தமிழ்நாடு அரசியலில் எப்போதும் திடீர் திருப்பங்களும் ஆச்சரியங்களும் இயல்பு.
இந்தப் பின்னணியில், 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி அன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது அதிமுகவின் உள்கட்சி இயக்கவியல் மற்றும் தமிழ்நாடு அரசியல் களத்தில் பாஜகவுடனான உறவு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்னதாக, கே. ஏ.செங்கோட்டையன் போன்ற முன்னணி தலைவர்கள் உள்கட்சி அரசியலில் போராட்டக் குரலை எழுப்பிய நிலையில், எடப்பாடி கே. பழனிசாமியின் திடீர் டெல்லி பயணம் உள்துறை அமைச்சர் அழைத்ததன் அடிப்படையில் “அமித்ஷாவிடம் அடிபணிந்துவிட்டார்” என்ற விமர்சனங்களைத் தூண்டியுள்ளது
இந்த சந்திப்பு, செங்கோட்டையனின் உள்கட்சி எதிர்ப்பைத் தொடர்ந்து நடந்தது முக்கியமானது. கே. ஏ. செங்கோட்டையன், கட்சியின் முடிவெடுக்கும் செயல்முறையில் தனது கருத்து புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கலாம். இது, எடப்பாடி கே. பழனிசாமியின் தலைமைக்கு உள்ள சவால்களை வெளிப்படுத்துவதோடு, பாஜகவின் தலையீடு இல்லாமல் உள்கட்சி பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத நிலையை எடப்பாடி கே. பழனிசாமி எதிர்கொள்கிறார் என்ற விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில், இத்தகைய உயர்மட்ட சந்திப்புகள் பெரும்பாலும் கூட்டணி உத்திகளை மையமாகக் கொண்டே நடைபெறுகின்றன. பாஜகவின் தலையீடு, உள்கட்சி பிளவுகளைத் தணிக்கவும், கட்சியை ஒருங்கிணைக்கவும் எடப்பாடிக்கு உதவலாம் என்றாலும், இது அவரது தனித்துவமான தலைமையை கேள்விக்குள்ளாக்குகிறது.
பாஜகவுடனான கூட்டணி, அதிமுகவின் தனித்துவத்தையும், வாக்கு வங்கியையும் பாதிக்கலாம். கே.ஏ.செங்கோட்டையனின் எதிர்ப்பு, உள்கட்சி சவால்களை வெளிப்படுத்துவதோடு, எடப்பாடி கே. பழனிச்சாயின் தலைமைக்கு அழுத்தத்தை அதிகரிக்கிறது. திமுக, இந்த மாற்றங்களை எதிர்கொள்ள தனது கூட்டணி உத்திகளை வலுப்படுத்தி வருகிறது. எடப்பாடி கே. பழனிசாமி தனக்கென பெரிய செல்வாக்கு இல்லாதபோதும் இரட்டை இலையை மட்டுமே நம்பி, உள்கட்சி மோதல்களையும், வெளிப்புற அழுத்தங்களையும் சமநிலைப்படுத்தி, தனது தலைமையை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்த சந்திப்பின் விளைவுகள், 2026 ஆம் ஆண்டு தேர்தல் களத்தை எவ்வாறு வடிவமைக்கும் என்பது வரும் மாதங்களில் தெளிவாகும் என்ற நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி கே. பழனிச்சாமி சந்திப்பில் நடந்ததுதான் என்ன ?
டெல்லியில் சில நம்பகமான அரசியல் வட்டாரங்களில் கிடைத்த தகவல்களின படி,
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
சி பி ராதாகிருஷ்ணனைச் சந்தித்தார் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி. பின்னர் அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நேரம் கேட்டபோது மாலை 5 மணி அளவில் என்று தொடர்ச்சி பணி இருப்பதால் இரவு எட்டு மணிக்குச் சந்தித்து freeயாக விரிவாக என்றும் சொல்லி இருக்கிறார் அமித்ஷா. அதன் பிறகு இரவு எட்டு மணி அளவில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிமுகம் செய்து கொண்டு, காபிக்கு பின இருவரும் தனியாக பேசிக்கொண்டிருக்கும் போது தமிழ்நாட்டு நிலவரங்கள் எவ்வாறு இருக்கின்றன என்று அமித்ஷா கேட்டிருக்கிறார்.
