சுவாமி ஆத்மாநந்தா மஹாராஜ் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை எதிர் நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற அமர்வு
தமிழ்நாட்டில் நான்கு சைவ மடங்களின் சொத்துகளான
திருவாரூர் ஸ்ரீ சோமநாத சுவாமி மடம் மற்றும் ஸ்ரீ அருணாசல ஞானதேசிகர் சுவாமி மடம் மற்றும் ஸ்ரீ பொ.கா மடம், வேதாரண்யத்தில் உள்ள சாதுக்கள் மடம் ஆகிய சொத்துக்களுக்கு உரிமை கோரி 2017 ஆம் ஆண்டு நித்தியானந்தா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார் அதில் நிர்வகிக்க நிர்வாக அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையத் துறையின் (HR&CE) முடிவை எதிர்த்து கர்நாடகாவின் பிடதி ஆஸ்ரமம் பிடாதியைச் சேர்ந்த ஈக்வைடா தீவான கைலாஷத்திற்கு பறந்து போன நித்யானந்தா தாக்கல் செய்த ரிட் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 31, 2025) ல் தள்ளுபடி செய்தது.
சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் ஆர். சுப்ரமணியன் மற்றும் சி. குமரப்பன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், நீதிபதி எம். தண்டபாணி செப்டம்பர் மாதம் 4, 2024 ஆம் தேதியன்று வழங்கிய உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏற்க மறுத்தது. அதாவது தனி நீதிபதி நித்யானந்தாவின் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு எதிரான ரிட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது தற்போது சவால் செய்யப்பட்டது
திருவாரூரிலுள்ள ஸ்ரீ சோமநாத சுவாமி மடம் மற்றும் ஸ்ரீ அருணாசல ஞானதேசிகர் சுவாமி மடம் மற்றும் ஸ்ரீ பொ.கா மடம், வேதாரண்யத்தில் உள்ள சாதுக்கள் மடம்ஆகிய சொத்துக்களுக்கு உரிமை கோரி 2017 ஆம் ஆண்டு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ததாக அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் இந்து சமய அறநிலையத் துறை சார்ந்த NRR அருண் நடராஜன் நீதிமன்றத்தின் அமர்வில் தெரிவித்தார். அவரது வாதத்தில், 2014 ஆம் ஆண்டில் அந்த சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையை
திருப்பராய்துறை ஸ்ரீ இராமகிருஷ்ணன தபோவனம் சுவாமி சித்பவாநந்தரின் சீடரும் கரூர் மற்றும் அமராவதிபுதூர் பகுதியில் சாரதா கல்லூரி ஸ்தாபகர் நமது அளவற்ற அன்பின் அடையாளம் இறைவனடி சேர்ந்த சுவாமிஜி ஆத்மானந்தா மஹராஜ் வழங்கியதாகவே அவர் கூறினார். ஆனால் சுவாமி ஆத்மாநந்தா மஹாராஜ் ஜி அவர்களை ஏமாற்றி கைப்பற்ற முயன்று தோல்வியுற்றதை அந்த ஊர் அறிந்த நிலையில் இருப்பினும், பின்னர், அவர்களுக்கு இடையே தகராறுகள் எழுந்தன, மேலும் சுவாமி ஆத்மாநந்தா மஹாராஜ் மேல்முறையீட்டாளர் மீது பல விதமான புகார்களை அளித்தார்.
வழக்குகள் மூலம் சிவில் நீதிமன்றத்துக்கும் இந்தப் பிரச்னை கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில், மடங்களின் பக்தர்கள் அளித்த கருத்துகளின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜூன் மாதம் 22 ஆம் தேதி, 2017 ஆம் ஆண்டுவ் மூன்று மடங்களுக்கும் செயல் அலுவலர்களை நியமிப்பதற்கான உத்தரவுகளை வழங்கினார். இந்து சமய அறநிலையத் துறை
ஆணையரின் உத்தரவுக்கு எதிரான நித்யானந்தாவின் ரிட் மனுவை நிராகரித்த நீதிபதி, சுவாமி ஆத்மானந்தா மஹாராஜ் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் மூன்று மடங்களின் சொத்துக்களை நிர்வகிக்க நித்யானந்தா உரிமை கோர முடியுமா என்றும் சந்தேகித்தார்.
மேலும், மனுதாரர் (நித்யானந்தா) தோன்றா தரப்பினர் என்பதால் எங்கிருக்கிறார் உயிருடன் உள்ளாரா என்பது எழு வினாவாக ஆனது இந்த நிலையில் இப்போது தெரியவில்லை, எனவே, அவர் தனது பிரதிநிதிக்கு அளிக்கப்பட்ட பொது அதிகார ஆவணங்கள் ங்கள் சந்தேகத்திற்குரியது," என நீதிபதி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவில் தலையிட மறுத்துவிட்டார். அதன் பிறகு உயர்நீதிமன்ற அமர்வின் தள்ளுபடி ஆனது.
கருத்துகள்