மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நேற்று
சனிக்கிழமை தாக்கல் செய்த நிலையில் இணையவாசிகள் பட்ஜெட் குறித்து மீம்ஸ்கள் வெளியிட்டு சமூகவலைதளத்தை கலக்கினர்.பட்ஜெட் உரையின் துடக்கத்தில் நிர்மலா சீதாராமன் அனைத்துப் பகுதிகளுக்கான சீரான வளர்ச்சியின் மூலம் அனைவருக்குமான வளர்ச்சி என்ற இலக்கை மத்திய அரசு அடையும் என்றார். பல மாற்றங்களுக்கிடையில், அவர் தேர்தல் நடைபெற உள்ள பிஹார் மாநிலத்துக்கு பல வகையான திட்டங்களை அறிவித்தார்.
அதேபோல், வரி செலுத்துவோரின் சுமைகளைக் குறைக்கம் வகையில் மாதாந்திர ஊதியதாரர்களுக்கு ரூபாய்.12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு விலக்கு அறிவித்தார். எனவே இந்த அறிவிப்புகளை வரவேற்கும் வகையில் இணைவாசிகள் மீம்ஸ்களால் கொண்டாடினர்.
சிலர் நிதியமைச்சரின் ஏஐ உருவாக்கிய படங்களை பகிர்ந்திருந்தாலும், பலர் பாலிவுட் நடிகர்களின் படங்களின் மேல் மார்பிங்க் செய்யப்பட்ட படங்களை பகிர்ந்தனர்.
வரி விலக்கு அறிவிப்பு குறித்து மிகவும் சுவாரஸ்யமாக ஒரு பயனர், மத்திய தர வர்க்கத்தினர் இன்று நிர்மலா ஜியை எப்படி பார்க்கிறார்கள் என்று கூறி, கையில் தாமரையுடன், தலையில் கிரீடத்துடன் ஹிந்து மதக் கடவுள் போல தோன்றும் படம் ஒன்றைப் பகிர்ந்தனர்.
மீம்ஸ்கள் ஒருபுறம் இருந்தாலும் மத்திய அமைச்சர் தொடர்ந்து 8 வது முறையாக மத்திய பட்ஜெட்டினைத் தாக்கல் செய்தார். அதில் பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு உயர்வினை பட்ஜெட்டில் அறிவித்தார். ஊதியதாரர்களுக்கு ஆதரவாக இந்த பட்ஜெட் உரை 1 மணிநேரம் 17 நிமிடங்கள் நீண்டது. இது கடந்த ஆண்டு பட்ஜெட் உரையை விட 1 மணிநேரம் 25 நிமிடங்கள் குறைவானது.
பட்ஜெட் குறித்து கூறுகையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடுவது, ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்வது, தனியார் தொழில்துறை முதலீட்டு வளர்ச்சி, குடும்பங்களின் எதிர்பார்ப்பை உறுதிப்படுத்துவது, வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரின் சக்தி ஆகியவற்றில் மத்திய அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
முந்தைய பட்ஜெட் தாக்கல்களைப் போலவே, இந்த முறையும் நிதியமைச்சரின் உடை அதிக கவனத்தை ஈர்த்தது. இம்முறை அவர் பிஹாரி மதுபானி கலையில் உருவான நுணுக்கமான தங்க இழை வேலைப்பாடுகள், ஓவியங்களுடன் கூடிய வெள்ளை நிறச்சேலையும், சிவப்பு நிற ரவிக்கையும் அணிந்திருந்தார். வழக்கம் போல தனது பட்ஜெட் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டியிருந்தார் கூடுதலாக தெலுங்கு கவிஞரின் மேற்கோளையும் சுட்டிக்காட்டினார். மத்திய பட்ஜெட் எதிரொலியால் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய்.360 உயர்ந்து ரூபாய்.62,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய்.45 உயர்ந்து ரூபாய்.7,790க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது இதனால் நகை வாங்குவோர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். ஜனவரி மாதம் 22 ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய்.60,000-ஐக் கடந்து புதிய உச்சத்தை தொட்டது.
தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே வந்த நிலையில் இன்று ஒரு சவரன் ரூபாய். 62,000-ஐக் கடந்தது. சென்னையில் காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய். 120 உயர்ந்து ரூபாய். 61,960-க்கு விற்பனையானது. இந்த நிலையில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து நேற்று மாலை தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஒரு சவரனுக்கு ரூபாய். 360 உயர்ந்து ரூபாய்.62,320-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூபாய்.45 உயர்ந்து ரூபாய். 7,790-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. இப்படி தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் ஏழை, எளிய மக்கள் தங்கம் வாங்க நினைப்பதற்கே அச்சம் கொள்ளும் நிலை ஏற்படுமென அஞ்சப்படுகிறது.கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்ததை விட கிட்டத்தட்ட 3.4 லட்சம் கோடி குறைவாக செலவழித்துள்ளது மத்திய பாஜக அரசு.