அதற்கு எடப்பாடி கே. பழனிசாமி நீங்கள் ஊழல் செய்த அமைச்சர்கள் மீது ஈடி கொண்டு வந்து நடவடிக்கை எடுத்த போதும் அங்கு எதுவும் மத்திய அரசின மேல் நடவடிக்கை இன்றளவும் சரியாக நடக்கவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக மோசம் அடைந்திருக்கிறது.தொடர்ந்து கொலைகள் இதுவரை காவல் நிலைய மரணங்கள் நடந்திருக்கிறது.
சட்டம் ஒழுங்கைப் பொறுத்த வரை வலுத்தவர்கள் கைதான் ஓங்கி இருக்கிறது. சென்னை டிஜிபி ஆபிஸ் முன்னாலேயே கொலை நடக்கிறது. எஃப் ஐ ஆர் பதிவு செய்தும் அதற்கான நடவடிக்கைகள் இல்லை. போக இளம் தலைமுறையினரிடம் போதை பொருட்கள் பெண்கள் மீது பாலத்காரங்கள அதிகரித்தும் இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் இன்றைய தமிழ்நாடு அரசு பொறுப்பேற்காமல் எப்படியாவது பணம் கொடுத்து தேர்தலில் மக்களிடம் ஓட்டு வாங்கி விடலாம் என்கிற நம்பிக்கையில் அதை மட்டுமே செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் பணப்பற்றாக்குறை இருக்கிறது. வாக்குறுதிகள்பலதையும் நிறைவேற்ற இயலாத பல அதிருப்திகள் இருக்கிறது. எல்லாவற்றையும் இலவசங்களால் மூடி மறைத்துவிடலாம் என்கிற போக்குதான் நிகழ்கிறதே ஒழிய தமிழ்நாட்டிற்கான நலன்களை இந்த அரசு உறுதி செய்யவில்லை என்று பலவாறாக எடுத்துக் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டுமென்று என்றும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார் பொறுமையாகக் கேட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா நிச்சயமாக மத்திய அரசின் கவனத்தில் உள்ளது . கவனிக்கிறேன் என உறுதியளித்தாராம் .
நிச்சயமாக இதற்கெல்லாம் நடவடிக்கையும் பிறகு அதற்கான சட்ட திட்டமான ஒழுங்குகளையும் கொண்டு வந்து அத்தனை பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பது முக்கியமானது என்று உணர்ந்திருக்கிறேன் அதை என் அளவில் உறுதியாகச் செய்வேன் என்று எடப்பாடி கே. பழனிசாமியிடம் வாக்குறுதி கொடுத்திருக்கிறார் என்ற கூறப்பட்ட நிலையில் மகிழ்ச்சியுடன் எடப்பாடி கே பழனிசாமி ஊர் திரும்பி உள்ளார். இதுதான் அங்கே உண்மையில் நடந்தது. ஆனால் இதற்கு மாறாக உள்துறை அமைச்சர் அமித்ஷா எடப்பாடி கே. பழனிசாமியுடன் முகம் கொடுத்துப் பேசவில்லை என்பது போல இங்கே ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொள்கிறன. உண்மையில் எடப்பாடி கே. பழனிசாமி அன்று எட்டு மணி அளவில் உள்துறை அமித்ஷாவைச் சந்தித்துப் பேசியதால் ஏற்பட்ட தாமதத்தால் சென்னை திரும்ப புக் செய்திருந்த விமான பயணத்தை ரத்து செய்துவிட்டு மறுநாள் மதியம் தான் கிளம்பிச் சென்னை வந்திருக்கிறார் அமித்ஷா உடனான சந்திப்பில் இருவரும் பேசியதைமிக்க மகிழ்ச்சியுடன் அவர் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் இந்த சந்திப்பின்போது பாஜக அதிமுக கூட்டணி திரும்பவும உறுதிப்பட்டு இருக்கிறது. இந்த சந்திப்பு அதிமுக -பாஜக இடையிலான உறவு மேலும் பலமாகிவிட்டது என்பதுதான் அவர் கூறும் உண்மை .
