முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜிஎஸ்டி சலுகைகளை பாலிசி​தா​ரர்​களுக்கு வழங்க காப்​பீட்டு நிறு​வனங்​களுக்கு மத்​திய அரசு அறி​வுறுத்தல்

செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி டில்லியில் மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்,


ஜிஎஸ்டி-யில் 12%, 28% ஆகிய விகிதங்களை நீக்கிவிட்டு, 5%, 18% ஆகிய இரு விகித நடைமுறையைப் பின்பற்றுவதாக முடிவு செய்யப்பட்டு அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டது குறித்து முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சி பிரமுகருமான  ப. சிதம்பரம் அவரது எக்ஸ் தளத்தில் இதுபற்றி,

"12 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்பில் உள்ள 99 சதவீத பொருள்கள் இப்போது 5 சதவீத வரி வரம்பில் உள்ளதாகக் கூறி நிதியமைச்சர் பெருமைப்படுவதை புரிந்துகொள்ள முடிகிறது. ஜிஎஸ்டி வரிக் குறைப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

ஆனால் ஒரு கேள்விக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.



5 சதவீத ஜிஎஸ்டி விகிதம் இப்போது நியாயமான, சரியான ஜிஎஸ்டி விகிதம் என்றால், அது ஏன் கடந்த 8 ஆண்டுகளுக்கு நியாயமானதாக, சரியானதாக இல்லை?

கடந்த 8 ஆண்டுகளில் 12 சதவீத வரி விதிப்பின் மூலம் மத்திய அரசு, இந்திய மக்களைச் சுரண்டவில்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மருத்​துவ மற்​றும் ஆயுள் காப்​பீட்​டுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்​கப்​பட்டு வந்த நிலை​யில் தற்​போது ஜிஎஸ்டி முற்​றி​லும் ரத்து செய்யப்​பட்​டுள்​ளது. மதிப்​பீட்டு நிறு​வன​மான ஐசிஆர்ஏ வெளி​யிட்​ட அறிக்​கை​யில், “ மருத்​துவ மற்​றும் ஆயுள் காப்​பீட்​டுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்​கப்​பட்டு வந்த நிலை​யில் தற்​போது ஜிஎஸ்டி முற்​றி​லும் ரத்து செய்யப்​பட்​டுள்​ளது. மதிப்​பீட்டு நிறு​வன​மான ஐசிஆர்ஏ வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “மருத்​து​வக் காப்​பீட்டு பிரீமி​யங்​களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்​கப்​பட்​டுள்​ள​தால் அதிக நோயாளி​களை காப்​பீடு சென்​றடைந்து மருத்​து​வ​மனை​களுக்​கும் பயனளிக்​கும்​” என்​று கூறப்​பட்​டுள்​ளது ஜிஎஸ்டி கவுன்​சிலின் 56-வது கூட்​டத்​தில் ஒப்​புதல் அளித்​த​படி அனைத்து தனி​நர் ஆயுள் மற்​றும் மருத்​து​வக் காப்​பீட்டு பாலிசிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் இக்​கூட்​டம் நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​துக்கு நிதிச் சேவை​கள் துறையில் செய​லா​ளர் என்​.​நாக​ராஜு தலைமை வகித்​துப் பேசுகை​யில், “மத்​திய அரசின் ஜிஎஸ்டி சீர்​திருத்​த​மானது காப்​பீட்டை மிக​வும் அணுகக்​கூடிய​தாக​வும் செலவு குறைந்​த​தாக​வும் மாற்​றி​யுள்​ளது.




இதன் மூலம் நாடு முழு​வதும் காப்​பீடு பரவலாக சென்​றடைவதுடன் காப்​பீட்டு நிறு​வங்​களின் நிதி பாது​காப்​பும் வலுப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. வரி சீரமைப்​பின் பலன்​கள் ஏற்​கெனவே உள்ள பாலிசி​தா​ரர்​கள், வருங்​கால பாலிசி​தா​ரர்​கள் ஆகிய இரு தரப்​பினருக்​கும் முழு​மை​யாக சென்​றடைவதை உறு​திப்​படுத்த வேண்​டும்’’ என்​றார்.ஜிஎஸ்டி சலுகைகளை பாலிசி​தா​ரர்​களுக்கு வழங்க வேண்​டும் என்று காப்​பீட்டு நிறு​வனங்​களுக்கு மத்​திய அரசு அறி​வுறுத்​தி​யுள்​ளது. பொதுத்​துறை காப்​பீட்டு நிறு​வனங்​களின் தலை​வர்​கள், தனி​யார் துறை ஆயுள் மற்​றும் ஆயுள் அல்​லாத காப்​பீட்டு நிறு​வனங்​களின் தலைமை செயல் அதி​காரி​கள், நிதி சேவை​கள் துறை, காப்​பீடு ஒழுங்​கு​முறை மேம்​பாட்டு ஆணைய உயர​தி​காரி​கள், ஆயுள் காப்​பீடு கவுன்​சில் மற்​றும் பொது காப்​பீடு கவுன்​சிலின் அதி​காரி​கள் கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது.

கருத்துகள்