தீபாவளிப் பண்டிகையை
முதன்முதலில் கொண்டாடியது எப்போது?
என்ற விவாதம் தற்போது வருவதற்குக் காரணம் கடவுள் மறுப்பு எனும் கொள்கைப் பெயரிலுள்ள சில அமைப்பினர் தான். கடந்த 1000 ஆண்டுகளில் இஸ்லாமிய வழி வந்த முகலாயப் பேரரசின் 600 ஆண்டுகளில் ஆட்சி, அதன் பின் கிருஸ்தவ வழி வந்த பிரிட்டிஷ் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி, இதில் சத்திரியர்கள், அந்தணர்கள், வைசியர்கள் காலங் காலமாகவே கொண்டாடியே வந்ததற்கு பலவிதமான சான்றாவனங்கள் உள்ளன, ஆனால் சில 600 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களின் குறுநில மன்னர்கள் காலத்தில் எந்த விழாவும் கொண்டாட முடியாத ஜாதிய அடக்குமுறைகளை சுதந்திர காலம் வரை சில சமூகங்கள் அனுபவித்து வந்தது என்பதே உண்மை, அதாவது 20 சதவீதம் மக்களுக்கு பலகாலம் இட்லி ஆச்சரியம் கலந்த உணவு தான்.
‘‘தீபாவளியை முதன்முதலாகக் கொண்டாடியவன், வதமான நரகாசுரனின் மகனான பகதத்தன் என்கின்றன புராணங்கள்.
‘‘தமிழ்நாட்டில் சோழர்கள் காலம்வரை தீபாவளி கொண்டாடப்பட்டது அறியலாம் ஆனால் முதலாம் குலோத்துங்க சோழன் மட்டுமே தடை விதித்தார், ஆனால் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில்தான் அதுவரை மன்னர் ஆட்சிக் காலத்தில் தீபாவளி கொண்டாடப் பயந்த ஜாதி மக்களால் முதன்முதலாக தீபாவளி கொண்டாடப்பட்டது ன்பதே வரலாறு.’’திருமலை நாயக்கர் காலத்தில் அதாவது பொது ஆண்டு. 1623-1659 வரை தான் தமிழகத்தில் சத்திரியர் அந்தணர்ர் தவிர்த்து வைசியர் மற்றும் சூத்திரர்கள் தீபாவளிப் பண்டிகையை மீண்டும் கொண்டாடப்பட்டதென்று கூறப்படுகிறது. சோழர் காலம் வரை தீபாவளி பண்டிகை தமிழகத்தில் கொண்டாடப்படவில்லை என்பது பொய்மான வரலாற்றுத் திரிபு , மனனர் திருமலை நாயக்கர் காலத்தில் தான் மதுரை போன்ற இடங்களில் ஆன்மீகம் அணைவரின் மத்தியில் விரிவடைந்து வளர்ந்தது அதற்கு முன் மன்னர்கள் சைவ வழி வந்த நிலை தான் வைணவ விழா நடைபெறாத நிலை இடையில் தான்.இது அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டதாகவும் சில தரவுகள் கூறுகின்றன.
மஹாபலிச் சக்கரவர்த்தி தீபாவளி அன்று அரியணை ஏறியதாக வாமன புராணம் கூறுகிறது. பேரரசர் சந்திர குப்த மௌரியர் மற்றும் விக்கிரமாதித்யனும் தீபாவளியன்று தான் அரியணை ஏறினார். ராஜ புத்திரர்கள் தீபாவளி அன்று தான் ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்தைக் கொண்டாடி மகிழ்கின்றனர். ஆரிய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரஸ்வதி தீபாவளியன்று தான் அமரரானார். ஆதிசங்கரர் தீபாவளி அன்று ஞானபீடம் நிறுவினார். வங்காளத்தில் தீபாவளியன்று கல்கத்தாக் காளிக்கு பூஜை செய்கின்றனர். ஜைனர்கள் தீபாவளியை மகாவீரர் பரிநிர்வாணம் அடைந்த நாளாகக் கொண்டாடு கின்றனர். மகாராஷ்டிராவில் தீபாவளியை தாம்பூலம் போடும் திருநாள் எனக் கொண்டாடுகின்றனர் தற்போது.ஜப்பானியர்கள் தீபாவளியை மூன்று நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்!உத்தரப்பிரதேசத்தில், சீதாதேவியை ஸ்ரீ ராமர் மீட்ட திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில் காளிதேவி வழிபாடாக ‘மகாநிசா’ என்ற பெயரில் தீபாவளியை கொண்டாடு கி்ன்றனர்.
