முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹன்க் காஸ் எனும் 5 லிட்டர் தண்ணீரில் 6 மாதம் எரியும் அடுப்பு

ஹன்க் காஸ்  எனும் 5 லிட்டர் தண்ணீரில் 6 மாதம் எரியும்  அடுப்பு

உலகில் முதல்முறையாக தண்ணீரில் எரியும் அடுப்பினைக் கண்டுபிடித்திருக்கிறார்ஒரு விஞ்ஞானி இதன் சிறப்பம்சங்கள் பற்றி  விரிவாகப் பார்க்கலாம்.

தண்ணீரில் உள்ள ஹைட்ரஜன் மூலக்கூறுகளைப் பயன்படுத்தி, நீரில் எரியும் அடுப்பினைக் கண்டுபிடித்துள்ள HONC நிறுவனத்தின் நிறுவனர், தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் பேளூர் இராமலிங்கம் கார்த்தி


புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தியாகச் சுத்தமான தண்ணீரைப் பயன்டுத்தி, இயற்கை வளங்களை அழிக்காமல், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல், விபத்துகள் ஏற்படா வண்ணம், பாமர மக்களும் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வகையில், மிகக்குறைந்த மின் பயன்பாட்டுச் செலவில் உருவாக்கப்பட்டுள்ள நீர் அடுப்பினை, தம்முடைய 20 ஆண்டுகால ஹைட்ரஜன் குறித்த ஆராய்ச்சியின் விளைவாக  இராமலிங்கம் கார்த்தி  கண்டுபிடித்துச் சாதித்துள்ளார்.


தண்ணீரினை எரிபொருளாகக் கொண்ட சமையல் அடுப்பினைப் பயன்படுத்துவதன் மூலம், இனிவருங்காலங்களில் எரிபொருள் தேவைக்காக நிலம், நீர், காற்றினை மாசுபடுத்தும் நிலை வெகுவாகக் குறைந்துவிடும். அந்த வகையில் இந்திய அரசின் பேட்டன்ட் ரைட்ஸ் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் இந்த அரிய கண்டுபிடிப்பு செயற்பாட்டிற்கு வந்தால், அந்நிகழ்வு புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தித்துறையில் மிகப்பெரிய புரட்சியாகவும், அறிவியல் வளர்ச்சியில் மாபெரும் சாதனையாகவும் திகழும்!ஒரு லிட்​டர் குடிநீரில், 1,225 லிட்​டர் ஹைட்​ரஜன் எடுக்​கலாம். இந்த ஹைட்​ரஜனை கைராய்டு எலட்​ரோலைட் மெம்ப்​ரைன் இயந்​திரங்​கள் மூலம் பிரித்​தெடுத்​து, அதை சமையல் மற்​றும் தொழிற்​சாலைகளுக்​குப் பயன்​படுத்​தலாம். ஒரு லிட்​டர் தண்​ணீரில் இருந்து பெறப்​படும் வாயு, ஒரு குடும்​பத்திற்கு ஒரு மாத காலம் சமையலுக்கு பயன்​படுத்​தலாம். இதுகுறித்து செய்​தி​யாளர்​களிடம் விஞ்​ஞானி பேளூர் ராமலிங்​கம் கார்த்​திக்  தெரிவித்த தகவல், "இயற்​கை​யான முறை​யில், கார்​பன் இல்​லாத நிலை​யில் தண்​ணீரைக் கொண்​டு, அதிலிருந்து கிரீன் ஹைட்​ரஜன் மூலம் நெருப்பை உரு​வாக்கி இதைத் தயாரித்​துள்​ளேன். சுமார் 20 ஆண்​டு​கள் ஆராய்ச்​சி​யின் விளை​வாக இது சாத்​தி​யப்​பட்​டுள்​ளது. கார்​பன் இல்​லாத எரிபொருளாக​வும், மிக​வும் பாது​காப்​பான​தாக​வும் இது உள்​ளது.



தண்​ணீரில் இருந்து எடுக்​கப்​படும் ஹைட்​ரஜன் எரி​வா​யுவை சமையல் மற்​றும் தொழிற்​சாலைகளுக்​குப் பயன்படுத்தும் முறையை விஞ்​ஞானி பேளூர் ராமலிங்​கம் கார்த்​திக்கின் கண்​டுபிடிப்பாகும் திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசி அருகே வஞ்​சி​பாளை​யம் முரு​கம்​பாளை​யத்​தில் ஹன்க் நிறு​வனம் செயல்​படுவதின் நிறு​வனர் மற்​றும் முதன்மை விஞ்​ஞானி பேளூர் ராமலிங்​கம் கார்த்​திக், தண்​ணீரில் இருந்து ஹைட்​ரஜன் எரி​வா​யுவை பிரித்​தெடுத்​து, சமையல் மற்​றும் தொழிற்​சாலைகளுக்கு பயன்​படுத்​தும் தொழில்​நுட்​பத்​தை

‘ஹன்க் காஸ்’ எனப் பெயரிடப்​பட்​டுள்ள இந்த புதிய கண்​டு​பிடிப்பு அறி​முக நிகழ்ச்​சி, அவி​நாசி அருகே நேற்று நடந்​தது. முதன்மை விஞ்​ஞானி பேளூர் ராமலிங்​கம் கார்த்​திக் செயல்​முறை விளக்​கமளித்​தார். இதில் நடிகரும், ஹன்க்காஸ் நிறு​வனத்​தின் முதன்மை இயக்​குநரு​மான சரத்​கு​மார், ராம்​ராஜ் காட்​டன் நிறு​வனர் கே.ஆர்​.​ நாக​ராஜன் ஆகியோர் பங்​கேற்​று, புதிய கண்​டு​பிடிப்பை அறி​முகப்​படுத்​தினர்.இந்த கண்​டு​பிடிப்பு அங்​கீகரிக்​கப்​பட்​டால், பொருளா​தா​ரத்​தில் மிகப்​பெரிய மாற்​றம் ஏற்​படும். முன்​னொரு காலத்​தில் ரயில், விமானம் போன்ற புதிய கண்​டு​பிடிப்​பு​களை மக்​கள் சந்​தேகத்​தோடு பார்த்​தா​லும், பின்​னர் ஏற்​றுக்​கொண்​டனர். அதே​போல, இந்த எரிபொருள் மாற்​ற​மும் ஆரம்​பத்​தில் கேள்​வி​களை எழுப்​பி​னாலும், விரை​வில் மக்​கள் புரிந்து ஏற்​றுக் கொள்​​வார்​கள் என்ற நம்​பிக்கை உள்​ளது” என்​றார்.     சந்தை படுத்த முற்பட வேண்டும்

இராமர்பிள்ளை பெட்ரோல் மாதிரி  காலம் கடத்தி இழுத்து மூடிடக் கூடாது என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.  தமிழ் நாட்டு பிரமுகரின் கண்டுபிடிப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...