அப்படி ஒருவேளை உள்துறை அமைச்சர் அமித்ஷா முகம் கொடுத்துப் பேசாமல இருந்திருந்தால் அன்றைக்கே எடப்பாடி கே. பழனிசாமி திரும்பி இருப்பார் அல்லவா. அவர் கொடுத்த நேரத்தில் அவருடன் இருந்து இரவு 8 மணிக்கு மேலும் பேசி முடித்து நல்லபடியாக மறுநாள் தான் கிளம்பி வந்திருக்கிறார். இப்படி உண்மையில் நடந்ததை விட்டுவிட்டு இங்கு விலை போன சில ஊடகங்கள் குறிப்பாகச் சில தொலைக்காட்சிகள் போன்றவையும் இன்னும் சில ஊடகங்களும் எப்படியாவது இந்தக் கூட்டணியை கலைத்து விட வேண்டும் என்று கடும் முயற்சி செய்து மக்களுக்கிடையே பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷா எடப்பாடி கே. பழனிசாமி சந்திப்பில் மேற்கண்ட கலந்தாலோசிப்பு நிகழ்ந்தது தான் உண்மை.மற்றபடி இந்த ஊடகங்கள் செய்யும் தகவல் குழப்பங்கள் உண்மையானதல்ல. இதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களை அவர்களது அளவில் அறிவும் சிந்தனையும் அற்றவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்," என எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு தகவல்கள் கூறும் நிலையில். சில தகவல்கள் வேற விதமானதும் வருகிறது.
சுற்றி வளைக்கப்படும் எடப்பாடி கே.பழனிசாமி இனி என்ன செய்யப் போகிறார் என்பதே அது.
அதிமுகவில் 2016- ஆம் ஆண்டில் செல்வி ஜெ.ஜெயலலிதா இறந்தவுடன் வெடித்த மோதல்கள் இன்னும் ஓயவில்லை. அடித்துப் பிடித்து கூவத்தூர் குத்தகை மூலம் ஒருவழியாக பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்தாலும், எடப்பாடி கே.பழனிசாமிக்கு இன்னும் முழுமையாக ரூட் கிளியராகவில்லை. ஏற்கனவே ஐந்து துண்டாக உடைந்த கண்ணாடி அது தேர்தல் நெருங்கும் சூழலில், செயற்கை முறையில் ஒட்ட வைக்கும் முயற்சி அதை தவிர்த்து வரும் எடப்பாடி கே. பழனிசாமி, எதிர் கே. ஏ. செங்கோட்டையன், மற்றும் ஓ. பன்னீர் செல்வம்,, டி. டி. வி.தினகரன், வி. கே.சசிகலா நடராஜன் என பலமுனைகளில் இருந்தும் சுற்றி வளைத்திருக்கிறார்கள். அதிமுகவின் அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி இருக்கும்?