கொல்கத்தாவி்ல் தீபாவளியையொட்டி, ‘பூவாணப் போட்டி’ நடைபெறுகிறது. எவரது வாணம் (பட்டாசு) வானில் அதிக உயரத்தில் சென்று வெளிச்சப் பூக்களைக் கொட்டுகிறதோ, அவரே வெற்றி பெற்றவர் எனகிறது யுகயுகமாய் ஆனால் கடவுள் மறுப்பாளர்கள் இதை ஏற்க மறுக்க அவர் தரப்பில் ஆழ்ந்த வரலாற்று பார்வை சார்ந்த அறிவாற்றல் குறைவு,
"இரும்புசெய் விளக்கின் ஈர்த்திரிக் கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது…" இது
(நெடுநல்வாடை: 42-43) கூறும் தீபாவளி மழைகால் நீங்கிய மகா விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த
அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகத்தில் அம்ம!, "
இது (அகநானூறு – 141ம் பாடல்) கூறும் தீபாவளி "மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரனும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர்கேளாத செவியென்ன செவியே
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே!…"
இது (சிலப்பதிகாரம்- 17- ஆய்ச்சியர் குரவை- படர்க்கைப் பரவல்) கூறும் தீபாவளி இப்படி பல சான்றுகள் உண்டு, தமிழ் என்பது இதுபோன்ற பல்லாயிரம் பக்திநெறி இலக்கியங்கள் மட்டுமே, சுதந்திரம் அடைந்த பின் பொய்யான திரைப்பட வசனங்கள் அல்ல, மன்னர் ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற பொய்யர்கள் தவறான தகவல் பரப்பினால் தண்டனை பலமாகவே கிடைத்திருக்கும்.நரகாசுரனை வதமே, தீபாவளிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இதுவே செவிவழி அறிந்திருப்போம். உண்மையில், நரகாசுரன் யார்... தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், தீபம் ஏற்றுவதும், பட்டாசு வெடிப்பதும் ஏன்...? என புராணத்தை அளிவோம் நம் பாரதத் துணைக் கண்டத்தில் வடகிழக்கு மாநிலமாக உள்ள அஸ்ஸாமில் பழமையான நகரமான கௌகாத்தி. புராணகாலத்தில், 'ப்ராக்ஜோதிஷபுரம்' என அழைத்தனர். அதற்கு, 'ஒளிமிக்க நகரம்' எனப் பொருள். அஸ்ஸாம் என்றால், 'இணையற்றது' எனும் பொருள். இவ்வூரைத் தலைநகராக்கி ஆட்சி செய்த நரஹாசுரன். வைகுண்டத்தில், ஜெயன், விஜயன் என்ற காவலர்கள் இருந்தனர். ஒருமுறை பணியில் செய்த தவறால், ஹிரணியன், ஹிரண்யாட்சன் என்ற பெயரில் பூலோகத்தில் பிறந்தனர். இதில் இரணியனை, நரசிம்ம அவதாரம் எடுத்துக் கொன்றார், திருமால். பிரம்மாவிடமிருந்த வேதச்சுவடிகளை எடுத்தபடி பாதாள லோகத்தில் மறைந்தான் இரண்யாட்சன். அந்த சுவடிகளை மீட்க, வராக அவதாரம் எடுத்து பூமியைத் தோண்டினார் திருமால். அப்போது, பூமாதேவிக்கு பிறந்தவன் தான் பௌமன். இதற்கு, 'பூமியின் பிள்ளை' எனும் பொருள். பொறுமைக்கு இலக்கணமானவள் பூமாதேவி. திருமாலின் பிள்ளை என்ற மமதையுடன், தேவர்களைகளை கொடுமைப்படுத்தினான் பௌமன். நடுநடுங்க வைத்தவனை, நரகாசுரன் என்றனர். இந்த பெயரை, நரன் + அசுரன் எனப் பிரிக்கலாம். நரன் என்றால் மனிதன். மனிதனாய் பிறந்து, அசுர குணங்களைக் கொண்டிருந்ததால், இப் பெயர் நிலைத்து விட்டது. தாயைத் தவிர யாராலும், தன்னைக் கொல்ல முடியாத வரத்தைப் பெற்றிருந்த நரகாசுரன். புராண காலத்தில், சத்தியபாமாவாகப் பிறந்து, கிருஷ்ணரைத் திருமணம் செய்திருந்த பூமாதேவி. அம்பு எய்வதிலும், தேரோட்டுவதிலும் பெரும் திறமைசாலி. 