நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதிக்குள் மன்னிப்புக் கேட்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
நடிகை விஜயலெட்சுமி சீமான் மீது தொடர்ந்த பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சீமான் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு
இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதிக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும். மன்னிப்பு கோரத் தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள சீமான் தயாராக இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. மேலும், விஜயலட்சுமி சுமூகமாக செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.இருவரும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்று, மன்னிப்பு கேட்கட்டும். நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என சீமான் உறுதியளிக்க வேண்டும். சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பின்னர், இந்த வழக்கை செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

கருத்துகள்