2026 ஆம் ஆண்டு சட்டமன்றப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆட்சியை மீண்டும் பிடித்துவிடுவோம் என்று உறுதியோடு நிற்கிறது திமுக. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் அதிமுகவில் இடியாப்ப சிக்கல் இன்னும் தீரவில்லை. மிஞ்சியும், கெஞ்சியும் பார்த்தும் மீண்டும் அதிமுகவில் அடைக்கலம் கிடைக்காத விரக்தியோடு, பாஜகவும் பாதகம் செய்துவிட்ட வருத்தத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஓ. பன்னீர் செல்லம். அதேபோல, எங்களுக்கு துரோகம் செய்த எடப்பாடி கே பழனிசாமி இருக்கும் பக்கம் தப்பித் தவறியும் இருக்க மாட்டோம் என சபதம் போட்டு கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டார் டி.டி.வி தினகரன்.
இந்தச் சூழலில் தான், எடப்பாடி கே.பழனிசாமியின் கோயமுத்தூர் மண்டலத்தை சேர்ந்த அதிமுக மூத்த தலைவர் கே. ஏ.செங்கோட்டையனும், தன் பங்குக்கு நெருக்கடியை ஆரம்பித்துள்ளார். பிரிந்து சென்ற எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோஷத்தை வலுவாக முன்வைக்கிறார் அவர். வழக்கம்போல சசிகலாவும், அதிமுகவை நிச்சயமாக ஒன்றிணைப்பேன் என்று சிறையில் இருந்து வந்த நாள் முதல் கூறிக்கொண்டே இருக்கிறார்
ஆனாலும், அதிகாரபூர்வமாக இப்போது அதிமுகவை கையில் வைத்துள்ள எடப்பாடி கே.பழனிசாமி, ஒருங்கிணைப்பும் கிடையாது, சமாதானமும் கிடையாது என பொட்டில் அடித்தாற்போல சொல்லிவிட்டார்.அவர் ஒரு அரசியல் வியாபாரி என்பதால். ‘ஆட்சியை கவிழ்க்க முயன்ற துரோகிகளுக்கு கட்சியில் மீண்டும் இடமில்லை. ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம்’ என்று கூறி அவரது எதிரிகள் கூடரத்தை பதற வைத்துள்ளார்.
எடப்பாடி கே.பழனிசாமி இப்போது ஒரு கணக்கில் இருக்கிறார். அதாவது, 2024 தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணிக்கு 23 சதவீத வாக்குகளும், பாஜக அமமுக கூட்டணிக்கு 18 சதவீத வாக்குகளும் கிடைத்தது. இதனைக் கூட்டினால் 41 சதவீதம் வருகிறது. அதாவது, திமுக கூட்டணி பெற்ற 46 சதவீத வாக்குகளுக்கு பக்கத்தில் இது வருகிறது. எனவே, தற்போதைய ஆட்சிக்கு எதிரான மனநிலையும், தனது சுற்றுப் பயணத்தில் கிடைத்த எழுச்சியையும் வைத்து எப்படியும் ‘அடுத்த முதல்வர் நான்தான்’ என்று முடிவே செய்துவிட்டார் இபிஎஸ்.
