தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் கூலி தொழிலாளியின் 16 வயது மகள்,
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மைனரான நிலையில் காதல் திருமணம் செய்தார். இந்த நிலையில் கர்ப்பிணியானவர், மருத்துவ சிகிச்சைக்கு சென்றபோது அவர் மைனர் என்பது தெரிந்தது. மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள், பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் வீரம்மாளிடம் புகார் அளித்தனர்.காதல் திருமணத்தில் கர்ப்பமான மைனர் பெண்ணின் பெற்றோர்கள் மீது வழக்குப் பதியாமல் இருப்பதற்காக ரூபாய் 50 ஆயிரம் லஞ்சம் கேட்டு வாங்கிய காவலதுறை ஆய்வாளர் வீரம்மாள் கைது செய்யப்பட்டார். அதற்கு முன் இரண்டு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து விசாரணை செய்த ஆய்வாளர் வீரம்மாள், பெண்ணின் பெற்றோரிடம் 18 வயது ஆவதற்கு முன் மகளை திருமணம் செய்து கொடுத்ததற்காக, குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உங்களைக் கைது செய்து சிறையில் அடைக்க உள்ளதாக மிரட்டினார்.
ஆனால் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வழக்கை கைவிட்டு விடுவதாகவும் கூறினார். பணம் கொடுக்க விரும்பாத பெண்ணின் பெற்றோர், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் நாகராஜிடம் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனைப்படி பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை பெண்ணின் பெற்றோர் கொண்டு சென்று அரசு சாட்சி முன்னிலையில் கொடுத்த போது அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் வீரம்மாள் வாங்கிய போது, மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணம் பெற்ற கையுடன் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையிலடைத்தனர்.


கருத்துகள்