பீஹாரில் நவம்பர் மாதம் 6 ஆம் தேதி மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல்
பீஹார் மாநில சட்டசபைத் தேர்தல் தேதியை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார்.
இரண்டு கட்டங்களாக நவம்பர் மாதம் 6 ஆம் தேதி மற்றும் 11 ஆம் தேதி என இரண்டு நாட்கள் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். பீஹாரில் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.92 கோடி பேர் ஆண்கள். 3.5 கோடி பேர் பெண்கள் . 14 லட்சம் பேர் புது வாக்காளர்கள்.
தேர்தலை வெளிப்படையாகவும், அமைதியான அடிப்படையில் நடத்துவதை உறுதி செய்ய விரும்புகிறோம்.100 வயதிற்கு மேற்பட்டோர் 14 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். 90,712 வாக்கு மையங்கள் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும்.
எந்தவொரு வன்முறையையும் சகித்துக் கொள்ளக் கூடாது நிர்வாக அலுவலர்களுக்கு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளம் மற்றும் மற்ற பிளாட்பார்ம் மூலமாக போலியான செய்திகள் வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.என ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
நவம்பர் மாதம் 6ஆம் தேதி வாக்குப்பதிவு (முதற்கட்ட தேர்தல்)
மனுதாக்கல் தொடக்கம்- அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி
மனுதாக்கல் செய்ய கடைசி நாள் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி
வேட்புமனுக்கள் பரிசீலனை அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி
வேட்புமனு திரும்பப் பெறுதல் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி
நவம்பர் மாதம் 11ஆம் தேதி தேர்தல் (2 ஆம் கட்ட தேர்தல்)
மனுதாக்கல் துவக்கம்- அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி
மனுதாக்கல் செய்ய கடைசி நாள் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி
வேட்புமனுக்கள் பரிசீலனை அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி
வேட்புமனு திரும்பப் பெறுதல் அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி
வாக்குகள் எண்ணிக்கை நவம்பர் மாதம் 14 ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் பீஹார் மாநிலத்தில் தேர்தல் விதமுறைகள் அமலாகி நடைமுறைக்கு வந்துள்ளது.












கருத்துகள்