கடந்த 20 ஆண்டாக நடந்த சதுரங்க வேட்டை மோசடி ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு கோடி!
நூதன மோசடியில் ஈடுபட்ட அறக்கட்டளை நிர்வாகி குடுமியான்மலை ரவிச்சந்திரன் நேற்று கைது
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் நிறுவனர் ரவிச்சந்திரன்
2008 ஆம் ஆண்டில் அருள்தாஸ் நினைவு அறக்கட்டளை தொடங்கி, ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் திரும்ப கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி மக்களில் சிலரை உறுப்பினர்களாகச் சேர்த்துள்ளார்
உறுப்பினர்களை அறிமுகம் செய்வோருக்கு எம் எல் எம் போல ரூபாய்.5 ஆயிரம் கமிஷனும் கொடுத்துள்ளார்
உறுப்பினர்களிடம் 5,000 கோடி ரூபாய்க்கான போலியான காசோலையைக காட்டி அறக்கட்டளையில் போதிய உறுப்பினர்கள் இல்லை என்பதால் ரிசர்வ் வங்கி இந்த காசோலையை மாற்றம் செய்ய சம்மதிக்கவில்லை என்று சொல்லி ஏமாற்றி புதிய உறுப்பினர்களை சேர்த்து வந்துள்ளார் ஏமாற்றம் செய்யும் முன் ஆசையைத் தூண்டி
உறுப்பினர்கள் நம்பும்படியாக அவர்களுக்கு தானே முன்னின்று வங்கிக்கணக்கையும் துவங்கிக் கொடுத்து, இந்தக் கணக்கில் அந்த ஒரு கோடி ரூபாய் வரும் என்று கூறி நம்ப வைத்துள்ளார்
2009 ஆம் ஆண்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தி ரூபாய்.50 ஆயிரம் மதிப்பில் சைக்கிள், அயர்ன்பாக்ஸ், மிச்ஸி உள்ளிட்ட பொருள் வழங்கி உள்ளார்
இந்த நலத்திட்ட விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக வந்த நடிகை சினேகா, நடிகர் வடிவேலு, நடிகர் சார்லி, நடிகர் தாமு, நடிகர் ராதாரவிக்கு லட்சக்கணக்கில் பணத்தை இறைத்துள்ளார் இதில் முக்கிய காவல் துறை சார்ந்த அலுவலர்கள் உதவி யுடன்
புதுக்கோட்டையில் துவங்கிய மோசடியை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், ஈரோடு, கோபிசெட்டிப்பாளையம் என விரிவுபடுத்தியும் நடத்தியுள்ளார்
கடந்த 17 ஆண்டுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புகார்களின் பேரில் ரவிச்சந்திரனை சிபிசிஐடி காவலதுறை கைது செய்துள்ளனர் இந்த அறக்கட்டளையில் முதலீடு செய்தால் பணத்தை பத்து மடங்காக ஒரு லட்சம் கொடுத்தால் 10 லட்சம் , 10 லட்சம் கட்டினால் ஒரு கோடி தருவதாகக் கூறியதால், திருச்சிராப்பள்ளி, கரூர்,புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமானோா் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனா். ஆனால், கூறியபடி முதலீட்டாளா்களுக்கு பணத்தை திரும்பக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பலரும் புகாா் அளித்து வந்தனர்.பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் இவா் ஏற்கெனவே சிறை சென்றவா் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.முன்னதாக, குடுமியான்மலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற சிபிசிஐடி ஆய்வாளா் பிருந்தா தலைமையிலான காவலர்கள் சுமாா் 2 மணி நேரம் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை எடுத்து சென்றனா்.இதன்பேரில், தஞ்சாவூர் சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளர் கல்பனா தத்து தலைமையிலான குழு, காரைக்குடியில் தலைமறைவாக இருந்த குடுமியான்மலை ரவிச்சந்திரனை நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்து, புதுக்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி, பிறகு சிறையில் அடைத்தனா்.
குடுமியான்மலை ரவிச்சந்திரனை பல வருடங்களாக நம்பி ஏமாந்து அனைவருக்கும் நம்பிக்கை அளித்து வரும் அவரது நண்பர் திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் ரவிச்சந்திரனின் நண்பரான பாரதராஜா வீட்டில் சிபிசிஐடி காவல் துறை 5 போ் நேற்று வெள்ளிக்கிழமை காலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இதில், அவரது வீடு முழுவதும் சோதனையிடப்பட்ட நிலையில், பாரதராஜாவிடமும் விசாரித்தனா்.காலை 6 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்ற சோதனையின் முடிவில் ஆவணங்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. கைதும் செய்யப்படவில்லை என திருச்சிராப்பள்ளி காவல் துறையினா் தெரிவித்துள்ளனர்

.webp)



கருத்துகள்