ரூபாய்.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில ஆர்ஜித தனி வட்டாட்சியர் கைது.
திருவள்ளூரில் அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு பணம் கொடுக்க 75 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நில ஆர்ஜித தனி வட்டாட்சியர் எட்வர்ட் வில்சனை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பணம் பெற்ற கையுடன் பிடிக்கப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள் ஒரு வருடங்களுக்கு மேலாக நடைபெறுகிற நிலையில் திருவள்ளூரில் இருந்து
ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு சாலை விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீட்டுத் தொகை அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. திருவள்ளூர் அடுத்த போலிவாக்கம் பகுதியில் இயங்கி வரும் வேல்யூ ஸ்பேஸ் கம்பெனி என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்திய அரசு அதற்காக 45 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக கொடுக்க வேண்டியதை பலமுறை நில ஆர்ஜித தனி வட்டாட்சியர் எட்வர்ட் வில்சனிடம்
கேட்ட நிலையில் அவர் காலதாமதம் செய்து வந்ததால், சுமார் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால், இழப்பீட்டுத் தொகை 45 லட்சத்தை கொடுப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நிறுவனத்தின் அலுவலர்கள் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அளித்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழிகாட்டுதலின் பேரில் முதல் கட்டமாக 75 ஆயிரம் ரூபாயை தனி வட்டாட்சியர் எட்வர்ட் வில்சனுக்கு ஏஜென்ட்களாக
செயல்பட்ட கோமதிநாயகம் மற்றும் துரை ஆகியோர் உதவியுடன் வேல்யூ ஸ்பேஸ் கம்பெனி நிறுவன ஊழியர் கொடுத்த போது மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் ஆய்வாளர் மாலா ஆகியோர் தலைமையிலான குழுவினர் தனி வட்டாட்சியரை பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அவருக்கு லஞ்சமாகக் கொடுக்கப்பட்ட 75 ஆயிரம் ரூபாயை கைப்பற்றியவர்கள் ஏஜென்ட்களாக செயல்பட்ட கோமதிநாயகம் மற்றும் துரை ஆகியோரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் இதுவரை அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு இது போன்று எவ்வளவு ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளனர். என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் சேர்த்தனர்








கருத்துகள்