ஆனால், எடப்பாடி கே. பழனிசாமி ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறார். அதாவது, 2024-ஆம் ஆண்டில் அதிமுக கூட்டணியில் சிறிய கட்சிகள் ஆனாலும் தேமுதிக, எஸ்டிபிஐ கட்சிகள் இருந்தது. அவர்கள் இப்போது இல்லை. அதேபோல பாஜக கூட்டணியில் இருந்த பாமக, ஓ.பன்னீர்செல்வம், டி. டி. வி., தினகரன் இப்போது அவர்களோடு இல்லை. எனவே, அந்த வகையில் பார்த்தாலே 7 முதல் 10 சதவீத வாக்குகள் குறையும். அதேபோல, 2024-ஆம் ஆண்டில் பாஜக கூட்டணியில் இல்லாததால் சிறிதளவு சிறுபான்மை வாக்குகளும் அதிமுகவுக்கு கிடைத்தன. 2026-ஆம் ஆண்டில் அது நிச்சயம் கிடைக்காது. எனவே அந்த வகையில் ஒரு சரிவு இருக்கும் என்கின்றனர் அதேபோல புதிய இளைஞர்கள் மற்றும் கிருஸ்தவ மீனவர்கள் வாக்குகள் நடிகர் விஜய் தரப்பு தவெக வுக்கு செல்லும் என கணிக்கும் நிலையில் அரசியல் நோக்கர்கள்.எப்படி பார்த்தாலும், உட்கட்சி பிரச்சினைகள், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை ஆகியன எடப்பாடி கே. பழனிசாமிக்கு பெரும் சவாலாக மாறியிருப்பது தான் உண்மை. அவர் நடத்திய சுற்றுப்பயணத் திட்டங்களுக்கு வந்த கட்சிக்காரர்கள் 35 சதவீதம் மட்டுமே மற்றவர்கள் பணம் கொடுத்து கூட்டி வந்த நபர்கள் ஊரை நம்பவைக்கும் ஏற்பாடு அதிமுக இந்த நெருக்கடிகளில் இருந்து எப்படி மீளும் எனப் பார்த்தால் கடந்த தேர்தலில்அதிமுக உள்கட்சி விவாகரம் ஆனாலும் அதன் ஆதரவில் பயணப்படக் காத்திருக்கும் பாஜக என்பதை நினைத்துப் பாருங்கள் பரிதாபங்கள். அண்ணாமலை தலைவராக இருந்த போது பலமாக இருந்த து போன்ற தோற்றம்மளித்த பாஜக நயினார் நாகேந்திரன் அதிமுகவில் எடப்பாடி கே. பழனிசாமியின் தீவிர ஆதரவாளராகத் தெரியும் நிலையில் கட்சியில் ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட சசிகலா புஷ்பா, பலகட்சி மாறி பதவியை பிடித்த குஷ்பூ, , சரவண பவன் ராஜகோபால் விவகாரத்தில் கடைசிநேரத்தில் சிக்காமல் தப்பிய ஜீவஜோதி மற்றும் கரகாட்டம் பரமேஸ்வரி என அரசியல் தகுதியே இல்லாத பலரை வைத்துள்ள பாஜக தனியாக நின்று பலத்தை நிறூபிக்காத நிலையில்
இதில் ஜெயலலிதா காலத்தில் இருந்து தற்போது அதிமுக தலைமைக்கு எதிரானவர்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைத்து பேசியது அதிமுகவை அழிக்க துணியும் செயல் என வெளி நபர்கள் தான் கோபப்பட்டு பேசுகிறார்கள். அந்தக் கோபம் அந்தக் கட்சித் தலைவரான எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு அல்லவா இருக்க வேண்டும்…? ஆனால் இல்லை என்பதே உண்மை.
என் கட்சி விவகாரத்தில் தலையிட பாஜக நீ யார்? என்ற கேள்வி அந்தக் கட்சியினரிடம் இருந்து வீரியமாக வெளிப்பட்டிருக்க வேண்டாமா? ஆனால் அது மட்டும் இல்லை
தற்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பஞ்சாயத்திற்கு எடப்பாடி கே பழனிசாமி செல்வதே தற்கொலைக்கு சமமாகும் என அக் கட்சியின் எந்த பதவிக்கும் வராத எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வின் உண்மைத் தொண்டர்கள் நிலை
அ.தி.மு.க., ஒருங்கிணைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பாஜகவின் கூட்டணி கட்டுப்பாடு காரணமாக எடப்பாடி கே பழனிசாமிக்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷா நிபந்தனைகள் விதிக்கலாம் எனத் தெரிவாதாக பலர் பேசினாலும் காலம் கடந்த செயல் மக்கள் அதிருப்தி மற்றும் தொண்டர்கள் மனக்கசப்பு அதிகம் இணையாத நில வாங்குகள் சரிவு ஏற்படும்.
