கர்நாடகா மாநிலத்தின் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நான்கு நபர்களை வேறு உயர் நீதிமன்றங்களுக்கு மாற்ற உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித் , கே நடராஜன் , ஹேமந்த் சந்தன்கவுடர் மற்றும் சஞ்சய் கவுடா ஆகியோர் இடமாற்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளாவார்கள் .
நீதிபதி தீட்சித் ஒடிசா உயர் நீதிமன்றத்திற்கும், நீதிபதி நடராஜனை கேரளாவிற்கும், நீதிபதி சந்தன்கவுடரை சென்னைக்கும், நீதிபதி கவுடாவை குஜராத்துக்கும் மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதிகளில் நடைபெற்ற அதன் கூட்டங்களில் கொலீஜியம் இந்த முடிவை எடுத்தது.
உச்ச நீதிமன்ற இணையதளத்தில் கொலீஜியம் வெளியிட்ட அறிக்கையின்படி, "உயர் நீதிமன்றங்களின் மட்டத்தில் உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கும் நீதி நிர்வாகத்தின் தரத்தை வலுப்படுத்துவதற்கும்" இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் நான்கு கர்நாடக மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கர்நாடக மாநிலத்தின் பார் கவுன்சில் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தை வலியுறுத்தியது.
திடீர் இடமாற்றங்கள் நீதித்துறையின் மன உறுதியைக் குலைத்து, நீதித்துறை அமைப்பின் மீதான நம்பிக்கையைப் பாதிக்கும் என பார் கவுன்சில் கூறியது. உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி அன்று நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், கே நடராஜன், ஹேமந்த் சந்தன்கவுடர் மற்றும் சஞ்சய் கவுடா ஆகியோரை இடமாற்றம் செய்ய பரிந்துரைத்தது .
நீதிபதி தீட்சித் ஒரிசா உயர் நீதிமன்றத்திற்கும், நீதிபதி நடராஜனை கேரள உயர் நீதிமன்றத்திற்கும், நீதிபதி சந்தன்கவுடரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கும், நீதிபதி கவுடாவை குஜராத் உயர் நீதிமன்றத்திற்கும் மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற இணையதளத்தில் கொலீஜியம் வெளியிட்ட அறிக்கையின் படி, "உயர் நீதிமன்றங்களின் மட்டத்தில் உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கும் நீதி நிர்வாகத்தின் தரத்தை வலுப்படுத்துவதற்கும்" இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த இடமாற்ற பரிந்துரை கர்நாடக சட்டத்துறையினரிடையே தற்போது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இடமாற்றப் பரிந்துரையை எதிர்த்து ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி அன்று பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் (AAB) நீதிமன்றத்தில் பணிக்குச் செல்லாமல் புறக்கணித்தது .
கருத்துகள்