முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தெலுங்கானாவில் புதிதாக முளைத்த ஒரு போலிச் சாமியார்

மக்களில் பெரும்பாலோரின் வாழ்க்கை முறை துன்பகரமானதாகவே உள்ளது! 


அதை எப்படி எதிர்கொள்வது என்ற பயிற்சியும், பக்குவமும் அடையாதவர்கள் ஏதாவது ஒரு உதவியை எதிர்பார்த்து ஏங்கி வாழ்கிறார்கள். அந்த துன்பத்திற்கான ஆறுதல் அல்லது தீர்வு எங்காவது, யாரிடமாவது தமக்குக் கிடைக்கும் என்ற அவர்களின் தேடுதலில் காண்பவர்களே போலியான சாமியார்கள்!                                                             - விளம்பரம்-
                                        -விளம்பரம்-

அந்தச் சாமியாருக்கு என்ன தகுதி இருக்கிறது என்றோ, குறைந்தபட்சம் இவர் யோக்கியமானவர் தானா என்று கூட அந்த நேரம் அவர்கள் மனம் சிந்திக்காது!  ஒரு குறிப்பிட்ட சாமியாரின் தோற்றமோ அல்லது சூழலோ பிடித்துப் போய்விட்டால், மக்கள் சரணடைந்து விடுகின்றனர். பெரும்பாலோர் அந்த சாமியார் தனக்கெனவே இறைவனால் அனுப்பட்டவர் என நினைக்கத் துவங்கி விடுகின்றனர். பிறரை நம்ப வைத்து வஞ்சிக்கின்ற – பிறர் துன்பத்தை மேலும் பல மடங்கு அதிகரிக்கச் செய்கிற – போலி ஆன்மீகவாதிகளுக்கு ஈடாக வேறு தீயவர் இந்த உலகில் இல்லை” என்கிறார் திருவள்ளுவர்.மறுபடியும் உறுதிபடச் சொல்வது யாதெனில், எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள், சமரசமற்ற நீதியை நிலை நாட்ட விரும்பும் நேர்மையான ஆட்சியாளர்கள் ஆட்சி செய்தால் போலிச் சாமியார்களை மக்கள் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் குறைந்து விடும்.  நாளுக்கு நாள் பல மோசடி சாமியார்கள் எண்ணிக்கை அதிகரித்து புதிது புதிதாய் நாடக வேடதாரிகளாக உலா வருகிறார்கள். திருவண்ணாமலை நித்யானந்தா மற்றும் நாட்டரசன்கோட்டை அண்ணபூரனி


