திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் .வி. சரவணன் உத்தரவு படியும்
திருச்சிராப்பள்ளி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி மற்றும் திருச்சிராப்பள்ளி சரக காவல்துறைக் கண்காணிப்பாளர் வின்சென்ட் பரிந்துரையின் படி திருச்சிராப்பள்ளி அலகு காவல் ஆய்வாளர் அரங்கநாதனால் கடந்த 04.09.25- ஆம் தேதி 5500 கிலோ ரேஷன் அரிசி வைத்திருந்ததற்காக கைதுசெய்யப்பட்ட திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை தாலுகா தொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் ரத்தினம் என்பவர் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நபருக்கு இவ்வளவு குடிமைப்பொருள் அரிசி எப்படி வந்தது மற்றும் அவருக்கு விற்பனை செய்த அல்லது ஊழல் செய்த அலுவலருக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது என்பது குறித்து இங்கு எதுவும் குறிப்பிடப்படவில்லை. அரசு அலுவலர் மற்றும் பணியாளர் ஆதரவில்லாமல் இவர் குடிமைப் பொருள் அரிசி வைத்திருக்க முடியாது என்பது பின்னர் நடக்கும் நீதிமன்ற விசாரணை மூலம் தான் வெளிவரும்

கருத்துகள்