முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டில் 42 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்த தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 42 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்த தேர்தல் ஆணையம்

இந்த லெட்டர் பேடு கட்சிகள் கடந்த

6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற விதியை சுட்டிக்காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் உதயசூரியன், இரட்டை இலை சின்னங்களில் தொடர்ந்து போட்டியிட்ட இந்த சிறிய கட்சிகளின்  உறுப்பினர் மற்றும் வேட்பாளர் நிலை திமுக, அதிமுக சார்ந்தவர்கள் எனக் கருதி தேர்தல் ஆணையம் எடுத்த இந்த நடவடிக்கையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட 42 தமிழக அரசியல் கட்சிகளினின் பதிவை தலைமைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. 

தேர்தல் கமிஷனால் நடத்தப்பட்ட தேர்தல்களில் தொடர்ந்து 6 ஆண்டுகள் போட்டியிடாதது, வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யாதது உள்ளிட்ட விதிகளை மீறியதற்காக இந்தியா முழுவதும் 474 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை தேர்தல் கமிஷன் ரத்து செய்ததில் தமிழ்நாட்டில் 42 அரசியல் கட்சிகளும் அடங்கும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 42 அரசியல் கட்சிகளின் பட்டியல் விவரம் வருமாறு;                            1. அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி(டாக்டர் ஐசக்)           2. அகில இந்திய பார்வார்டு பிளாக்(சுபாஷிஸ்ட்)

3.அகில இந்திய மக்கள் நல்வாழ்வு கட்சி     . 4.அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்                                  5. அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம்

6.அகில இந்திய சத்தியஜோதி கட்சி

7.அனைத்திந்திய தமிழக முன்னேற்ற கழகம்                                                                          8. அனைத்து மக்கள் நீதி கட்சி

9.அன்பு உதயம் கட்சி

10.அன்னை மக்கள் இயக்கம்                           11. அனைத்திந்திய தொழிலாளர் கட்சி      12. அண்ணன் தமிழக எழுச்சி கழகம்                 13. டாக்டர் அம்பேத்கர் மக்கள் புரட்சி இயக்கம்

14.எழுச்சி தேசம் கட்சி

15.கோகுல மக்கள் கட்சி  16. இந்திய லவ்வர்ஸ் கட்சி                                   17. இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்

18.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

19.மகாத்மா காந்தி தேசிய தொழிலாளர் கட்சி

20. மக்கள் தேசிய கட்சி

21. மக்கள் கூட்டமைப்பு கட்சி

22. மக்களாட்சி முன்னேற்ற கழகம்

23. மனிதநேய ஜனநாயக கட்சி

24.மனிதநேய மக்கள் கட்சி

25.பச்சை தமிழகம்கட்சி 26. பெருந்தலைவர் மக்கள் கட்சி

27.சமத்துவ மக்கள் கழகம்

28.சிறுபான்மை மக்கள் நல கட்சி

29.சூப்பர் நேஷன் கட்சி 30. சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் இயக்கம்

31.தமிழக மக்கள் திராவிட முன்னேற்ற கழகம்                                                                        32. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்           33. தமிழர் தேசிய முன்னணி                           34. தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி 35.தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி

36.தமிழர் முன்னேற்ற கழகம்

37. தொழிலாளர் கட்சி

38. திரிணமுல் தமிழ்நாடு காங்கிரஸ்                39. உரிமை மீட்பு கழகம்

40.வலிமை வளர்ச்சி இந்தியர்கள் கட்சி

41.விடுதலை மக்கள் முன்னேற்ற கழகம்

42. விஜய பாரத மக்கள் கட்சி

இந்த 42 அரசியல் கட்சிகளில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் என்ற கட்சி பாஜ கூட்டணியில் போட்டியிட்டது. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி திமுக கூட்டணியில் உள்ளது. திருச்செங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கொங்கு ஈஸ்வரன் உள்ளார்.

ரத்து செய்யப்பட்ட கட்சிகளில் ஒன்றான மனிதநேய மக்கள் கட்சியானது, கடந்த 3 தேர்தல்களில் திமுக கூட்டணியில்  திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தான் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். எனவே அவர்கள் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளராக கருதப்படவில்லை.

இதேபோன்று ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் ரத்து செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் உள்ளது. அதிமுக, பாஜக கூ.ட்டணியில் இணைந்து இவரது கட்சி தேர்தலை சந்தித்தது. 2021ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலும், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜ க சின்னத்திலும் போட்டியிட்டது.

2016  ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் பதிவும்  ரத்து செய்யப்பட்டது. 2019, 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டு தேர்தல்களில் இக்கட்சி போட்டியிடவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...