முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுகவில் ஆளுமையை இழப்பது சிலுவம்பாளையமா, குள்ளம்பாளையமா உண்மை நிலை

அதிமுக கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் மற்றும் எடப்பாடி கே.பழனிச்சாமி நீக்கம் செய்தவர்களை பத்து நாளில் இணைக்க எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு கே.ஏ.செங்கோட்டையன் காலக்கெடு


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்குப் பின்னர் கட்சியிலிருக்கும் பிரமுகர் இன்று முடிவுகளை தெரிவிக்கவுள்ளதாக கூறிய நிலையில். 


 கோபிசெட்டிபாளையத்தில்  வீட்டிலிருந்து பிரசார வாகனத்தில் ஊர்வலமாகக் கட்சி அலுவலகத்துக்கு காலையில் செங்கோட்டையன் வந்தார். பிரசார வாகனத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய படங்கள் இடம்பெற்றன.

சாலைகளின் இரண்டு பக்கமும் கூடியிருந்த மக்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பளித்தனர். கட்சி அலுவலகத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் செங்கோட்டையன் பேசியதாவது:




1972 ஆம் ஆண்டு அதிமுக கட்சி தொடங்கியபோதே கிளையைத் தொடங்கி பணியாற்றினேன். என்னை பொருளாளராக நியமித்து கோயம்புத்தூர் பொதுக்குழுவை நடத்தச் சொன்னவர் எம்ஜிஆர். சிறப்பாக நடத்தியதற்காக என்னை பாராட்டினார். சத்தியமங்கலம் தொகுதியில் என்னை போட்டியிட வைத்தார்.

நாட்டின் சிறந்த முதல்வரான எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவை தலைமையேற்க வேண்டுகோள் வைத்தோம். அவர், உலகமே திரும்பிப் பார்க்க வைத்த ஆளுமைமிக்க சிறந்த ஆட்சியை நடத்தினார். ஆன்மிக வாதிகளும் திராவிடர்களாலும் ஏற்றுக் கொள்ளும் ஆட்சியை நடத்தினார்.



அவர் மறைந்த பின், பல்வேறு சோதனைகள் வரும்போது அனைவரும் சேர்ந்து இயக்கம் உடைந்து விடக் கூடாதென்று வி.கே.சசிகலாவை பொதுச் செயலாளராக ஒருமனதாக நியமித்தோம். முதல்வராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரை வி.கே.சசிகலா நியமித்தார்.

தமிழகத்துக்காகவும் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சிக்காகவும் அனைத்து தியாகங்களையும் செய்துள்ளேன். இரண்டு வாய்ப்புகள் வந்த போதும் இயக்கம் உடைந்து விடக் கூடாது என்பதற்காக மறுத்தேன்.

2016 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு சந்தித்த அனைத்துத் தேர்தல்களிலும் பல்வேறு சவால்களைச் சந்தித்தோம். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தால் 30 தொகுதிகளில் வெற்றி பெற முடியும் எனக் கூறினோம். வெளியில் சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் மட்டுமே நம்மால் வெற்றி பெற முடியும் என வலியுறுத்தினோம். ஆனால், கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவரில்லை.


வெற்றி வாகை சூடி நல்லாட்சியைத் தமிழ்நாட்டில் தருவதற்கு அனைவரையும் அரவணைத்து கட்சியில் சேர்க்க வேண்டும். இதனை விரைந்து செய்தால் தான் தேர்தல் களத்தைச் சந்திக்க முடியும்.

அனைவரையும் மீண்டும் இணைத்தால் மட்டுமே பொதுச் செயலாளரின் பிரசாரத்தில் பங்கேற்பேன். இணைக்காவிட்டால் ஒரே மனப்பான்மையில் இருப்பவர்கள் ஒன்றிணைவோம்.” எனத் தெரிவித்தார் கே.ஏ.செங்கோட்டையனின் பேட்டி தொடர்பாக, அ.தி.மு.க வின் முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஜெயலலிதா கூறியது போல 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காக இயங்கும். எந்த சக்தியாலும் அழிக்க முடியாத இயக்கம் என்பதை கே.ஏ.செங்கோட்டையன் நிரூபித்துள்ளார்' எனவும்  பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களில் கே.ஏ.செங்கோட்டையன் உடன் இருந்துள்ளதாகக் கூறியுள்ள முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே சசிகலா, ' தனது உடலில் ஓடுவது அ.தி.மு.க ரத்தம் தான் என்பதை அவர் நிரூபித்துள்ளார்' எனத் தெரிவித்துள்ளார்.

'அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என்பது தான் அ.தி.மு.க தொண்டர்களின் கருத்தாகும். தமிழக மக்களின் கருத்தும் இது தான். கே.ஏ.செங்கோட்டையன் போன்ற உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை எந்தவிதத்தில் தி.மு.க முயற்சி செய்தாலும் அவர்களின் எண்ணம் ஈடேறாது' எனவும் மேலும் வி.கே.சசிகலா நடராஜன் அதில் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து தனது அறிக்கையில், 'எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இந்த இயக்கம், காட்டாற்று வெள்ளம் போன்றது. அ.தி.மு.க ஒன்றுபடுவதற்கு எதிராக எத்தனை தடை போட்டு தடுத்தாலும் அவற்றைத் தவிடுபொடியாக்கி 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அரசை வீட்டுக்கு அனுப்புவது உறுதி' எனக் கூறியுள்ளார்.

'ஒன்றுபட்ட அ.தி.மு.க தான், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வழிவகை செய்யும்' எனவும் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார் தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "அ.தி.மு.கவை தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை கட்சிக்காக கே.ஏ.செங்கோட்டையன் உழைத்து வருகிறார். பல்வேறு பிரச்னைகள் வந்த போதும் இயக்கத்தையும் அனைத்து மக்களையும் அரவணைக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார்" எனக் கூறினார் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய வினாவுக்கு 


"இது அ.தி.மு.கவின் உள்கட்சி விவகாரம். இதில் நான் கருத்துக் கூறுவது சரியானதாக இருக்காது. அவர்கள் இதுவரை ஒன்றாக இருந்தனர். அவர்கள், தங்களின் கருத்தைப் பேசுகின்றனர். அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தி.மு.க ஆட்சியை அகற்ற முடியும்" எனக் கூறினார்.

எடப்பாடி கே பழனிசாமிக்கு பத்து நாள் கெடுவை கே.ஏ.செங்கோட்டையன் விதித்தது குறித்துப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனக் கூறுவது நல்ல விஷயம்" எனத் தெரிவித்தார் அரசியலில் எதுவும் நிரந்தரமாக இருக்காது. தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் உள்ளன. கடைசி ஒரு மாதத்தில் கூட மாற்றம் வரலாம். ஆட்சி மாற்றமும் காட்சி மாற்றமும் நடக்கும்" என்றார்.நீண்ட காலம் பேசாத கே.ஏ.செங்கோட்டையன் தற்போது வெளியிட்ட கருத்து கட்சியில் என்ன நடக்கும், அண்ணா திமுகவுக்கு எதிராக வழக்குப் போட்டவங்க வாபஸ் வாங்கினால் அது பற்றி பரிசீலிக்கலாம் என  எடப்பாடி கே பழனிச்சாமி தரப்பில் பதில் சொல்லலாம்.

வழக்குகளை வாபஸ் வாங்கினாலும் பின்னால் ஏதாவது ஒரு காரணம் சொல்லி  கே.ஏ. செங்கோட்டையன் தரப்புக்கு வேறு ஏதாவது ஒரு காரணத்தால் அனுமதி இல்லை எனக் கூறலாம்.

வி.கே.சசிக்கலா நடராஜன் சார்ந்த உறவுகள் வரவாகி உள்ளே விட்டால் தன்னை கட்சியில்  காலி  பண்ணிடுவாங்கன்னு ஒரு பயம் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கும் அந்த மாற்றுக் கருத்து சசிகலா எதிர்ப்பாளரான ஒரு ஆடிட்டருக்கும்  கண்டிப்பாகத் தெரியும்.

அதனால் வெளியே உள்ள அதிமுகவினருடன் நீங்களும் சேர்ந்து போய் ஆலோசியுங்கள் என கே.ஏ.செங்கோட்டையனை அதிமுக கட்சியிலிருந்து நீக்கலாம்.. அதன் பின்னர் பழனிச்சாமியா செங்கோட்டையனா என்பது தற்போது ஐந்து கூறாக உடைந்த நிலையில் உள்ள அதிமுக ஆறாவதாக உடைவதில் யாரிடம் கட்சி தங்கும் என்பதே அரசியல் கே.ஏ.செங்கோட்டையன் ஓ.பன்னீர் செல்வம் போல செயலற்ற தலைவரில்லை, இனி  

இப்படி நிறைய 'விபரமெல்லாம்' இருக்கிறது. ஆனால் பொது நீதி யாதெனில் 


பாஜகவால் விஷம் கொடுத்தும் கொல்ல முடியும்  வெல்லம் கொடுத்தும் கொல்ல முடியும். என்பதே தற்போது உள்ள நிலை.

அதன் வெளிப்பாடு தான் கே.ஏ. செங்கோட்டையன் பேச்சுக்கு ஆதரவாக எல்லோரையும் விட பாஜகவினர் அதிகமாகவே தற்போது துள்ளிக் குதிப்பது.

