மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்தம் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்த மாத துவக்கத்தில் அறிவிப்பை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அத்தியாவசிய பொருட்களின் விலை குறையுமெனத் தெரிவித்தார். புதிய ஜிஎஸ்டியின்படி 375 பொருட்களின் விலை குறையும் என அவர் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக, பால் சம்பந்தமான பொருட்கள், பற்பசை, பிரஷ், பல்வேறு வகையான தின்பண்டங்கள், பிஸ்கெட், சாக்லேட் போன்றவற்றின் விலை குறையும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஜிஎஸ்டி 2.0 அமலான செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதியே விலை குறைப்பு நடைமுறைக்கு வரும் என பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அறிவித்தார்.
புதிய ஜிஎஸ்டியின்படி அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்துள்ளதா? என்றால் இல்லை என்பதே பதில். ஆவின் பால் பொருள்களின் விலைகளை மாநில அரசு குறைத்ததா? என்பது எழுவினா?
ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்குப் பிறகும் தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் அதன் பால் பொருள்களின் விலைகளைக் குறைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி இன்று காலை சில தலைவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், ஜி.எஸ்.டி வரிக்குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அரசின் சார்பில் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவை செய்தியாக ஒலிபரப்பாகின்றன. ஆவின் பால்பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை; இது மக்களை ஏமாற்றும் முயற்சி என்பது தான் உண்மை.
ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்றவாறு பால் பொருள்களின் விலை குறைக்கப்பட வேண்டும். ஆனால், ஆவின் நிறுவனம் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, ஆவின் பால் பொருள்களின் அதிகபட்ச விற்பனை விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாத ஆவின் நிறுவனம், வரி எந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதோ, அதற்கு ஏற்றவாறு அடிப்படை விலையை உயர்த்தியுள்ளது.
எடுத்துக்காட்டாக ஒரு கிலோ நெய்யின் அதிகபட்சம் விற்பனை விலை ரூ.700. இதில் அடிப்படை விலை ரூ.625. 12 சதவீதம் ஜி.எஸ்.டி வரி ரூபாய்.75 ஆகும். ஆவின் நெய் மீதான ஜி.எஸ்.டி வரி 5 சதவீதம் ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மதிப்பு ரூபாய்.31 மட்டும் தான். அதன்படி ஆவின் நெய் ஒரு கிலோ ரூபாய்.656-க்கும் மட்டுமே விற்கப்பட வேண்டும். அமுல் , நந்தினி போன்ற பொதுத்துறை பால் நிறுவனங்கள் இந்த அடிப்படையில் தான் விலைக்குறைப்பு செய்துள்ளன. ஆனால், ஆவின் நிறுவனமோ ஒரு கிலோ நெய்யின் அடிப்படை விலையை ரூபாய்.625-லிருந்து ரூபாய்.669 ஆக உயர்த்தி அத்துடன் ரூபாய்.31 ஜி.எஸ்.டி விலை சேர்த்து அதிகபட்ச விலையாக ரூபாய்.700 நிர்ணயித்துள்ளது.
அதே நேரத்தில் ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் இந்த நாளில் விலையை குறைத்ததாகக் கணக்குக் காட்டும் நோக்குடன் இன்று முதல் நவம்பர் 30 வரை ஒரு கிலோ நெய்க்கு ரூபாய்.40 தள்ளுபடி வழங்குகிறது. இந்த தள்ளுபடியும் கூட ஆவின் நெய், பன்னீர் ஆகியவற்றுக்கு குறைந்த அளவில் தரப்படுகிறதே தவிர, பிற பால் பொருள்களுக்கு தரப்படவில்லை. அவை அதிக விலைக்குத் தான் விற்பனை செய்யப்படுகின்றன.
நவம்பர் மாதத்துடன் இந்த தள்ளுபடி ரத்து செய்யப்படும் நிலையில், டிசம்பர் மாதம் முதல் ஆவின் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலைகள் மீண்டும் உயர்த்தப்படும். மாநில அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் நடத்தும் இந்த நாடகங்கள் அப்பட்டமான ஊழல் மற்றும் திருட்டுத்தனம் ஆகும். இதன் மூலம் மக்களை ஏமாற்றி விடலாம் என்று மாநில அரசு நினைத்தால், அதுவே நிர்வாகச் சீர்கேடு ஆகும்.இது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயராம் ரமேஷ் கருத்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "இப்போது, நீங்கள் ரூபாய்.2.5 லட்சம் கோடி சேமிப்பு விழா பற்றிப் பேசுகிறீர்கள். பொதுமக்களுக்கு ஆழமான காயங்களை ஏற்படுத்திய பிறகு ஒரு எளிய பேண்ட்-ஏய்டைப் போடுகிறீர்கள்!
பருப்பு வகைகள், அரிசி, தானியங்கள், பென்சில்கள், புத்தகங்கள், மருத்துவ சிகிச்சை மற்றும் விவசாயிகளின் டிராக்டர்கள் என அனைத்திற்கும் நீங்கள் GST விதித்ததை பொதுமக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
உங்கள் அரசாங்கம் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!" மேலும், "நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், அரசியலமைப்பு அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சிலால் ஜிஎஸ்டி அமைப்பில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு பிரதமர் முழு உரிமை கோரினார். 8 ஆண்டுகளில் ரூபாய்.55 லட்சம் கோடிக்கு மேல் வசூலித்தது.
இப்போது, நீங்கள் ரூ.2.5 லட்சம் கோடி சேமிப்பு விழா பற்றிப் பேசுகிறீர்கள்.
ஜிஎஸ்டி 12 சதவீதம் 28 சதவீதம் வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு ஆகியவை நேற்று செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி சூரிய உதயத்தில் ஜிஎஸ்டி சேமிப்பு விழா தொடங்கும் என்று தெரிவித்தார். பிரதமர் நரேந்திர
மோடியின் உரையை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், "காங்கிரஸ் கட்சியின் எளிமையான மற்றும் திறமையான GST-க்கு பதிலாக, உங்கள் அரசாங்கம் ஒன்பது தனித்தனி அடுக்குகளைக் கொண்ட "கப்பர் சிங் வரி"யை விதித்தது, 8 ஆண்டுகளில் ரூபாய்.55 லட்சம் கோடிக்கு மேல் வசூலித்தது.ஜூலை மாதம் 2017 ஆம் ஆண்டு முதல் நாங்கள் ஜிஎஸ்டி 2.0 ஐ கோரி வருகிறோம். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான எங்கள் தேர்தல் அறிக்கையில் இது ஒரு முக்கிய வாக்குறுதியாகும்.
தற்போதைய ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் போதுமானவையல்ல. வேலைவாய்ப்பை உருவாக்கும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSMEs) கவலைகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை.
ஜவுளி, சுற்றுலா, ஏற்றுமதி, கைவினைப் பொருட்கள் மற்றும் விவசாயத் துறைகளில் உள்ள பிரச்சினைகள் கவனிக்கப்படவில்லை.
மின்சாரம், மதுபானம், பெட்ரோலியம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர மாநிலங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.
மாநிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய வணிகங்கள் அச்சத்தினாலும், ஒருசிலரின் ஆதிக்கத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளது. எட்டு வருடங்கள் தாமதமான இந்த ஜி.எஸ்.டி. மாற்றங்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உண்மையில் உயர்த்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.






கருத்துகள்