தே.மு.தி.க தலைவர் காலஞ்சென்ற நடிகர் விஜயகாந்தின் சகோதரி டாக்டர் விஜயலட்சுமி (வயது 78) இன்று காலமானார்.
டாக்டர் விஜயலட்சுமி, அண்ணாநகரில் வசித்தார். அவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவ நிபுணராக (Gynecologist & Pediatric Care Specialist) பல ஆண்டுகள் பணியாற்றி, ஏராளமான நோயாளிகளுக்கு மருத்துவச் சிகிச்சையளித்த பெருமைக்குரியவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது இறுதிச் சடங்கு ஊர்வலம் நாளை அண்ணாநகரில் அவரது இல்லத்தில் இருந்து நடைபெறுகிறது.
இந்த நிலையில், விஜயலட்சுமியின் இறுதிச் சடங்கு நாளை (10.9.2025) மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை, அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதாக தே.மு.தி.க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல், சமூக வட்டாரத்தினர் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். விசயராஜ்,(எ) விஜயகாந்த் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா இராமானுஜபுரம் கிராமத்தில் பிறந்தவர். தந்தை அழகர்சாமி நாயுடு, தாயார் ஆண்டாள்
இவருக்கு ஒரு வயதான போதே தாயார் இறந்து விட சிறு வயதிலேயே இவரது குடும்பம் மதுரைக்கு இடம் பெயர்ந்ததனால், விஜயகாந்த் மதுரையில் மேல மாசி வீதியில் சென்ட்ரல் சினிமா அருகில் வசித்து வந்தார்.
தொடக்க கால பள்ளிப் படிப்பை தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியிலும், மதுரை நாடார் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியிலுள்ள புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கியிருந்து 1966 ஆம் ஆண்டு முதல் 1968 ஆம் ஆண்டு வரை 9, 10 வகுப்புகளில் கல்வி கற்ற நிலையில்
சிறு வயதிலேயே சினிமா மீது கொண்ட ஆர்வத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. பத்தாம் வகுப்பு வரை தான் படித்தார். பிறகு தந்தையின் மேற்பார்வையில், கீரைத்துறை மாகாளிப்பட்டியில் இயங்கிய அரிசி ஆலையில் சிறு சிறு பணிகளைச் செய்தார். அதன் பின்னர் சென்னை வந்து படிப்படியாக முன்னேறி வளர்ச்சி கண்ட நிலையில் தனது 71 வது வயதில் காலமானார். அதேபோல் அவருக்கு சிறு வயது முதல் ஆதரவு காட்டிய சகோதரி 78 ஆம் வயதில் காலமானார்.




கருத்துகள்