முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாமகவில் ஜி.கே.மணியின் சட்டமன்ற குழுத் தலைவர் பதவி நீக்கம் புதிய தலைவராக வெங்கடேஸ்வரன் தேர்வு

பா.ம.க.வின் 5 சட்டமன்ற உறுப்பினர்களில் ஜி.கே.மணியுய், சேலம் இரா.அருளும் மருத்துவர் ராமதாஸ் அணியில் உள்ளனர்.


மற்ற மூவரும் மருத்துவர் அன்புமணி அணியில் இருக்கின்றனர். இதற்கிடையே, அடுத்த அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டசபை கூடுகிறது இந்த நிலையில் மருத்துவர் அன்புமணி தரப்பினர் வழக்கறிஞர் கே.பாலு தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபைச் செயலாளர் சீனிவாசனைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அதில், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து ஜி.கே.மணியையும், கொறடா பொறுப்பில் இருந்து அருளையும் நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர் இந்த நிலையில்

ஜி.கே.மணியின் பதவி பறிக்கப்பட்டது.. அவருக்குப் பதிலாக பாமக சட்டமன்றக் குழுத் தலைவராக தர்மபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டார்.


கடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க. 5 இடங்களில் வெற்றி பெற்றது. சட்டமன்றக் குழுவின் பா.ம.க. தலைவராக ஜி.கே.மணியும், கொறாடாவாக சேலம் மேற்குத் தொகுதி உறுப்பினர் இரா.அருளும் இருந்தனர்.

இந்த நிலையில், தற்போது பா.ம.க.வில் பிளவு ஏற்பட்டு கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஒரு சிறிய அணியும், கட்சியின் தலைவரான மருத்துவர் அன்புமணி தலைமையில் ஒரு பெரிய அணியும் செயல்படுகிறது.

பா.ம.க.வில் உள்ள 5 எம்.எல்.ஏ.க்களில் ஜி.கே.மணி, அருள் ஆகியோர் மருத்துவர் ராமதாஸ் அணியில் உள்ளனர். மற்ற மூரும் மருத்துவர் அன்புமணி அணியில் உள்ளனர் இந்த நிலையில் வழக்கறிஞர் கே.பாலு தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபைச் செயலாளர் சீனிவாசனைச் சந்தித்து மனு அளித்ததில், பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து ஜி.கே.மணியையும், கொறடா பொறுப்பிலிருந்து இரா அருளையும் நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.



அதன்பின்னர், வெளியே வந்து சட்டசபை வளாகத்தில் வழக்கறிஞர் கே.பாலு செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

பாமக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட இரா.அருள் எம்எல்ஏ அந்தக் கட்சியைச் சேர்ந்தவர் போல பேசி வருவது நிர்வாகிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இரா.அருளை சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே பதிவு செய்ய வேண்டும். பாமகவின் தலைவரின் பதவிக் காலத்தை நீட்டித்து அதற்கான தீர்மானத்தை இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தோம். அவர்கள் எங்களுடைய கோரிக்கைகளை பரிசீலனை செய்து செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி அதற்கான ஒப்புதல் அளித்துள்ளனர். அதில், பாமக தலைமை அலுவலகம் சென்னை தியாகராயநகர் திலக் தெருவில் இருப்பதையும், பாமகவின் தலைவர் மருத்துவர் அன்புமணி என்பதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.தேர்தல் நேரத்தில் கட்சியின் சின்னம் வேட்பாளர் ஆகிய ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் மருத்துவர் அன்புமணிக்கே உள்ளது என்ற அதிகாரம் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது. மாம்பழம் சின்னமும்  ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் மருத்துவர் அன்புமணியையே தலைவராக ஏற்று செயல்பட்டு வருகின்றனர்.



பாமகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக இருந்த ஜி. கே. மணியின் பதவி பறிக்கப்பட்டு அந்தப் பதவியில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், பாமக சட்டமன்றக் கொறடாவாக விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான கடிதத்தை சட்டமன்றச் செயலகத்திடம் அளித்தும் அதற்கான பதில் தற்போது வரை கிடைக்கவில்லை. அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பாமகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவுவிடம் தெரிவித்துள்ளோம். இது தொடர்பாக வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பரிசீலனை செய்து உரிய அங்கீகாரத்தை பெற்றுத் தருவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.


அனைத்துக் கட்சிக் கூட்டம் உள்ளிட்டவற்றுக்கு எங்களையே அழைக்க வேண்டும். மேலும் பாமக எம்.எல்.ஏ.க்கள் 5 பேரில் 3 பேரின் ஆதரவு கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணிக்கே உள்ளது. கர்நாடகா, டெல்லி, ஆந்திரப்பிரதேச மாநிலத் தேர்தல்களில் பாமக போட்டியிட்டுள்ளது. எதிர்வரும் பீஹார் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை தான் முடிவு செய்யும் ".எனக் கூறினார்.

இதனிடையே கட்சியிலிருந்து நீக்கம் செய்த பாமக மாநில இணைப்பொதுசெயலாளர் இரா.அருள், எம்.எல்.ஏ. தமிழ்நாடு தலைமைச்செயலாளரிடம் அளித்த மனுவில்:-


எங்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் சமீபகாலமாக நெருக்கடியான சூழலும், குழப்பங்களும் நிலவி வருவதை தாங்கள் நன்கு அறிவீர்கள். பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கிய மருத்துவர் ராமதாஸ் தொடர்ந்து 46 ஆண்டு காலம் இயக்கம் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் பாமகவினர் மத்தியிலும், பொதுமக்கள், அனைத்து கட்சித்தலைவர்கள், அரசு அலுவலர்கள் மத்தியிலும் அரசியலில் மூத்த தலைவர் மருத்துவர் ராமதாஸ் மக்கள் மேம்பாட்டுக்கு, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு வருபவர் என்பதை அனைவரும் அறிவர்.

மருத்துவர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக செயல்பட்டு வருகிறார். தற்போதைய பாமகவின் நெருக்கடியான குழப்பமான சூழ்நிலையில் மருத்துவர் ராமதாஸ் அடிக்கடி வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதால் அவருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு போதுமானதாக இல்லை.



எனவே அவருடைய பாதுகாப்பைக் கருதி முழுநேரமும் மருத்துவர் ராமதாஸ் வசித்து வரும் தைலாபுரம் தோட்டம் மற்றும் அவர் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் இடங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் தைலாபுரம் தோட்டத்திற்கு மருத்துவ ர் ராமதாஸைச்  சந்திக்க வருவோர் அனைவரையும் பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்கும் வகையில் நுழைவாயிலில் பரிசோதனைக் கருவி (Metal detector) அமைத்திட கேட்டுக்கொள்கிறோம். னத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  மேலும் நானே பாமக கொறடா மருத்துவர் ன்புமணி தரப்பினரால் என்னையோ, ஜி.கே.மணியையோ கட்சியில் இருந்தும் சட்டமன்ற குழு பொறுப்பில் இருந்தும் நீக்க முடியாது மருத்துவர் ராமதாஸ் கடிதம் கொடுத்துள்ளார், நானே பாமக கொறடாவாகத் தொடர்கிறேன் என்றார் பாமக எம்.எல்.ஏ. சேலம் இரா. அருள். ஆனால் ஜி. கே. மணியை நீக்கி பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தருமபுரி சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தான் என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். டெல்லி தரப்பிலிருந்து கிடைத்த செய்திகளின் படி ஜி. கே. மணி தரப்பில் சென்ற பிரதிநிதிகளை தேர்தல் ஆணையத்தில் உள்ளே விடவில்லை  என்ற தகவலும் உலா வருகிறது.