கல்வி, மருத்துவம், மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு மிக குறைவான நிதியே உபயோகிக்கப்பட்டுள்ளது.2024 - 25 ஆம் ஆண்டில் செலவின பட்ஜெட் மதிப்பீடு - 48.2 லட்சம் கோடி, ஆனால் உண்மையில் செலவழிக்கப்படுவதோ 47.16 லட்சம் கோடி. மதிப்பீடுக்கும் நடப்பிற்கும் இடையே வித்தியாசம் 1 லட்சம் கோடிக்கு மேல் 2025 ஆம் ஆண்டுக்காண தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உயர் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கான பட்ஜெட். ஏழைகளுக்கு உகந்ததல்ல மருந்து, விவசாயம்,கல்வி, வளர்ச்சி, தொழில் தொடங்க கடன் உதவி என பல சலுகைகள் வழங்கப்பட்ட நிலையில்
தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சில முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
கோபால்ட் பவுடர், லித்தியம்-அயன் பேட்டரி ஸ்கிராப், ஈயம், துத்தநாகம் மற்றும் 12 முக்கியமான தாதுக்கள் அடிப்படை சுங்க வரியிலிருந்து (BCD) விலக்கு அளிக்கப்படும். ஆகையால் மின்சார கார்களின் விலை குறையும்.
36 அத்தியாவசிய மருந்துகளின் மீதான சுங்க வரிகளை விலக்கி மற்றும் குறைப்பதன் மூலம் உயிர்காக்கும் மருந்துகளை மிகவும் மலிவு விலையில் வழங்குகிறது.
மேலும் 6 உயிர்காக்கும் மருந்துகளுக்கு 5% வரி சலுகை வழங்கப்படும்.
அடுத்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் 10,000 கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்படும்
பட்டியலின, பழங்குடியின பெண் தொழில்முனைவோர் 5 லட்சம் பேருக்கு தலா ரூபாய் 2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.
அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
மாநிலங்கள் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூபாய்.1.50 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) தொடர்பான படிப்புகளுக்கு 3 சிறப்பு மையங்கள் ரூபாய் 500 கோடியில் அமைக்கப்படும்.
மேம்படுத்தப்பட்ட உதான் திட்டத்தின் கீழ் 120 புதிய வழித்தடங்களில் விமான சேவை.
அணு உலைகள் மூலமாக 2047-ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு.
புத்தொழில் நிறுவனங்களை உருவாக்க ரூபாய்.10,000 கோடி நிதி ஒதுக்கீடு.
கிரெடிட் கார்டு உச்ச வரம்பு உயர்வு
கிஷான் கிரெடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு ரூபாய்.3 லட்சத்தில் இருந்து ரூபாய்.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு ரூபாய்.10 கோடியாக உயர்த்தப்படுகிறது.சிறியதாக உள்ள தொண்டு நிறுவன அறக்கட்டளைகளின் பதிவு காலத்தை 5 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக அதிகரிப்பதன் மூலம் நடைமுறையில் சிரமங்கள் குறையும். உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப, பரிமாற்ற விலை நிர்ணய செயல்முறையை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டம் முன்மொழியப்பட்டது. வழக்குகளைக் குறைப்பதற்கும் சர்வதேச வரிவிதிப்பைக் குறைப்பதற்கும், பாதுகாப்பான துறைமுக விதிகளின் நோக்கம் விரிவுபடுத்தப்படுகிறது. வாடகை மீதான டிடிஎஸ்-க்கான ஆண்டு வரம்பு ரூபாய்.2.40 லட்சமாக இருப்பதை ரூபாய்.6 லட்சமாக உயர்த்தும் அறிவிப்பும் அடங்கும். எந்தவொரு மதிப்பீட்டு ஆண்டிற்கும் புதுப்பிக்கப்பட்ட வருமான வரி வருமானத்தை தாக்கல் செய்வதற்கான கால வரம்பை, தற்போதைய நிலையில் 2 ஆண்டுகளிலிருந்து 4 ஆண்டுகளாக நீட்டிப்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்படடதுமூத்த குடிமக்களுக்கான வட்டி மீதான வரி விலக்குக்கான வரம்பு தற்போதைய ரூபாய்.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக இரட்டிப்பாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கருத்துகள்