முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் படுகொலையான வழக்கில் கைதான ஹரிதரன் , அஞ்சலை சிறையிலடைத்தனர்

ஆம்ஸ்ட்ராங் பழிக்கு பழியாக படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அ.தி.மு.க., கவுன்சிலர் ஹரிதரன்

என்பவர் அக் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, அறிவித்துள்ளார். இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் பிரதிநிதியாக இருந்து வருகிறார். இவ்வழக்கில் தொடர்புடையவராக ஹரிதரன் திருவள்ளூரில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஹரிதரன் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான வக்கீல் அருள் என்பவரின் செல்போன் ஹரிதரனிடமிருந்ததன் பேரில் காவல் துறையினர் ஹரிதரனைக் கைது செய்தனர். பாரதிய ஜனதா கட்சியின் நீக்கம் செய்த முன்னாள் நிர்வாகியான அஞ்சலையை தனிப்படைக் காவல்துறையினர் கைது செய்ததைத். தொடர்ந்து புளியந்தோப்பு பகுதியிலுள்ள அவரது வீட்டை சோதனையிட்டனர் அங்கிருந்த செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். பென்டிரைவ் மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம், லேப்டாப் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளையும்  பறிமுதல் செய்துள்ளனர்.

ஏற்கனவே கைதான ஹரிதரன் கொடுத்த தகவலின் பேரில் கொலைக்குப் பயன்படுத்திய செல்போன்கள் வெங்கத்துார் கூவம் ஆற்றிலிருந்து காவல்துறை மீட்டனர்

ஸ்கூபா டைவிங் வீரர்களின் உதவியுடன் கூவத்தில் அந்த செல்போன்களை மீட்கும் முயற்சியை காவல்துறையினர் தொடங்கினர். நேற்று முழுக்க இந்த பணிகள் நடந்தது, சேதப்படுத்தி வீசப்பட்ட 5 செல்போன் பாகங்களையும் ஸ்கூபா டைவிங் வீரர்கள் கைப்பற்றினர். பின்னர் ஹரிதரனை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்' பழிக்கு பழியாக படு கொலையான பின்னர் நடைபெறும் பல சம்பவங்கள்,

காவல் துறையின் நடவடிக்கைகள்,  கைதுகள், அதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் செய்திகள் அனைத்தும், இத்தனை காலம் சென்னை மாநகரம் ரௌடிகளின் ராஜ்யத்தில் எவ்வாறு இருந்து வந்தது என்பதை தெள்ளத்  தெளிவாக்குகிறது. அரசியல் போர்வையில், அரசியல்வாதிகளின் பின்னணியில் இந்த இராஜாங்கம் எனும் அராஜகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கட்டப்பஞ்சாயத்து க்களும்,  நில அபகரிப்புகளும், மோசடிகள்,  ஆள் கடத்தல்காரர்கள்,  போதை பொருட்களும்,  கந்து வட்டி,  மீட்டர் வட்டி என வசூல் உள்ளிட்ட அனைத்து விதமான சட்ட விரோதச் செயல்களும் சமூக விரோதிகளால், அர‌சிய‌ல் கட்சிகளின் பாதுகாப்போடு செயல்படுத்தப்பட்டு வருவது சர்வ சாதாரணமாகி விட்டது.

ஆனால் இதுவரை அது காவல்துறை அறியாமல் நடந்ததா? என்பதே எழுவினா. அரசியலை கேடயமாக பயன்படுத்தி சமூக விரோத தீய சக்திகள் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றன ஜாதியின் பெயரில் 

சில அரசியல் தலைவர்களின்  பகட்டுக்காக , விளம்பரத்திற்காக, புகழுக்காக வைக்கப்படும் கட்- அவுட்டுகள், பேனர்கள்,  பத்திரிகை விளம்பரங்கள் ஆகியவற்றுக்கான ஆடம்பர அரசியல் செலவுகளை உழைத்து சம்பாதிக்கும் எந்த ஒரு நிர்வாகியாலும், தொண்டனாலும் ஏற்க முடியாத சூழ்நிலையை,  சட்ட விரோதமாக பணமீட்டும் தீய சக்திகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்றன. அவர்களை ஊக்குவிப்பது அரசியல்வாதிகள் தான்.  எங்கும் அரசியல்,  எதிலும் அரசியல் எனும் நிலையில் 

அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆணைக்கு அடிபணியாமல் காவல்துறை செயல்பட முடியாது என்பது மறைக்க, மறுக்க முடியாத உண்மை. கட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் கைகள், குற்றவாளிகளின் கைகளில் விலங்கு மாட்ட முடியாததில் வியப்பேதும் இல்லை.  