இந்த பேச்சின் போது, அ.தி.மு.க., - பா.ஜ.,க கூட்டணியை பலப்படுத்த, மேலும் பல கட்சிகளை கூட்டணியில் இணைக்க வேண்டிய அவசியத்தையும், அதற்கான நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி கே.பழனிசாமியிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுவார் என்றும்
இதற்கிடையே பாஜகவின் ரத்த தான முகாம் உள்ளிட்ட பலவற்றில் கே. ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டுள்ளார். ஆக, கே. ஏ.செங்கோட்டையனுக்கு கொம்பு சீவிவிட்ட கையோடு, எடப்பாடி கே பழனிசாமிக்கும் எச்சரிக்கை தருகிறது பாஜக. கூடஅ மமுக அணி கடந்த தேர்தல் காலத்தில்
வெற்றிபெறா விட்டாலும் அதிமுகவின் தோல்விக்கு வேறு ஒன்றும் செய்யவேண்டியதில்லை. இப்போதுள்ளதோடு இன்னும் ஒரு 10 தொகுதிகளில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தினால் போதும்..
அமமுக விடம் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி வாய்ப்பை 19 தொகுதிகளில் பறித்தது. இத்தொகுதிகளில் அ.தி.மு.க., கூட்டணி தோல்வி வித்தியாசத்தை விட அ.ம.மு.க., அதிகம் ஓட்டுகளை பெற்றது. அந்த வகையில்
1. ஆண்டிபட்டி
8538 அ.தி.மு.க., தோல்வி வித்தியாசம்
11,896 அ.ம.மு.க., பெற்ற ஓட்டு
2. திருவாடானை
13,852 அ.தி.மு.க., தோல்வி வித்தியாசம்
33,426 அ.ம.மு.க., பெற்ற ஓட்டு
3. காரைக்குடி
21,589 அ.தி.மு.க., தோல்வி வித்தியாசம்
44,864 அ.ம.மு.க., பெற்ற ஓட்டு
4. சாத்துார்
11,179
அ.தி.மு.க., தோல்வி வித்தியாசம்
32,916 அ.ம.மு.க., பெற்ற ஓட்டு
5. தியாகராயநகர்
137
அ.தி.மு.க., தோல்வி வித்தியாசம்
782 அ.ம.மு.க., பெற்ற ஓட்டு
6. உத்திரமேரூர்
1947அ.தி.மு.க., தோல்வி வித்தியாசம்
7662 அ.ம.மு.க., பெற்ற ஓட்டு
7. திருப்போரூர்
746அ.தி.மு.க., தோல்வி வித்தியாசம்
1066 அ.ம.மு.க., பெற்ற ஓட்டு
8.காட்பாடி
977அ.தி.மு.க., தோல்வி வித்தியாசம்
2230 அ.ம.மு.க., பெற்ற ஓட்டு
9. நெய்வேலி
16,273அ.தி.மு.க., தோல்வி வித்தியாசம்
19,778 அ.ம.மு.க., பெற்ற ஓட்டு
10. பாபநாசம்
2742அ.தி.மு.க., தோல்வி வித்தியாசம்
7282 அ.ம.மு.க., பெற்ற ஓட்டு
12. கந்தர்வகோட்டை
11. மயிலாடுதுறை
12,721அ.தி.மு.க., தோல்வி வித்தியாசம்
12,840 அ.ம.மு.க., பெற்ற ஓட்டு
13. திருமயம்
1294அ.தி.மு.க., தோல்வி வித்தியாசம்
1503 அ.ம.மு.க., பெற்ற ஓட்டு
14. நாங்குனேரி
16,486அ.தி.மு.க., தோல்வி வித்தியாசம்
31,870 அ.ம.மு.க., பெற்ற ஓட்டு
15. சங்கரன்கோவில்
5354
அ.தி.மு.க., தோல்வி வித்தியாசம்
22,676 அ.ம.மு.க., பெற்ற ஓட்டு
16. வாசுதேவநல்லுார்
2367அ.தி.மு.க., தோல்வி வித்தியாசம்
13,376
அ.ம.மு.க., பெற்ற ஓட்டு
17. தென்காசி
