சென்னை உயர்நீதிமன்றத்தின் (பொறுப்பு) தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அந்த பதவி காலியானதையடுத்து மும்பை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை நியமிக்க கொலீஜியம் அளித்த பரிந்துரைப்படி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக
ஸ்ரீராமை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி உத்தரவை பிறப்பித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் வெள்ளிக்கிழமை செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு பதவியேற்கிறார். அவருக்கு தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், சபாநாயகர் அப்பாவு, மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிகிறது. பதவியேற்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் சென்னை கிண்டியிலுள்ள ராஜ்பவனில் செய்யப்படுகிறது.
கருத்துகள்