காரணம் இவ்வளவு காலமும் நடந்த நிகழ்வுகள் காவல்துறையினர் உளவுத்துறை அறியவில்லையா? அறிந்தும் நடவடிக்கைகள் எடுக்க வில்லையா ? என்பதே  இந்தநிலை மாற வேண்டும்.  இது அர‌சிய‌ல் மாற்றத்தால் நிகழாது.  ஒரு நாளில் இம் மாற்றம் நிகழ வாய்ப்பில்லை.  ஒருவரால் மட்டும் மாற்றம் நிகழ்ந்து விடாது. தேவை சமூக மாற்றம். இம் மாற்றத்திற்கு பெரும் விலையை கொடுக்க வேண்டி வரும். கொடுக்க வேண்டும்.  இல்லையேல்,  அடுத்த தலைமுறை வன்முறையின் கோரப்பிடியில், சமூக சீர்கேட்டின் அவலத்தில் சிக்கித் தவிக்கும்.  நிலை வந்துவிடும். இதை தடுக்க ஊழல் இல்லாத அலுவலர்கள் தான் தேவை

ரௌடிகள், சமூக  விரோதிகள், குற்றவாளிகள், குற்றப்பின்னணி கொண்டவர்கள்,  மோசடிப் பேர்வழிகள், என ஒரு பெரும்  பட்டியலை சேர்ந்தவர்கள் அரசியல் கட்சிகளின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களை அகற்றுவது எளிதல்ல என்றாலும், நேர்மையானவர்கள் முயன்றால் முடியக் கூடியதே.  ஆனால் அவர்களை நெருங்குவதில்லை, 

"தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில். குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் தொடர்ந்து இணைந்து வருவதாககா கூறி, அவர்களின் பட்டியலையும்  வெளியிட்டிருந்ததில் அஞ்சலை பற்றியும் தி க தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டிருந்தார்.


"பல கொலை வழக்குகளில் சிக்கியவர்களும், கேடிகளும் பாஜகவில் சேர்வது ஓர் ஆபத்தான போக்காகும்.. வடசென்னை கஞ்சா வியாபாரியாக வலம் வந்த புளியந்தோப்பு அஞ்சலைக்கும் பாஜக அடைக்கலம் கொடுத்தது. அவர் வடசென்னை மாவட்ட பாஜக மகளிர் அணிச் செயலாளராகி விட்டார். புளியந்தோப்பு அஞ்சலை மீது கொலை உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையிலுள்ளன. ரௌடிகள்: மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடிய பா.ஜ.க.வில் கொலைகாரர்களும், ரவுடிகளும் சேர்வது எந்த நோக்கத்தில் என்பது எளிதாகப் புரிந்துகொள்ளத்தக்கதே.. தார்மீகம் பேசும் பாஜகவின் தரம் எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் மிகமிக முக்கியமான எடுத்துக்காட்டுகளேயாகும்.கொலைகாரர்களையும், ரௌடிகளையும், வன்முறையாளர்களையும் கட்சியில் சேர்த்துக்கொள்ளும் கட்சியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் நிலை என்ன? நினைக்கவே பதறும் நிலைதான். எல்லா வகைகளிலும் பா.ஜ.க. ஆட்சியில் நீடிப்பது நாட்டுக்கான பெருந்தீங்காகும்" என்று திகவின் தலைவர் கி.வீரமணி தெரிவித்திருந்தது பலரது கவனத்தையும் தற்போது திரும்பி பார்க்க வைத்தது. அஞ்சலை மீது ஏற்கனவே ஆள் கடத்தல், கஞ்சா விற்பனை, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் இருக்கிறது. கடந்த காலம்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் கொஞ்சம் அடங்கியிருந்திருக்கிறார் அஞ்சலை. ஆனால், செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இவரது ஆட்டம் அதிகரித்து விட்டதாம். இதையெல்லாம் அஞ்சலையிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலமாகவே காவல்துறை அறிந்து கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல, க்ரைம் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு வேண்டித்தான் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்ததாகவும், ஆரம்பத்தில் பாரதிய ஜனதா கட்சியின் எல்.முருகனின் ஆதரவாளராக இருந்ததாகவும், அதன்பிறகு, பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவரான  கரு.நாகராஜனின் ஆதரவாளராக மாறியதையும், மகளிர் அணியிலிருந்த தனக்கு கரு.நாகராஜன் தான் வடசென்னை மாவட்டத் துணைத் தலைவர் பதவியை வாங்கிக்கொடுத்ததாகவும் காவல்துறையிடம் சொன்னாராம் அஞ்சலை. அதேபோல, பாரதிய ஜனதா கட்சியில் உள்ள ரௌடிகள் பலரைப் பற்றியும் விலாவரியாக விவரித்துள்ளாராம் அஞ்சலை. தற்போது பாரதிய ஜனதா கட்சியிலிருந்து அஞ்சலை நீக்கப்பட்டுவிட்ட நிலையில், அஞ்சலை தந்துள்ள வாக்குமூலமானது, பாஜகவினர் பலருக்கும் சிக்கலை ஏற்படுத்தலாம் என்று விபரம் அறிந்தவர்கள் கூறுகிறார்களாம். பொறுத்திருந்து பார்ப்போம். ஆம்ஸ்டிராங் வழக்கறிஞர் என கிருஷ்ணமூர்த்தி எனும் ஒருவர் ஊடகங்களில் தோன்றி தற்போது பேசி வருகிறார். அந்த முகம் வேறு எங்கோ கண்டதாக  நினைவு. 

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் படு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியான ராம்குமாருக்காக அவரது தரப்பின் அனுமதியில்லாமல் பிணை மனு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அதே கிருஷ்ணமூர்த்தி. 

என்னமோ நடக்கிறது…. அதிகாரச் சதி வாயிற்காவலர்களின் வட மாவட்ட அதிகாரம் யார் கைப்பற்றுவது என்று போட்டி எண்ணத்தில் 

எதோ நடக்கிறது. என்பது மட்டும் புரிகிறது. சென்னையில் தற்போது வாழத் தகுதியற்ற நகரமாக மாறி வருவது என்னவோ உண்மை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...