ரெட்ஃபிக்ஸ் யூடியூப் வெளியீட்டாளர் பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு
யூடியூப்பர் சவுக்கு சங்கர் அவதூறு பேட்டியை ஒளி ஒலிக் காட்சி மூலம் வெளியிட்ட Red Pix 24x7 யூடியூப் சேனல் வெளியீட்டாளர்
ஜாமீனில் உள்ள பெலிக்ஸ் ஜெரால்டு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் (கிரிமினல்) மனு W.P.(CRL)3395/2024 அவரது வழக்கறிஞர் சூரிய பிரகாஷ் மூலம் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், " என்னுடைய வழக்கு தொடர்பாக பிரஸ் கவுன்சில் தலைவரை மே மாதம் 11- ஆம் தேதி சந்திக்கத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் தமிழ்நாடு காவல்துறை எனக் கூறிக்கொண்டு சிலர் மே மாதம் 10- ஆம் தேதி என்னைக் கைது செய்தனர். ஆனால் தமிழ்நாடு காவல்துறை என்னை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், 66 மணி நேரம் சட்டவிரோதமாக வைத்திருந்து,
என்னை திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதற்கு இழப்பீடாக ரூபாய்.1 கோடி அளிக்க தமிழ்நாடு காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்’ என பெலிக் ஜெரால்டு அந்த மனுவில் கூறி INDIAN PENAL CODE: 294(B) ன் படி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமார் ஓரி விசாரித்து, மனுதாரரருக்கு கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் அளித்து விசாரணையை டிசம்பர் மாதம் 16-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
கருத்துகள்