நிச்சயமாக நாய்க் காதலர்கள் வாழும் தெருக்கள் அடையார் போர்ட் கிளப், மேற்கு மாம்பலம், தி.நகர் போயஸ் கார்டன் அண்ணா நகர் பெசன்ட் நகர் மடிப்பாக்கம் நங்கநல்லூர், போன்ற இடங்களின் தெருக்கள் எல்லாம் நாய்களுக்கு சொந்தமில்லை,
முக்கியமாக நாய்க் காதலர்கள் வாழும் அப்பார்ட்மெண்ட்டுக்குள் முற்றிலும் அனுமதி இல்லை கிராமங்களில் வாழும் நாய்கள் நகரத்தில் தெருக்களில் நடமாட உரிமையில்லை, பாதுகாப்பு மையங்களில் சேர்க்க நடவடிக்கைகள் தான் இதுவே டில்லி தீர்ப்பு சாராம்சம் அது மனிதனுக்காக மனிதன் உருவாக்கியது, ஒரு சிலருக்காக (விலங்குகள் ஆர்வலர்) எதையும் பொதுமைப் படுத்த முடியாது.
வெளிநாட்டு வகை நாய்களின் விற்பனையை தடை செய்தால் தெரு நாய்களின் எண்ணிக்கையும் குறையும். அதையும் செய்யமாட்டார்கள். வீட்டில் வெளிநாட்டு வகை நாயை வளர்ப்பதை ஒரு சில மனிதர்கள் தாயை முதியோர் இல்லத்தில் அடமானம் வைத்துவிட்டு நாயை கெளரவமாக நடத்தி வளர்க்கும் அற்ப பதர்கள் வாழும் நிலையை பலரும் அறியலாம். அதை கார்பொரேட் நிறுவனங்கள் கொண்டு வந்து விட்டன.
அதுவே அப்பத்தா திரைப்படம் கூறும் கதை நாய் விற்பனை அதுக்குரிய உணவு மருந்து என்று முழுவதும் கார்ப்பரேட் மயமாகிப் போனதால் நாட்டு நாய் வளர்ப்புக் குறைந்து அது தெருக்களில் சுற்றித் திரிகின்றன. சிலரை 1985-90 காலகட்டத்தில் பெற்றோர்கள் திட்டும் போது நல்ல நண்பர்கள் சேர்க்கை குறித்து எச்சரிக்கை இது
"கண்ட கண்ட நாய் பின்னாடி எல்லாம் சுத்தாதே. பின்னாளில் நாலு நாய் நாலு விதமாக தான் பேசும். உனக்கான நாய் உன்னைத் தேடி வரும். அந்த நாய்காக நீ நாயாக உழை. நாயாக லோள் பட்டாலும், குடும்பத்தை காப்பாற்று. கல்லடி பட்டாலும் கடனை அடைத்து விடு" இதுவே. அந்த நாயும் இப்போது இல்லை ஆனால் அந்த திட்டிய பெற்றோரும் இப்போது இல்லை கால மாற்றம் நாய்கள் ஆபத்தானதோ இல்லையோ, நாய்களை ஆதரிப்போர் ஆபத்தானவர்கள். மனநோயாளிகள், மக்களைப் பிடிக்காத ஜென்மங்கள், அயல்நாட்டுக் கைக்கூலிகள், துணை நடிகைகள் வேற்றுக் கிரக வாசிகள் என அவர்களின் செயல்பாடுகளை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
புதிய வனத் திருத்தச் சட்டங்கள் வந்த பின்னர் கிராமத்தில் வேட்டை நாய்கள் எனும் கண்ணி நாய்கள் மற்றும் இராஜபாளையம் நாய்கள் கோம்பை நாய்கள் ஆகியவை காணாமல் போக அயல்நாட்டு நாய்கள் தற்போது ஆக்கிரமிப்பு மற்றும் வியாபார யுக்தி பல நாட்டு பீட்டாக்களின் படையெடுப்பு இந்தியாவிலும் அயலர்களின் அக்கிரமம் பிரவேச நாய்களின் ஆக்கிரமிப்பு நாய்க்கடி காரணமாக ஓசியில் ஊசி போட்ட அரசு மருத்துவமனையிலும் கால்நடை மருத்துவர்களும் காஸ்ட்லி ஆன நிலை வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 5- ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 31- ஆம் தேதி வரைக்கும், 'நாய்கடித்' தாக்குதல் குறித்து மொத்தம் 25 சம்பவங்களை பதிவு பண்ணியிருக்கும் நாமறிந்த ஒரு மூத்த பத்திரிகையாளர் . அதாவது
அரசு பொதுமருத்துவமனைகளில் வெறிநாய்க்கடி 'அட்மிட்' ஆன வார்டுகளைக் கூட எட்டிப் பார்க்காதவர்கள் ஏதேதோ எழுதுகிறார்கள்.