பென் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களில் ஜிகே மணியின் டெல்லி பயணம் குறித்து பெரிய அளவில் கவர் செய்வதால் என்ன தான் ஆனது என டெல்லி சோர்ஸ்சிடம் விசாரித்த நிலையில் அங்கே பெரிய நகைச்சுவை தான் நடந்துள்ளது.


ஜிகே மணியின் குறைதீர்க்கும் புகார் மனு கடிதத்தை வாங்கிய தேர்தல் கமிஷனர் யார் க்ரீவன்ஸ் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்களாம் இனி நீங்கள் டில்லி வரவேண்டாம், சென்னையில் சீஇஓ (சீஃப் எலக்சன் ஆஃபிசர்) ஆபிசில் கொடுத்து விடுங்கள் என சொல்லிவிட்டார்.  அதன் பின் எலக்சன் கமிஷன் ஆபிஸ் அருகில் உள்ள இடத்தில் நின்று பேட்டி கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டார்கள். இவர்களுக்கும் தெரியும் ஒன்றும் நடக்காது என, ஆனால்  இவர்களை மறைமுகமாக இயக்கும் ஒரு கட்சி அசைன்மெண்ட்டுக்காக குழப்பம் செய்கிறார்கள், அவ்வளவு தான் .உண்மையில் சொல்லப்போனால் இனி இங்கே வராதீர்கள் என துரத்தி விட்டுள்ளார்கள்  டில்லியில்.தேர்தல் கமிஷனுக்கும் பாமகவில் யார் கூட்டணி பேச அதிகாரம் உண்டு என சொல்வதற்கும் என்ன தொடர்பு? ஏன்  ஜிகே மணி மற்றும் மருத்துவர் ராமதாஸ் ஆதரவாளர்கள் கூட்டணி பேச மருத்துவர் ராமதாஸ்க்கு தான் அதிகாரம் என்பதை தேர்தல் கமிசனுடன் இணைத்து புலம்புகிறார்கள்? ஏனெனில் அவர்களுக்கு குழப்பம், தேர்தல் கூட்டணிக்கு நம்மிடம் பேச மறுக்கும் கட்சி மருத்துவர் அன்புமணி உடன் பேசுகிறதோ என.

மருத்துவர் ராமதாஸ் ஜி.கே. மணி டீமுக்கு இன்னொரு தகவலையும் சொல்கிறது மருத்துவ ர் அன்புமணி தரப்பு, கூட்டணி பேச்சுவார்த்தையில் முதல்கட்ட உடன்பாடு எட்டப்பட்டு  அடுத்த கட்டமாக தொகுதி அடையாளம் காணும் பணி நடக்கிறது. ஏ கிரேட் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.  போய் தொடர்ந்து புலம்புங்கள் மருத்துவர் ராமதாஸ் தான் கூட்டணி பேசும் அதிகாரம் என. ஆனால் இங்கே கூட்டணி அறிவிப்பு மட்டும் தான் பாக்கி. என்னும் தகவல் வருகிறது அதற்கு முன் ஜி. கே. மணி பதவிக்கு வேட்டு வைத்து கடிதம் வழங்கிய நிகழ்வு பாமக தொண்டர்கள் மத்தியில் வரவேற்பை பெறுகிறது.தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மிகச் சிறந்த களப்போராளியான மறைந்த பெரியண்ணன்(தற்போது திமுகவை சேர்ந்த இன்ப சேகரனின் தந்தை) அவரை திமுகவுக்கு செல்ல வைத்தவர் ஜி.கே.மணியேயே சாரும்.

அதே போன்று இன்றும் நமது நண்பர் ஓமலூர் தமிழரசு கட்சியில் இருந்து வெளியோற்றியதும் இதே ஜி.கே.மணியால் தான் பலமுறை அவர் நம்மிடம் கலந்து பேசியது உண்டு.


இன்னும் வெளியே தெரிய வராமல் பலரை பாமக வில் இருந்து ஒழித்து கட்டிய படுபாதகனாக பலரும் பார்க்கும் இந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஜி.கே .மணி.

