முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரண்டு பிரபல நபர்களின் வீட்டுத் திருமணங்கள் பேசு பொருளாகக் காரணமென்ன ! ?

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீட்டுத் திருமணத்தை சமூக ஊடகங்களில் ஏகடியம் மற்றும் ஏகத்துவம் பேசும் நபர்களுக்கு.



ஒரு உண்மை புரியவில்லை பொதுவாக வெளியில் தமிழ் பேசினாலும் வீட்டில் தாய்மொழி தெலுங்கு பேசும் நாயக்கர்கள் அதன் உட்பிரிவு கம்மவர்கள் ஹிந்து மதத்தில் ஸ்ரீ வைணவ சாம்பிரதாயத்தைப் பின்பற்றுவர்கள்.அதனால பிராமணர்களான அய்யங்கார், வைணவப் பட்டாச்சாரியார்களை வைத்துத் தான் குல வழக்கப்படி


நேரம், காலம், நல்ல சுப முகூர்த்தம் பார்த்துத் தான் திருமணம் செய்வார்கள். அது தான் அவர்கள் சார்ந்துள்ள சமூக மரபு. திருமணப் பத்திரிகை கூட மிக சாதாரண அழைப்பிதழ் அதுவும் மஞ்சள் நிறத்தில் அழைப்பிதழ் அடித்து, ஸ்ரீ ஆண்டாள் இயற்றிய வாரணமாயிரம் பாடலான மத்தளம் கொட்ட என்று தொடங்கும் வாரணமாயிரம் பாடலை பத்திரிகை துடக்கத்தில்


சைவ மதம் பின்பற்றும் நபர்கள் துவங்கும் போது உ சிவமயம் போடுவது போலவே இருக்கும். இது தான் நாயக்கர்களில் கம்மவார் சமூகத்தின் பாரம்பரியத் திருமண முறை. இதில் வைணவப் பிராமணப் பெரியவர்கள் நடத்தினால்,  சில முற்போக்கு வாதிகள் எனக் கூறி வாழும் பிற்போக்கு வாதிகள் கிண்டலும் கேலியும் பேசுவது ஏற்கத்தக்கதல்ல. வைகோ சுமார் 50 ஆண்டு கால சமூக அரசியல் தொடர்பு உடையவர்கள். அவரோடு பல காலம் சேர்ந்து பயணித்த திமுக மற்றும் மதிமுக வினர் உண்டு. இருந்தாலும் சமூகம் சார்ந்த மரபுகளைக் கேலியும் கிண்டலும் செய்வது ஏற்றுகொள்ள முடியவில்லை. எதுவும் மரபுகள் சாராமல் வாழும் சிலர் இது குறித்து கேலி செய்து வருவது ஏற்புடையதல்ல, ஒவ்வொரு நபருக்கும் அவர்களுக்கு என தனி குடும்பப் பொறுப்பு உண்டு என்பதை கிண்டல் செய்யும் நபர்கள் அறிய வேண்டிய ஒன்று. சாமி இல்லை. கடவுள் இல்லை என்பது அவர்களின் சுய  விருப்பம். ஆனால் அடுத்த நபர்கள் சார்ந்த மரபு, மதம், பண்பாடு, கலாச்சாரம் என்பது அவரவர் தனி உரிமை. அதைக் கேலியும், கிண்டலும் செய்வது  ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நாகரிக உலகில் காட்டுமிராண்டிகளைப் போல நடந்து கொண்டு தனி மனித உரிமை விஷயத்தில் தலையிடும் நபர்களின் விமர்சனங்கள் முற்றிலும் புறம்தள்ள வேண்டிய ஒன்றாகும். தமிழகத்தில் தற்போது மக்களின் மனங்களில் நஞ்சு கலக்கும் முயற்சியை முளையிலே கிள்ளி எறியவேண்டும். இல்லையேல் மரபு மற்றும் தேச நலனுக்கு எதிராக கொண்டு போய்விட்டு விடும் நிலை எதிர்காலத்தில் ஏற்படுத்துவார்கள் என்று ஐயம் அடைகிறேன். நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள். என்பதே பொது நீதி அடுத்த நபர்கள் உள் விவகாரங்களில் தலையிட்டு சில ஊடகங்களும் மற்றும் சமூக ஊடகங்களும்  விஷமம் கக்குவது. நல்லதல்ல.


