பல்வேறு உயாநீதிமன்றங்களின் 14 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி. ஆா். கவாய் தலைமையில் ஆகஸ்டு மாதம் 25, 26-ஆம் தேதிகளில் நடைபெற்ற கொலீஜியத்தின் கூட்டத்தில் அதற்கான முடிவெடுக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கவாய் உள்ளிட்ட நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் ஆகஸ்ட் 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் கூடிய கூட்டத்தில் நாட்டின் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் 14 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைத்ததில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி நிஷா பானு கேரளா மாநிலத்தின் உயர்நீதிமன்றத் துக்கு இடமாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டு உள்ளார். அதே போல மத்தியப் பிரதேச மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி அதுல் ஸ்ரீதரன் சத்தீஷ்காருக்கும், சத்தீஷ்கார் நீதிபதி சஞ்சய் அகர்வால் அலகாபாத்துக்கும் மாற்றம் செய்வதற்குபா பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ராஜஸ்தான் நீதிபதிகள் அவனீஷ் ஜிங்கன், தினேஷ் மேத்தா ஆகியோர் டெல்லிக்கும், அலகாபாத் நீதிபதி சஞ்சய் குமார் சிங் பாட்னாவுக்கும், டெல்லி நீதிபதி அரண் மோங்கா ராஜஸ்தானுக்கும் இடமாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதைப்போல் மேலும் பல்வேறு உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இடமாற்றத்தை கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
~2.jpg)

கருத்துகள்