காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் உள்ளிட்ட ஆறு மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளரும் நீநிபதியுமான அல்லி அக்டோபர் 6 ஆம் தேதி வெளியிட்டுள்ள உத்தரவின்படி,
வழக்கு ஒன்றில் விரோதம் காரணமாக டி.எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவிட்ட காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல், அரியலூர் லோக் அதாலத் தலைவராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அடுத்ததாக சென்னை வணிக நீதிமன்ற முதன்மை நீதிபதியாகப் பணியாற்றிய தீப்தி அறிவுநிதி, காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிபதியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். அடுத்ததாக திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிபதி பி.வேல்முருகன், தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிபதியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அடுத்ததாக தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய கே.பூரண ஜெய ஆனந்த், பணி இடமாற்றம் செய்யப்பட்டு புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்ததாக புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய ஜே.சந்திரன், பணி இடமாற்றம் செய்யப்பட்டு சேலம் மாவட்டம் மேட்டூர் விரைவு நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்ததாக சென்னை குடும்ப நீதிமன்றத்தில் மூன்றாவது கூடுதல் முதன்மை நீதிபதியாகப் பணியாற்றி வந்த மாவட்ட நீதிபதி வி.தேன்மொழி, திருப்பத்தூர் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள்