள் கணவரும் இறந்துவிட்டதாக காவிரிபூம்பட்டினத்திலிருந்து தகவல் வரவே

உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு , திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான் வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே... ஒரு புன்னைவனம் ..

அதில் ஒரு வன்னிமரம் ..அருகில் ஒரு சிவலிங்கம்..

சற்றுத் தள்ளி ஒரு கிணறு...

கட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு ..

அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும்..!

காலையில் கண் விழித்த ரத்னாவளி பதறிப் போனாள்... கதறி அழுதாள் ...

காரணம்...?

அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன்.

நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது.!

தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர் .

நடந்ததை அறிந்து அவர் , ஈசனிடம் முறையிட.

உயிரோடு எழுந்தான் அரதன குப்தன்..

சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர்.... அப்புறம் சொன்னாராம் : “ஈசனுக்கு முன்பாகவே இந்தப் பெண்ணுக்கு ஒரு தாலியைக் கட்டி , 

இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ..”

மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன்..

இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள் .

அங்கே இருந்த ஒரு வன்னிமரமும், கிணறும் , சிவலிங்கமும்தான் ...!

இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள்.

கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி , கொதித்துப் போனாளாம்... ரத்னாவளி நடந்த விஷயங்களை , உள்ளது உள்ளபடியே சொல்ல... அதை கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி..!

வழக்கு சபைக்கு வந்தது...

திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள்...

“மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி..” என்று கூறினாள் ரத்னாவளி...

முதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி : .. “ஓஹோ...அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?” 

கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்....

கூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி அழுதாள் ...தொழுதாள்....!

கண்களில் கண்ணீர் வடிய கதறினாளாம் ரத்னாவளி.... “ஈசனே...இது என்ன சோதனை..? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்..? சொல் இறைவா..சொல்....?”

ரத்னாவளி பெரும் குரல் எடுத்து கதறி அழ ...அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல் :

"நாங்கள் சாட்சி.."

குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க....

ஈசன் அங்கே எழுந்தருளி நின்றாராம்..!

“ ஆம்...இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான்... 

ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக ,கல்யாணம் நடந்த இடமான திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் ,இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் ‌சாட்சியாக இருக்கும்..” என்று சொல்லி மறைந்தாராம் ஈஸ்வரன்...! 

பார்த்தவர் அனைவரும் பரவசமானார்களாம்..!

இப்போதும் , மதுரையில் அருள்மிகு சொக்கநாதர் சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில்.வன்னி மரம் , கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கிறது !

கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை வந்த “சாட்சி நாதர்” என்றும் “ஸ்ரீ சாட்சிநாதசுவாமி” என்ற பெயர் கிடைத்தது திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு...!

கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் இந்த திரும்புறம்பயம் ஸ்ரீ சாட்சிநாதசுவாமி கோவில் இருக்கிறது கல்கியின் 

“பொன்னியின் செல்வன்” நாவலில் திரும்புறம்பயம் பள்ளிப்படைக்கோவில் பற்றி எழுதிய து உண்டு  இருந்தாலும் மன்னர் ஆட்சியில் அது காதை ஆனால் மக்கள் ஆட்சியில் இந்திய சாட்சிகள் சட்டம் கிளியின் சாட்சியை எந்தப் பிரிவின் கீழ் கொண்டு வருகிறார்கள் என்று ஒருவர் கேட்டுள்ளார். அதுசரி கிளி ஜோசியம் சொல்வதை நம்பும் மக்கள் உள்ள நாட்டில் கிளி சாட்சியம் சொல்வதை நம்பித்தான் ஆகவேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு