முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடியரசுத் துணைத் தலை​வர் தேர்தலில் இண்​டியா கூட்​டணி வேட்பாளர் தமிழ்நாடு வருகை நிகழ்வு

குடியரசுத் துணைத் தலை​வர் தேர்தலில் இண்​டியா கூட்​டணி சார்​பில் போட்​டி​யிடும் சுதர்​சன் ரெட்டி வாக்குகள் சேகரிக்க தமிழ்நாடு வந்து முதல்​வர் மு.க.ஸ்டா​லின் உள்​ளிட்ட திமுகவின் கூட்​டணிக் கட்சிகளின் தலை​வர்​களைச் சந்​தித்து ஆதரவு கோரி​னார்.

​​​​​​​சுதர்சன் ரெட்டி தான் வெற்றி பெற்றால் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பேன் என உறுதி கூறினார் 


குடியரசு துணைத் தலை​வ​ர் தேர்தல் செப்​டம்​பர் மாதம் 9-ஆம் தேதி நடை​பெற உள்​ளது. பாரதிய ஜனதா கட்சியின் தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி வேட்​பாள​ராக தமிழ்நாட்டைச் சேர்ந்த மகா​ராஷ்டிர மாநில ஆளுநராக உள்ள சி.பி.​ராதாகிருஷ்ணன் நிறுத்​தப்​பட்​டுள்​ளார். எதிர்க்​கட்​சிகள் அடங்​கிய இண்​டியா கூட்​டணி சார்​பில், தெலுங்​கானா மாநிலத்தை சேர்ந்த உச்ச நீதி​மன்றத்தின் முன்​னாள் நீதிபதி சுதர்​சன் ரெட்டி போட்​டி​யிடு​ம் நிலை​யில், தமிழ்நாட்டில் உள்ள திமுக கூட்​டணி கட்​சித் தலை​வர்​கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்​தித்து ஆதரவு கோரும் வித​மாக சுதர்​சன் ரெட்டி சென்னை வந்​தார். முதல்​வரும், திமுக தலை​வரு​மான மு.க.ஸ்​டா​லின் அவரை வரவேற்​றார்  தொடர்ந்​து, கூட்​டணிக் கட்சித் தலை​வர்​களிடம் ஆதரவு கோரும் நிகழ்வு நடை​பெற்​றதில், சுதர்​சன் ரெட்​டியை அறி​முகம் செய்து வைத்​து, முதல்வர் மு.க.ஸ்டா​லின் பேசும் போது: இண்​டியா கூட்​டணி வேட்​பாளர் சுதர்​சன் ரெட்​டி, தமிழ்நாட்டிற்கும், தமிழக உணர்​வு​களுக்​கும் மதிப்​பளிக்​கக் கூடிய​வர். ஆனால், உச்ச நீதி​மன்றத்தின் முன்​னாள் நீதிப​தி​யான அவரை நக்​சல் ஆதர​வாளர் என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் விமர்​சிக்​கிறார். அவர்​களால் தீவிர​வாதத்தை ஒழிக்க முடிய​வில்​லை. அந்த திறனற்ற நிலையை மறைக்க, நீதிப​தி​மேல் பழி​போட்டு தப்​பிக்கப் பார்க்​கிறார்.


அரசி​யல் எதிரி​களைப் பழி​வாங்க புல​னாய்வு அமைப்​பு​களை மத்​திய பாஜக அரசு பயன்​படுத்​துகிறது. தன்​னாட்சி அமைப்​பு​களை பாஜக​வின் துணை அமைப்​பு​களாக மாற்றி வரு​கிறது. அரசியலமைப்புச் சட்​டமே ஆபத்​தில் சிக்​கி​யுள்​ளது. இந்தச் சூழலில், இந்​தி​யா​வின் அடிப்​படை கொள்​கைகளான மதச்​சார்​பின்​மை, கூட்​டாட்சி தத்​து​வம், சமூகநீ​தி,வேற்​றுமை​யில் ஒற்​றுமை ஆகிய​வற்​றில் நம்​பிக்கை கொண்ட ஒரு​வர் நமக்கு கிடைத்​திருக்​கிறார். அவரை         ஆதரிப்​பது​ தான் நம் முன்​னால் இருக்​கும் கடமை. ஆனால், பாஜகவோ, தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்​களுக்​கும் எதி​ராகவே அனைத்து செயல்​களை​யும் செய்​து​விட்​டு, தமிழர் என்ற முகமூடியை அணிந்து  வந்து ஆதரவு கேட்​கிறது. இதெல்​லாம் பழைய தந்​திரம். எனவே, சட்ட நீதிக்​காக​வும், மனித உரிமை​களுக்​காக​வும் போராடிய, வாதாடிய, தீர்ப்பு வழங்​கிய நீதிபதி சுதர்​சன்ரெட்டி நமது இந்​திய ஜனநாயகம், நாடாளு​மன்ற மரபு​கள், மக்​களாட்​சி, அரசி​யலமைப்பு ஆகிய​வற்றைகா காக்க குடியரசுத் துணைத் தலை​வ​ராக வெற்றி பெற்று வரவேண்​டும் என்று வாழ்த்​துகிறேன். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.           பின்​னர், ஆதரவு கோரி சுதர்​சன் ரெட்டி பேசி​ய​தாவது: திரா​விட இயக்கப் பாரம்​பரி​யம் செழித்த தமிழழ்நாடு பெருந்​தலை​வர் காம​ராஜர், தந்தை பெரி​யார், பேரறிஞர் அண்​ணா, கருணாநிதி உள்​ளிட்ட சிறந்த ஆளு​மை​கள் வாழ்ந்​துள்​ளனர். அவர்​களது வழி​யில் மாநில உரிமைக்​காக முதல்​வர் மு.க.ஸ்டா​லின் தொடர்ந்து போராடி வரு​கிறார். விளிம்​பு நிலை மக்​களின் முன்​னேற்​றத்​துக்​காக பல திட்​டங்​களை செயல்​படுத்தி வருகிறார். கல்வி, சுகாதாரம், புத்​தாக்க சிந்​தனை, தொலைநோக்கு பார்வையில் முன்னணி மாநில​மாக தமிழ்நாடு உள்​ளது. இந்​தியா என்​பது ஒரு நாடு​தான். ஆனால், மாநிலங்​கள் இல்​லாமல் இந்​தியா இல்​லை. நீதிப​தி​யாக இருந்​த​போது அரசி​யலமைப்பை நிலை நிறுத்​திக் கொண்​டிருந்​தேன். இப்​போது, அரசி​யலமைப்பை காக்க குடியரசு துணைத் தலை​வர் வேட்​பாள​ராக நிறுத்​தப்​பட்​டுள்​ளேன். நான் வெற்றி பெற்​றால், அரசி​யலமைப்புச் சட்​டத்தை முழு​மூச்​சுடன் பாது​காப்​பேன் என்று உறு​தி​யளிக்​கிறேன். இவ்​வாறு அவர் கூறி​னார்.

பின்​னர், செய்​தி​யாளர்களிடம் பேசிய சுதர்​சன் ரெட்​டி, ‘‘தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்​னாள் குடியரசுத் தலை​வர்​கள் டாக்டர் ராதாகிருஷ்ணன், டாக்டர் அப்​துல் கலாம் ஆகியோரைப் போல நான் அரசி​யலுக்கு அப்​பாற்​பட்டு போட்​டி​யிடு​கிறேன். அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிட​மும் ஆதரவு கோரு​வேன்’’ என்​றார்.

இந்த நிகழ்ச்​சி​யில் மதி​முகவின் பொதுச் செய​லா​ளர் வைகோ, தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வம், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, விசிக தலை​வர், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட்  கட்சி மாநிலச் செய​லா​ளர் சண்​முகம், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்​வ​ராஜ், தி​முக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்​சி சிவா, கனி​மொழி, கர்​நாடக காங்​கிரஸ்​ கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சையத்​ நசீர்​ உசேன்​ உள்​ளிட்​டோர்​ கலந்​துகொண்​டனர்​.  இந்த நிலையில் 

இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘நக்சல்,மாவோயிஸ்டுகளின்’ ஆதரவாளர் என விமர்சித்துள்ளார். 

ஆனால் திமுகவின் இந்தியா கூட்டணிக் கட்சிகள் அவரை 

மனிதநேயச் செயற்பாட்டாளர் எனவும், பிறர் நலனுக்காக தங்களை அர்ப்பணிப்பவர் எனவும், பழங்குடியினர் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களின் நலனில் அக்கறை கொண்டோர்.. போன்றவர்களுக்கு தானே இந்த முத்திரையை பாஜக குத்துகிறது, எனவும்         ஆதிக்க சமூகமும், அதிகார வர்க்கமும்!

சரி, சுதர்ஷன் ரெட்டிக்கு ஏன் இந்த முத்திரையை குத்தினார் அமித்ஷா? என கேள்வி எழுப்புகிறது  அதற்கு காரணமும் கூறுகின்றனர். 

சத்தீஸ்கரின் இயற்கை செழித்தோங்கும் மலை பிரதேசங்களில் கார்ப்பரேட்டுகள் காலூன்றுவதற்காக பழங்குடிகளை அப்புறப்படுத்த திட்டமிட்டதற்காக அரசு சம்பளத்தில் உண்டு கொழுத்த சில தலைவர்கள் அங்கு காவல்துறையைப் பயன்படுத்தி படுதோல்வி கண்ட அதிகார வர்க்கம் பழங்குடியினர் சிலருக்கு ஆசைகாட்டி பணத்தையும், ஆயுதங்களையும் அள்ளித் தந்து மக்களுக்கான போராளிகளை அந்த மக்களில் சிலரையே கூலிப் படையாக்கியது. 

அந்தக் கூலிபடைக்கு சல்வா ஜூடும் எனப் பெயரிட்டது.

இதன் அர்த்தம் அமைதிப் பேரணி. அவர்கள் செய்யும் கொலைகள் ஊடகங்களாலும், அரசாலும் புனித வேட்டை என கொண்டாடப்பட்டது. இந்த கொலைகார சல்வாஜூடும் வேட்டையாடி 400க்கும் மேற்பட்ட போராளிகளைக் கொன்று குவித்ததில் ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி மக்களும் பலியாகினர்.

இதை இந்தியா முழுமையும் அனைவரும் எதிர்த்தனர். ஆனால், அரச அதிகாரம் அடங்க மறுத்தது. 

இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றது. இதைத் தொடர்ந்து ஜூலை மாதம் 2011- ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் மாவோயிஸ்டு போராளிகளுக்கு எதிரான சால்வா ஜுடும் இயக்கம் சட்டவிரோதமானது என்று தீர்ப்பு வழங்கியது. அத்தகைய தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் இருவர் ஒருவர் சுதர்சன் ரெட்டி, மற்றொருவர் எஸ்.எஸ். நிஜ்ஜார்.

ஆக, இப்படிப்பட்ட  தீர்ப்பை வழங்கிய நீதிபதி துணை குடியரசுத் தலைவருக்காக நிறுத்தப்படுவதே பெருமை அல்லவா? என திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பெருமிதம் கொண்ட போதும் போபால் விஷவாயுக் கசிவு குறித்து அவர் விசாரணை நடத்த மறுத்தது குறித்து அதில் மறைந்திருந்த ஊழல் குறித்து யாரும் பேசவில்லை .   என்பதே உண்மை என்ற நிலையில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தமிழ் நாட்டின்  சி.பி.ராதாகிருஷ்ணன் தே ஜ கூட்டணி  சார்பில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்பதே எதார்த்த நிலை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...