நாயா நானா என தொலைக்காட்சி விளம்பரங்களுக்காக. அந்த தொலைக்காட்சி பரவாயில்லை நாய் குறித்து நோக்கி நாய் என பரிசளிப்பு ஒரு கூலி நடிகையே நீ தூக்கி நாய் நீவி நாய் கொஞ்சி நாய்...
பால் புகட்டி நாயே பொறை ஊட்டி நாயே பேர் சூட்டி நாயே பரிவு காட்டி நாயே. என்பதாக நாய்க் காதலராகப் பேசுகிறார். ஆனால் நாம் கேட்பது இவ்வளவு பேசும் நடிகையே நாயின் வெறி விலக்கி நாயா? முறைப்படுத்தி நாயா?
கடிபட்ட குழந்தையைக் காப்பாற்றி நாயா? விரட்டப்பட்ட வறியவர்களைத் தேற்றி நாயா? பாதுகாப்பு காரணங்களுக்காக அடக்கலாம் என்றால் பேசி ஏசி நாயே, அடங்கியோர் இன்னலைப் பேசி நாயா?
நாயே! மனிதன் நாயாகவே உருமாறி செயல்படும் அந்தக் காட்சியை எதிரிகள் கூட பார்க்கக்கூடாது என நினைக்கிறார்கள் இந்த உலகத்தில் உள்ள நாம் தான் மனிதர்கள் எதிரிகள் கூட அதை அனுபவிப்பதை எப்படி சகித்துக் கொள்வோம்?
மரணித்த பின் உடலை கூடக் வீட்டுக்குக் கொடுக்க மாட்டார்கள். கொரோனா பாதித்த உடல்களை அடக்கம் செய்த அதே சூழல்தான் அங்கேயும்.
காரிலும் விமானத்திலும் மட்டுமே பயணம் செய்கிறவர்களை எப்போதும், தெரு நாய்கள் விரட்டுவதற்கோ- கடிப்பதற்கோ வாய்ப்பே இல்லை. என்றோ ஒருநாள் கட்சிப் போராட்டம், ஆர்ப்பாட்டங்களின் போது, கூட்டத்தோடு கூட்டமாக வீதியில் நடந்து போயிருக்கும் போது, தூரத்தில் பார்த்திருக்கலாம் தெருநாய்களை.
"விலங்குகள் வதை தடுப்புச்சட்டம் 1960" - ஐ உருவாக்கம் செய்ததில் முக்கியப் பங்காற்றியவர், இந்த தேசத்தின் ஆபத்தான நபராக ஒருகாலத்தில் பார்க்கப்பட்டு விரைவில் விமான விபத்தால் காலமான ஒரு தரம் கெட்ட நபரின் மனைவி மேனாள் மத்திய அமைச்சர் மேனகா சஞ்சைக்காந்தி என்பது நினைவில் வருகிறது.
அதிலும் குறிப்பாக, நாய்கள் நலனுக்காக மட்டுமே பதினைந்து நிமிடங்கள், சட்ட உருவாக்கத்தின் போது பேசினார் அமைச்சரான அந்த அம்மையார்.