நமக்கு புரிவது இதுதான்.இன்று கே.ஏ.செங்கோட்டையன் அதிமுக கட்சியைக் காப்பாற்ற  நடக்கும் முயற்சி என்பது பலர் கூறும் நிலையில் உடைக்கிறார் என எடப்பாடி கே பழனிச்சாமி தரப்பில் பேசும் 

நிலையில் அமமுக 

டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் வி.கே.சசிகலா நடராஜன் எல்லாம் இனி கே.ஏ.செங்கோட்டையனோடு  ஐக்கியமாகி 

மொத்தமாப் போய் நடிகர் விஜய் நடத்தும் த வெ க கட்சியுடன்  கூட்டணி சேர்வார்கள் 

கட்சி உடைஞ்சு சின்னம் முடங்கி ஊழல் மற்றும் கொட நாடு கொலை கொள்ளை வழக்கில் இழுபட்டு எடப்பாடி கே பழனிச்சாமி மொத்த பணமும் இழந்த நிலையில் நடுத் தெருவுக்கு வருவார்!!

தங்கமணி வேலுமணி உள்ளிட்ட பலரும் பாஜகவுக்கு ஆதரவு  தருவார்கள்

இப்படி அதிமுக சப்ஜாடாக முடிஞ்ச பிறகு,  அமித்ஷா வருவார் பாஜகவின் தலைமையில் கூட்டணிக்குத் தலைமை தாங்கள் தான் என பேசி முடிப்பார்கள்  அதில் பிரேமலதா தலைமையில் உள்ள தேமுதிக, மருத்துவர் அன்புமணி தலைமையில் பாமக ஜான் பாண்டியன் கட்சி, கிருஷ்ணசாமி கட்சி, மருத்துவர் ராமதாஸ் தலைமையில் உள்ள பாமக 

எல்லாம் அமீத்ஷா ஜீ க்கு  நமஸ்காரம்  செய்வார்கள்!! 

 எடப்பாடி கே.பழனிச்சாமியால் வலுவாய் தோன்றிய தற்போது உள்ள கூட்டணி  தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு சவாலாய் தோன்றி நிற்கும்!மூன்று முறை முதல்வராகவும் ஒரு முறை துணை முதல்வராகவும் இருந்த தலைவர் பதவிக்கு கொஞ்சம் கூடத் தகுதியே இல்லாத பெரியகுளம் தேனீர் கடை ஓ.பன்னீர் செல்வத்தை  அகற்றி விட்டு, தமக்குத் தோதான கரப்ஷன் கட்டிங் கலெக்ஷன்  சரியாகத் தந்து கொண்டிருந்த பொதுப்பணித்துறை அமைச்சரான எடப்பாடி கே.பழனிச்சாமி யை  கூவத்தூரில் வி.கே. சசிகலா நடராஜன் ஆதரவாளர்கள் முதல்வராக்காமல் இருந்திருக்கலாம், தற்போது மேலிட அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டு கையறு நிலையில் பின்னர் அரசனும் கைவிட அனாதை அரசியல் வாதிகள் பட்டியலில் இருக்கும் ஓ.பன்னீர் செல்வத்தையே தொடரவிட்டிருக்க வேண்டும். இல்லையேல் கல்வி அமைச்சராக இருந்த கே.ஏ.செங்கோட்டையனைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். சில்லறை (கட்டிங் கப்பம்) கணக்கைப் பார்த்து மொத்த த்தையும் இழந்தது வி.கே.சசிகலா நடராஜன் டீம். இறுதியில் வழிகாட்டி முனைவர் ம.நடராஜனையும் பறிகொடுத்த நிலையில் இப்பவும் சொல்வது யாதெனில் கூட்டணி சீட் பகிர்வில் எடப்பாடி கே பழனிச்சாமி எப்படியும் காலை வாரி, முதுகில் குத்தத்தான் போகிறார். எடப்பாடி கே.பழனிச்சாமியை முதலமைசர் ஆக்குவது நமது கடமை என்று பாஜகவின் அண்ணாமலை  சொல்லியது, எப்படியாவது டிடிவி தினகரன் ஓபன்னீர் செல்வம்  மற்றும் வி.கே.சசிகலா நடராஜன் டீமை கூட்டணிக்குள் கொண்டு வந்து ஓட்டு சிதறலை தடுக்கத்தான். ஆனால் எடப்பாடி கே.பழனிச்சாமியின் சுய ஆணவம் மீண்டும் திமுக ஆட்சிக்குத் திட்டம் வகுத்து கொடுத்து விடலாம்ஆடிட்டர் கருத்து இது 

“ஓபிஎஸ், டிடிவி NDA கூட்டணியை விட்டு வெளியேறியதாக நான் நினைக்கவில்லை. இந்த நிலைமை மாறக்கூடும். 8 மாதங்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவர வேண்டும் " என்பதில் பாஜக உறுதியாக உள்ளது"

தனியார் தொலைக்காட்சிக்கு  ஆடிட்டர் குருமூர்த்தி அளித்தபேட்டியில்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...