ரூபாய்.718 கோடிக்கு போலியான பில்களுக்கு தயாரித்த பின் ஒப்புதல்; ஜி.எஸ்.டி., அலுவலர் கைது
ரூ.718 கோடி மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி., செலுத்தும் நிறுவனங்கள், அதற்கான கொள்முதல் செய்த பில்களைச் சமர்ப்பித்து, உள்ளீட்டு வரியை திரும்பப் பெறலாம் என்ற நிலையில் இந்த ஆவணங்களை சில நிறுவனங்கள் போலியாக தயாரித்து, ஜி.எஸ்.டி., மோசடியில் ஈடுபடுட்டு சிக்குவது தொடர்ச்சியாக உள்ளது டில்லியைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் மூன்று பேர், போலி நிறுவனங்கள் மூலம் பில்களைத் தயாரித்து, 54 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி.,யை திரும்பப் பெற்றுள்ளனர் இந்த மோசடியில் அவர்களுக்கு துணையாக இருந்த ஜி.எஸ்.டி., அலுவலர் உதவியுள்ளார். இந்த விவகாரத்தை டில்லி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்டுபிடித்தனர்.
மருத்துவ சாதனங்கள் இறக்குமதி, ஏற்றுமதி செய்ததாகவும் அப்படியே பல்வேறு போலி நிறுவனங்கள், டில்லியைச் சேர்ந்த ராஜ் சிங் சைனி, நரேந்திர குமார் சைனி மற்றும் முகேஷ் சோனி ஆகியோரால் துவங்கப்பட்டுள்ளன. இதற்கான திட்டத்தை டில்லி ஜி.எஸ்.டி., அலுவலர் பபிதா சர்மா வகுத்துத் கொடுத்துள்ளார். போலி நிறுவனங்களின் பெயரில் கொள்முதல் பில்கள் தயாரிக்கப்பட்டு, அவர்கள் அதை பபிதா சர்மாவுக்கு அனுப்பினர், அவர் அதற்கு ஒப்புதல் தந்துள்ளார்.
இப்படியே கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை பல கோடி ரூபாயை திரும்பப் பெற்றுள்ளனர். இதன்பின், பபிதா சர்மா வேறு பணிக்கும் வேறு பகுதிக்கும் மாற்றப்பட்டார். அப்போது, 50 நிறுவனங்கள் பபிதா சர்மாவின் பகுதிக்கு தங்களின் கணக்குகளை மாற்றக் கோரின. அந்த கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட்டது.
அதை அறிந்த ஜி.எஸ்.டி., கண்காணிப்பு உயர் அதிகாரிகள், அந்த 50 நிறுவனங்களில் சோதனையிட உத்தரவிட்டனர். அப்போது தான் அவை அனைத்தும் போலியான நிறுவனங்கள் என்பதும், இந்த மோசடியில் ஜி.எஸ்.டி., அலுவலர் பபிதா சர்மாவே ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.
இந்த வழக்கு டில்லி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி பபிதா சர்மா, போலியான நிறுவனங்கள் உருவாக்கிய மூன்று வழக்குரைஞர்கள், அவர்களுக்கு இ -- வே பில்களை வழங்கிய டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என பலரையும் நேற்று கைது செய்தனர்.
கருத்துகள்