"மனிதனுக்கு நாயால் தீங்கு ஏற்பட்டால்?" என்பது தான் பேசும் கருப்பொருள் ஆனால் அதைத் தவிர்த்து, "மனிதனால் நாய்களுக்கு ஏதேனும் தீங்கிழைக்கப் பட்டால்?" என்றே அப்போது அந்த உரை அமைந்திருந்தது.
ஒரு விஷயத்தை ஊன்றிக் கவனித்தால் புரியும். நாட்டில் பல மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்ட போதெல்லாம் ஸ்டார்ட் ஆகாத வண்டி, டெல்லியில் தொடர்ந்து நாய் 'கடி' கள், இரட்டை டிஜிட்டலில் எகிறியதும் துவங்கியிருக்கிறது. அந்த நீதித்துறை யுத்தம் எப்படியோ நீதி கிடைத்தால் சரி தான்.
கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமே, யார் பராமரிப்பிலும் இல்லாத தெரு நாய்கள் தான் ஊரில் அதிகம். சுயமாக அவைகளே முகக்கவசம் அணிந்திட வாய்ப்புகள் இல்லை. நாட்டு நாய்களான தெருநாய்களை வீட்டுக்குக் கொண்டு வந்தோ, அல்லது உயர்ரக நாய்களை ஆர்டர் போட்டு வெளிநாடுகளில் இறக்குமதி செய்தோ வளர்க்கிறவர்கள்; அவைகளுக்கு மாஸ்க் போட்டு வெளியே கூட்டிப் போவதில்லை. அதே வேளையில் அவர்கள் மாஸ்க் போட்டிருப்பார்கள்..
கயிறுகட்டி வாக்கிங் அழைத்துப்போகும் போது பிற தெருநாய்கள், "யார்றா நீ, எங்க ஏரியாவில?" என்ற கேள்வியோடு தாக்குதல் செய்வதும், பதிலுக்கு முதலாளியோடு வாக்கிங் வந்த நாய் தெருநாய்களை தாக்குதல் செய்வதும்;
சில நேரங்களில் நாயின் முதலாளியின் மீதே அந்தத் தாக்குதல் நடப்பதும்; அவ்வப்போது பார்க்கிற காட்சிகள் தான். ஆள் கடிபடாத வரை இவையெல்லாம் செய்திகளாவதில்லை.
"திடீரென ஏன் மனிதர்கள் இப்படி நாய்கள் மீது நாய்கள் போலவே விழுந்து கடித்து பிராண்டி வைக்கிறார்கள்?" என்ற சிலரது ஆதங்கக்குரல்களை இப்போது தான் கேட்க முடிகிறது.
காலங்காலமாக நாயாட்டம் அதிகம் தான் நண்பர்களே. கிராமங்களிலும், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் நகரின் ஒதுக்குப்புற புறநகர்களிலும்; இதுநாள் வரையிலும் 'கடி' பணிகள் இருந்து வந்த வேளையில்; அது பெரிதாகப் பேசப்பட வில்லை. இப்போது, எங்கு கடிக்க வேண்டுமோ அங்கேயும், யாரைக் கடிக்க வேண்டுமோ அங்கேயும்; எந்த ஏரியாவில் கடிக்கவேண்டுமோ அங்கேயும்; மிகச் சிறப்பாக நாய்கள் கடித்து வைத்ததன் காரணத்தால்; எல்லா ஏரியாவும் முகநூல் ஏரியா ஹைலைட்ஸ் சிம்பிள் போல ஹைலைட் ஆகியிருக்கிறது.
இரவுகளில் வீடற்ற மனிதர்கள் படுத்து உறங்கும் மேம்பால நடைபாதைகளில் நபர் ஒருவருக்கு ஒரு நாய் பாதுகாப்பு (?) என்ற கணக்கில் நாய்களும் படுத்துக் கிடக்கும்.