போல இப்போது செஞ்சி சந்தோஷ்குமார் இவர்கள் தங்களைக் கடவுள் அவதாரம் என மனநலம் பாதித்த நிலையில் கூறுவதை சில சிந்தனைகள் இல்லாமல் வாழும் மூடர் மக்கள் கூடாரம் நம்புகின்றனர் இதுவே இந்தப் போலிகள் உருவாக மூலதனமாக மாறுகிறது. நான்தான் விஷ்ணு அவதாரம் என இரண்டு மனைவிகளுடன் மஹாவிஷ்ணு வேடம் தரித்துப் பாம்புப் படுக்கையில் ஒரு புதிய சாமியார் தற்போது விசாரணை வளையத்தில் உள்ளார். இந்த தமிழ்நாட்டுச் சாமியாருக்கு மனைவிகள் இருவரும் கால்களை அழுத்திப் பிடித்து விட்ட நிலையில், நவரசமும் முகத்தில் நர்த்தன மாட, 5 தலை போலி பிளாஸ்டிக் பாம்புப் படுக்கையில், பள்ளி கொண்டிருப்பவர்தான் கலியுக மகா விஷ்ணுவாக தன்னைக் கூறிக்கொள்ளும் போலிச் சாமியார் செஞ்சி சந்தோஷ்குமார். திருவண்ணாமலை மாவட்டம்  செஞ்சி இவருக்கு சொந்த ஊர் என்றாலும் உள்ளூரில் இவரது புளுகு மூட்டை  பலிக்காது என அறிந்து தெலங்கானா மாநிலம் சென்று கோல்மால் வேலையை அரங்கேற்றியுள்ளார். இந்த திடீர் சாமியார்                                                             - விளம்பரம்-
                                               - விளம்பரம்- 
செஞ்சி சந்தோஷ்குமாருக்கு இரண்டு மனைவிகளும் ஒரு மகனும் உள்ளனர். செஞ்சி சந்தோஷ்குமாரின் மகன் ஓராண்டுக்கு முன் தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தில் உள்ள சுகுரு கிராமத்திலுள்ள ஒரு கோவிலில் அர்ச்சகராக வேலை செய்து வந்தார். அதுவரை செஞ்சியில் தங்கியிருந்த சந்தோஷ்குமார் நான் தான் கடவுள். நான்தான் மஹாவிஷ்ணுவின் மறு அவதாரம் என தொண்டைகிழியக் கத்தியும் யாரும் கண்டு கொள்ளாததால் தனது இருப்பிடத்தை தெலங்கானாவிற்கு மாற்றிக் கொண்டார். அங்கு தான் இந்த ஜேயமே லயம் சாமியாருக்கு அடித்தது யோகம், வெளியூரிலிருந்து திடீரென முளைத்த சாமியாரை வித்தியாசமாகவே பார்க்க ஆரம்பித்தனர் தெலங்கானா மாநில மக்கள். சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த செஞ்சி சந்தோஷ்குமார், அதே பார்முலா. அதே புளுகு மூட்டை. அதே மகாவிஷ்ணு அவதாரக் கதை என சில மாதங்களில் கல்லா கட்ட ஆரம்பித்தார். மக்களை காக்க வந்த மகாவிஷ்ணு.  மனித உருவில் வந்த கடவுள். தனது மனைவிகளே ஸ்ரீதேவி, பூதேவி என என தன்னை சந்திக்க வருபவர்களிடம் எல்லாம் நா கூசாமல் பொய் கூறி வந்துள்ளார். ஒரு தலை பாம்பே உயிருக்கு பாதிப்பு எனப்படும் நிலையில், எதிர்காலத்தில் ஐந்து தலை பாம்பு தனது படுக்கையாக இருக்கும் என கூடுதலாக சில நங்கூரங்களையும் நச்சென்று பொய்களுக்கு நடுவே போட்டு பொய் கப்பலை நிறுத்தி வைத்தார் சாமியார் செஞ்சி சந்தோஷ்குமார். டிஸ்கவரி சேனலிலேயே 5 தலை நாகத்தை இதுவரை யாரும் பார்க்க முடியாத நிலையில், தற்காலிகமாக ஐந்து தலைகளைக் கொண்ட பாம்பு போன்று கட்டில் அமைத்து அதில் படுத்து கொண்டு, பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வந்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் போன்று வேடமணிந்து இரு மனைவிகளும் கால் அமுக்கி விட்ட புகைப்படங்கள் எடுத்து சுற்று வட்டாரத்தில் பிரச்சாரத்தையும் முடுக்கி விட்டுள்ளார்.  இவரது “ஜில் ஜங் ஜக்” வேலைகளைப் பார்த்து ஏமாந்து போன தெலங்கான மாநிலம் உமித்யாலா கிராமத் தலைவர் சத்யநாராயணா தனது விவசாய நிலத்திலுள்ள ஒரு வீட்டை தானமாகவே கொடுத்துள்ளார். அங்கிருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி தனது உடலுக்குள் இருப்பதாகக் கூறி தனது சித்து வேலைகளைக் காட்டத் துவங்கினார் செஞ்சி சந்தோஷ்குமார். தீர்க்க முடியாத நோய்கள் எல்லாம் தன் பார்வை பட்டால் பஸ்பமாகி விடும் என்று மருத்துவ உலகிற்கு சாவல் விடுக்கும் உறுதி மொழிகளை யெல்லாம் வாய்க்கு வந்தபடி அள்ளி விட்டுள்ளார். இதனை அறிந்த சுற்றுவட்டார மக்கள் அவரை நேரில் சந்தித்து தரிசித்து தங்களது குறைகளை தெரிவிக்க ஆரம்பித்தனர். திடீர் சாமியார் நோய்களை தீர்த்து வைப்பதாக செய்தி பரவ “டாக் ஆப் தி டவுனாக” மாறிப் போனார் செஞ்சி சந்தோஷ்.குமார் சுவாமியின் மகிமையால் ஊமைகள் பேசவும், நடக்க முடியாதவர்கள் நடக்கவும் முடிந்தது என்று அப்பகுதி மக்களும் கண்கட்டி வித்தை போல நம்ப ஆரம்பித்து விட்டனர்.

அதனால், செஞ்சி சந்தோஷ்குமார் சுவாமியை சந்திக்க ஏராளமான பக்தர்கள் பஸ் பிடித்து வந்து வரிசைகட்டி நின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை அறிந்த கொடிதொட்டி காவல்துறையினர் செஞ்சி சந்தோஷ்குமார் சுவாமியை அங்கிருந்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நான் கடவுளின் அடியார் என்ற நிலை மாறி நான்தான் கடவுள் என்று கதை அளக்கும் சாமியார்களிடம் பக்தர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...