என்பதோடு மற்றும் நடிகர் முன்னாள் அமைச்சர் நெப்போலியன் மூத்த மகன் மாற்றுத்திறனாளியான தனுஷின் திருமணம் ஜப்பானில்  நடைபெறுகிறது. திருமணத்திற்கு பல திரையுலகப் பிரபலங்கள் ஜப்பானுக்கு சென்றுள்ளார்கள். திருமணம் குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிறது. மூத்த மகன் தனுஷ்க்கு திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியை சார்ந்த ஒரு பெண்ணோடு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது பின்னர் திருமணம் ஜப்பான் நாட்டில் நடக்கிறது, நடிகர் நெப்போலியன் அமைச்சர் கே என் நேருவின் நெருங்கிய உறவினர், முன்னாள் மத்திய இணை அமைச்சர். அதன் பின்னர் அரசியலில் ஓய்வு பெற்று மகன் காரணமாக வெளிநாட்டில் வசித்து வரும் காரணம் வேறு எனக் கூறப்படும் நிலையில் அவர் இந்திய நாட்டின் பழைய நண்பர்கள் அனைவரையும் திருமண விழாவுக்கு அழைத்துள்ளார்





அதில் கலந்து கொள்வதற்காக அவருடன் 21 வயது முதல் பழகிய நடிகர் இயக்குநர் பாண்டியராஜன், நடிகை குஷ்பூ, நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா, நடிகை மீனா, கலா நடன இயக்குனர்  போன்ற பிரபலங்கள் ஜப்பானுக்கு இரண்டு நாட்கள் முன்பே வந்துவிட்டனர்.



அதுபோல இன்னும் அதிகமான பிரபலங்கள் வருவார்கள் என்றும் தெரிகிறது. திருமணத்தையொட்டிய நிகழ்வுகள் இரண்டு நாட்கள் முன்பே தொடங்கி விட்டது. திருமணம் முடிந்து மூன்று நாட்களுக்கு அங்கு விழா நடைபெறுகிறதாம். அதற்குப் பிறகு மொத்த குடும்பத்தினரும் நண்பர்களும் சிங்கப்பூர் உட்பட சில நாடுகளைச் சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் ஜப்பானுக்கு வந்து அங்கிருந்து தான் அமெரிக்காவிற்கு மீண்டும் கப்பல் வழியாகச் செல்ல இருக்கிறார்களாம். 


 இவரும் தெலுங்கு தாய் மொழி பேசும் ரெட்டியார் சமூகம் சார்ந்த தமிழ்நாடு சார்ந்த நபர், தற்போது அயல் நாட்டில் வசித்தாலும் பல விழாக்கள் பழைய நண்பர்கள் என நினைவில் இருக்கும் காரணம் இவர் சில முக்கிய பிரமுகர்களின் பினாமி என பலரும் பேசும் நிலை உள்ளது.

அமெரிக்காவில் வாழ்ந்தால் தான் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மகனைப் பாதுகாக்க முடியும் என்பது ஒரு காரணம், இந்தியாவில் இருந்தாலும் உயர் மருத்துவம் உண்டு.ஆக இந்த இரண்டு பிரபல அரசியல் வாதிகள் வீட்டுத் திருமண நிகழ்வு பேசும் காரணம் அவர்கள் சார்ந்துள்ள அரசியல் நிலைப்பாடும் அவர்கள் சார்ந்துள்ள சமூக நிலைப்பாடும் இரு வேறுபட்ட நிலையில் உள்ளது தான் காரணமாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...