நடைபாதை (பிளாட் பார்ம்) இல்லாத மேம்பாலங்களைத் தவிர - எல்லா மேம்பாலங்களிலும், மனிதர்கள் -நாய்கள் என்ற இணைப்பைப் பார்க்கலாம். இரவு 10 மணிக்கு படுக்கை விரிக்கப் பட்டு மறுநாள் காலை ஆறுமணியளவில் படுக்கை கலைக்கப்படும். அட இந்த நபர் இவ்வளவு டீட்டெய்ல்டா சொல்லுதேன்னு மூக்கில் விரல் வைப்பது வேண்டாத வேலை. மேம்பால ஏரியாக்களை இரவுகளில் கடப்பது இப்போதும் உண்டு. அதிகாலை ஐந்து மணிக்கு முன்னதாக பயணம் போகும் பழக்கம் அப்போது உண்டு. ஆக, அதிகாலையிலும் இரவுகளிலும் இதை தொடர்ச்சியாய் நாம் பார்த்துள்ளோம்.
நெடுஞ்சாலைகளில் நெரிசல் இருக்கும் வேளைகளில், உள்வட்டச் சாலையை கார்மூலம் பயன்படுத்திப் பார்ப்பதைக் காட்டிலும்; நடந்தும், இரு சக்கர வாகனங்களில் கடந்தும் பார்த்தோர்; ஆகச்சிறந்த நபர்கள் தான். சென்னை பாஷையில் கூறவேண்டுமானால்
"இன்னாமா நீ... இத்தன தடவதான் உங்களுக்குலாம் சொல்றதோ தெரியல போங்க. பளிச் பளிச்னு கண்ணப் புடுங்கற கலர்ல துணி போட்டுக்குனு வந்தாதான் அதுக்குப் புடிக்கலே, கொலைக்குது; தொரத்திக்கிட்டு வருதுன்னு தெரியுதுல்ல"...
வேற என்னெல்லாம் நாய்களுக்கு பிடிக்காதுன்னு லிஸ்ட் போட்டு குடுத்திட்டீங்கன்னா, நாங்க பூமியில வாழறதா; அல்லது செவ்வாய் கிரகத்துல வாழறதான்னு முடிவு பண்ணிக்கறோம். என்பதே மனிதர்களின் தற்போதுள்ள நிலை. தெருநாய் வழக்கால் உலகம் முழுக்க பிரபலமாகி விட்டேன்: என்கிறார் உச்ச நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அந்த நகைச்சுவையாகப் பேசும் நிலையில்
டெல்லி - என்சிஆர் பகுதிகளில் தெரு நாய்களால் பலர் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக குழந்தைகள் தெருநாய் கடியில் உயிரிழப்பதாகவும் புகார்கள் எழுந்தது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு, ‘‘டெல்லி - என்சிஆர் பகுதிகளில் தெரு நாய்களை பிடித்துக் காப்பகங்களில் பராமரிக்க வேண்டும். அவற்றை மீண்டும் தெருக்களில் விடக்கூடாது’’ என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி உத்தரவிட்டது. இதற்கு செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள் எனவும், சமூக ஆர்வலர்கள் எனவும் கூறும் போலியான பலர் கண்டனம் தெரிவித்துப் போராட்டங்கள் நடத்தினர். ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்கள் மற்றும் நாய்க் காவலர்கள் அயல் நாட்டு அமைப்பின் கைக்கூலிகள் ஆகப் பார்க்கப்படும் நபர்கள் மூலம் நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் கவனத்துக்கு சென்றதையடுத்து நீதிபதி விக்ரம் நாத் தலைமையில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு வழக்கை மாற்றி தலைமை நீதிபதி கவாய் உத்தரவிட்டார். இந்த நிலையில் தமிழ்நாடு சமூக ஊடகங்களில் பிரபலமான நிலையில் அறந்தாங்கி கோபி நடத்தும் நிகழ்ச்சி நடந்த பின்னர் நாய்க்காவலர்கள் அசிங்கப்பட்ட பின்னர் பேசுவது "எங்க மேல அங்கங்க கொஞ்சம் பரிதாப பட்டாங்க.. இந்த நீயா நாயா கோபினு ஒருத்தன் வந்தான் சார்.. மொத்தமா மூடிட்டான் சார்"..என்பதே இப்போதைய நிலை இல்லாத பேய்க்குப் பயந்த காலம் போய்
இருக்குற நாய்க்குப் பயப்படும் நிலை வரக் காரணம் இந்திய மிருக ஆர்வலர்கள் சில வனவாசிகள் எனும் அயல்நாட்டு அமைப்புக்களின் கைக்கூலிகள்
உயிரைப் பறித்த தெரு நாய்கள்- 4 வயதுச் சிறுவனுக்கு நிகழ்ந்த கொடூரம்
நாடு முழுவதும் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் மனிதர்கள் நாய் கடிக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் தெருநாய்களை கட்டுப்படுத்த பல்வேறு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சிறுவர்களை தெருநாய்கள் துரத்தி துரத்தி கடிக்கும் காட்சிகள் அவ்வப்போது வெளியாகி வைரலாகிறது.