'உங்கள் மகனென்ற மமதையில், நரகாசுரன் எங்களை எல்லாம் வதைக்கிறானே...' என கிருஷ்ணரிடம் முறையிட்டனர் தேவர்கள். இதற்கு முடிவு கட்ட, நரகாசுரனின் இருப்பிடம் சென்ற கிருஷ்ணர். மனிதப்பிறப்பெடுத்த பூமாதேவி, முந்தைய பிறவி ஞாபகத்தை மறந்து விட்டாள். எதிரில் நிற்கும் நகரகாசுரன், மகன் என அறியாமலேயே அம்பு எய்து கொன்றாள். அவன் இறப்பை அறிந்து, தீபம் ஏற்றிக் கொண்டாடினர் தேவர்கள்.பின்னரே, அம்பு பட்டு இறந்தது தன் மகனே என தெரியவந்தது. துக்கம் தாங்காமல் தவித்தாள் பூமாதேவி. மகன் கெட்டவனே என்றாலும், இறப்பன்று எல்லாரும் எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளித்து மகிழ வேண்டும். புத்தாடை அணிய வேண்டும். உலகெங்கும் தீபம் ஏற்ற வேண்டும். எண்ணெயில் வாசம் செய்யும் லட்சுமி கடாட்சம், அனைவருக்கும் கிடைக்க வேண்டும். எனவே, இந்த நாளை விழாவாகக் கொண்டாட வரம் பெற்றாள், பூமா. அதன்படியே, வண்ணமயமாகக் கொண்டாடப்படுகிறது தீபாவளி.தீபம் + ஆவளி என்பதே தீபாவளி. ஆவளி என்றால், 'வரிசை' என்று பொருள் தரும். வரிசையாக தீபம் ஏற்றி மகிழ்ந்திருப்பதை குறிப்பதற்கே இந்த சொல் பயன்படுகிறது. பட்டாசு என்பதும் பட்டுடை என்பதம் நமக்கு சீனாவின் கொடை பிற்காலத்தில் விழாவில் இணைந்தது, குளிர் பருவக் காலத்தில் தான் வருகிறது,தவறு செய்பவர் யாராக இருந்தாலும் உரிய தண்டனை உண்டு என்பதை, உலகுக்கு உணர்த்தும் பண்டிகை தான், தீபாவளி. தவறுகளை தவிர்த்து வாழப் பழகுவோம். பிடிவாதகாரர்களிடம் வாதாடக்கூடாது, முடிவெடுத்தவரிடம் விவாதிக்க கூடாது, புரிந்து கொள்ளாதவரிடம் பேசவே கூடாது.
எந்நிலையிலும் உதவாமல் ஓரமாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பவர்களைவிட ஓடிச்சென்று உதவுபவர்களுக்கே பழியும் பாவமும் நிறைய சேருகிறது.
எல்லா இடங்களிலும் நேர்மையாக இருக்க நினைப்பவர்கள் பணத்தை விட பகையைத் தான் வேகமாகச் சம்பாதிக்கிறார்கள். காலத்திடம் விட்டுவிடுங்கள் உங்களிடம் நடித்தவர்கள் விரைவில் மேடையை விட்டு ஓடிவிடுவார்கள்.இதுவரையில் கற்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் இடரில்லாத மாணவனாக இருப்பதே சிறு வயது ஒழுக்கம். தற்போதய நிலையில் லஞ்சம் லாவண்யம் ஊழல் முறைகேடு இவை தான் நரகாசுரன் அதற்கு எதிராக நமது இதழ் என்றும் தீபமாக ஒளிக்கும் ஜொலிக்கும் நமது வாசகர்கள் செய்தியாளர்கள், சென்னை ஆப்செட் அச்சகத்தினர், பப்ளிக் ஜஸ்டிஸ் உலக வெளியீட்டாளர் கூகுள் நவ்லீஹா மற்றும் இதழ் விற்பனை முகவர்கள், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்






கருத்துகள்