மருத்துவர் அன்புமணி ராமதாஸை தந்தையிடம் இருந்து பிரிக்க முயன்று வருகிறார் என்பதை இன்று பலரும் வெகுவாக உணர்ந்து கொண்டனர். 

இப்படி ஒருவர் வாழ்ந்து பிறரையும் நாசம் செய்து கொண்டு வருவதை மருத்துவர் ராமதாஸ் ஏனோ உணர மறுக்கிறார். என்பது தான் கட்சி பிரமுகர்கள் மத்தியில் உள்ள சிந்தனை.முன்னால் சட்டமன்ற உறுப்பினர் காவேரி அதைத்தான் பாமகவின் 

ஜி.கே.மணி நாரதர் இவர் கட்சியை கெடுப்பாரு, உங்களுக்கு ஆபத்து வரும் என 2011 ஆம் ஆண்டில் மருத்துவர் ராமதாஸிடம் ரிப்போர்ட் கொடுத்தது . இன்று உண்மை என்றாகிறது.                                                விறகுக் கடைக் காரனின் கண்களுக்கு .வீணை கூட எடைக் கணக்கில் தெரியும்

 நாம்முடைய பொதுப் பார்வைக்கும் ஊழல் வாதிகளின் பார்வைக்குமான் வித்தியாசம் அது, என்ன பார்வையில் நாம் யாராகிறோம் என்பதே இப்போதைய பயணம்.          பார்வை மிக முக்கியம்!                              சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சொத்துக்களை வாங்கிக் குவிக்கும் முன்னால் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஜிகே மணி ன்னைத்தானே சாமான்யன் எனக் கூறிக்கொள்ளும் ஜி.கே.மணி  அவரது மகன் தமிழ்குமரன் பெயரில் ஏற்காட்டில் 42 ஏக்கர் எஸ்டேட்டை வாங்கியுள்ளார். அதன் சந்தை மதிப்பு 85 கோடி ரூபாய் என்கிறார்கள். அவர் லைகா சிஇஓ மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கிரஷர் நடத்துவதும் இவர் தானாம்.

இவர் பெரும் பணக்காரராக இருப்பது தெரியாமல் இருக்க தனது குடும்பத் திருமண செலவுகளுக்காக கட்சிக்காரர்களிடம் பணம் வசூல் செய்ததும், புடவைகள் வாங்கிக்கொடுக்க சொன்னதும் எந்த விதத்தில் நியாயம்

இவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு, தனது காருக்கு டயர் மாற்றக் கூட பணம் இல்லை என்று மருத்துவர் ராமதாஸ் முன்பு நாடகம் ஆடுவது ஏன்? எனக் கேட்கும் கட்சிக்காரர்கள். மத்தியில் இதுவரை கட்சி அடமானம்  கரண்ஸி வருமானம் ன வாழ்ந்த ஜி. கே. மணியின் சட்டமன்றக் கட்சி பதவி பறிப்பு கட்சி தொண்டர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.தற்போதைய பாமக கடிதத்தின் படி, வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பாமக சட்டப்பேரவை குழுத் தலைவர் வெங்கடேசனுக்கு முன் வரிசையில் இருக்கை  ஒதுக்கப்பட வேண்டும். ஜி.கே.மணி பாமகவில்   பேராசிரியர் தீரணுக்குப் பின் 25 ஆண்டுகளாக தலைவராக இருந்தவர், அனைத்துத் தேர்தலிலும் போட்டியிட்டவர். கட்சிக்காக உழைத்ததை விட அவருக்காக நிறைய உழைத்தவர். அவர் சமீபத்தில் கட்சிக்கு எதிராக சொல்லும் கருத்துகள் வருத்தமளிக்கிறது. எனவே அவரை சட்டப்மன்றப் பேரவைக் குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து மட்டும் விடுவித்துள்ளோம், கட்சியிலிருந்து இன்னும் நீக்கவில்லை” என்றார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...