தெலுங்கானாவில் நான்கு வயது சிறுவன் தெருநாய் கடியால் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தெலங்கானாவில் உள்ள துங்கூரு கிராமத்தைச் சேர்ந்த ரிஷித் என்ற 4 வயது சிறுவனை இரண்டு மாதங்களுக்கு வெறிநாய் ஒன்று கடித்துள்ளது. நாயின் பிடியில் இருந்து தப்பி சிறுவன் ஓட முயன்ற நிலையில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த சிறுவனுக்கு காயங்கள் ஏற்பட்டது. நாய் கடிக்கவில்லை என நினைத்துக்கொண்ட சிறுவனின் பெற்றோர்கள் நாய் கடிக்கு சிகிச்சை அளிக்காமல், கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்களுக்கு மட்டும் சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் மழையில் சிறுவன் நனைந்த போது சிறுவனின் உடல் மொழியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சிறுவனை பரிசோதித்த நிலையில் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இந்நிலையில் சிகிச்சையில் இருந்த சிறுவன் ரிஷித் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.ஒரு தெருநாயால பெத்த புள்ளைய கண்ணு முன்னாடி பறி கொடுத்துட்டு உக்கார்ந்து இருக்கிற அந்த தகப்பனோட வலி அந்த கண்கள்ல அவ்வளவு ஆழமாகத் தெரிகிறது
அந்த மனுஷனோட வலி வேதனை எல்லாம் கேட்டும் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம அந்த 2 கால் ஜென்மத்துக்கு எப்படி நாயையும் குழந்தைகளையும் ஒண்றாக ஒப்பிட பேசும் அல்லது குலைக்கும் மனசு வருகிறது. நமக்கே அவர்கள் மீது கோபம் வரத் தோணுது
ஆனா அவரு வந்த கோவத்தை எல்லாம் கட்டுப்படுத்திட்டு கொடுத்த ரியாக்ஷன் இருக்கே அதில் அவர்கள் அசிங்கப்பட்டனர் மக்கள் சபைமுன் நாம் மீண்டும் கூறுவோம் நாய்கள் ஆபத்தானதோ இல்லையோ நாய்க் காதலர்கள் மிகவும் ஆபத்தான ஜந்துக்கள்.நீயா நானா நிகழ்ச்சியை 99 விழுக்காடு நாம் உள்ளிட்ட மக்கள் பார்ப்பதில்லை. இன்று விலங்குகள் ஆணைய மூத்த அலுவலர் ஒருவர் நிகழ்ச்சியை நீக்கம் செய்ய கடிதம் எழுதியதால் பார்த்தோம் ஆம் அது குறித்து நடவடிக்கைகள் பார்த்துக் கொண்டே இருப்போம்.
அந்த நிகழ்ச்சிகளில் பேசுபவர்கள் படிநிலை வர்க்கம் பார்க்க இயல்கிறது.
எளிய மனிதர்கள் நான்காம் ஐந்தாம் வரிசையிலும், மேலதட்டு உயர்குடி மக்களுக்கு முதல் இரண்டு வரிசையை தான் கவனித்தீர்களா? பாரபட்சம். இதில் ஒரு அயல்நாட்டு அமைப்பு ஊடுருவல் உண்டோ என சந்தேகிக்கும் நிலை உள்ளது.
கருத்துகள்