370அ.தி.மு.க., தோல்வி வித்தியாசம்
9944
அ.ம.மு.க., பெற்ற ஓட்டு
18. ராஜபாளையம்
3789அ.தி.மு.க., தோல்வி வித்தியாசம்
7664 அ.ம.மு.க., பெற்ற ஓட்டு மற்றும் மதுரை சார்ந்த பகுதியில் உள்ள நிலை
விஜயகாந்த் இல்லாத தேமுதிக இரண்டாக உடைந்த பாமக தொண்டர்கள் இல்லாத ஜி. கே. வாசனின் தமாசு உள்ளிட்ட ஐந்து கட்சிகள் இந்த நிலையில் இவர்கள் எல்லாரும் இணைந்தாலும் ஆட்சி அமைக்க மக்கள் ஆதரவு இருக்குமா என்பதே எழுவினா இனி இந்த உடைசல் கூட்டணிக்கு தலைமை தாங்கப் போவது பாஜகவா அல்லது அதிமுகவா ன்ற வினா எழுந்த போதும் ஊழல் மளிந்த நிலையில் உடையாமல் உள்ள திமுக கூட்டணி பலமானதே அதன் எதிர்ப்பு வாக்குகள் நடிகர் விஜய் அறுவடை செய்வார் என்பதே கள யதார்த்த நிலை இப்படி இருக்க சந்தோஷ், அண்ணாமலை இருவரும் இணைந்து பாஜக மையக்குழு கூட்டத்திற்கு சென்றுள்ளனர். தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்திற்கான திட்டத்தை அண்ணாமலை தான் வகுத்துள்ளார். வருகின்ற நாட்களில் பாஜக மற்றும் எங்கள் கூட்டணியில் உள்ள பிரச்சனைகள் முழுமையாக விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது." என்றனர். அதன் பிறகு சந்தோஷ், அண்ணாமலை இருவரும் இணைந்து பாஜக மையக்குழு கூட்டத்திற்கு சென்றனர். சென்னையில் உள்ள அண்ணாமலை வீட்டில் பி.எல் சந்தோஷ், அண்ணாமலை சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள். அண்ணாமலை தொடர்ந்து கட்சி நிகழ்வுகளை புறக்கணிப்பது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதை சரிசெய்வதற்காகத் தான் சந்தோஷ் நேரடியாக அண்ணாமலையிடம் பேசிய போது அண்ணாமலை கட்சி நலனுக்காகத் தான் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தேன் எனக்கு முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை.
இங்குள்ள நிர்வாகிகளே சிண்டிகேட் போட்டு தனக்கு எதிராக பொய்ப் புகார்களை பரப்புகிறார்கள் என அண்ணாமலை தன் வேதனையைப் பகிர்ந்துள்ளார். அவரின் குறைகளை முழுமையாகக் கேட்ட சந்தோஷ், கவலை வேண்டாம். இதுகுறித்து தேசியத் தலைமையிடம் பேசி விரைவில் தீர்வு காண்கிறேன் என உறுதியளித்துள்ளார் பாஜகவில் உள்கட்சிப் பூசல், கூட்டணியில் விரிசல் போன்ற பிரச்சனைகள் பூதாகரமாகி வரும் நிலைமை அண்ணாமலை அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சென்னை வந்த பிஎல் சந்தோஷ் அண்ணாமலையின் வீட்டிற்கு சென்று பேசியுள்ளார். இதில் பொதுநீதி யாதெனில் மேலிடத்திலிருந்து வரும் பலரும் அரசியல் ஞானசூனியமான ஆடிட்டர் ஒருவரை சந்திப்பது தான் பாஜகவின் அரசியல் பின்னடைவு இதை காலம் உணர்த்தும் என்பதே அரசியல் பார்வையாளர்கள் கருத்து
கருத்துகள்