திண்டுக்கல் மாவட்டம் பழநியில் வசிப்பவர் சொக்கநாதர் (வயது 55). திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவில் நில அளவையரானவரின் மனைவி விஜய
முருகேஸ்வரி (வயது 47). மகள் காருண்யா ஸ்ரீதர்ஷினி வயது 19. பிளஸ் 2 படித்து முடித்தவர், மருத்துவம் படிக்க விரும்பிய நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் காருண்யா ஸ்ரீதர்ஷினி 228 மதிப்பெண்கள் பெற்றதையடுத்து முதற்கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில் இவருக்கு சீட் கிடைக்கவில்லை. இருந்தாலும் அவர், எப்படியாவது மருத்துவக்கல்லூரியில் சேர்த்து படிக்க வேண்டும் என்ற ஆசையில் 456 மதிப்பெண்கள் எடுத்தாக போலியான சான்றிதழைத் தயாரித்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நிலையில்
சான்றிதழ்களை மெய்த்தன்மை பரிசோதனையில் அது போலியானதென தகவல் வர மருத்துப்படிப்பில் அவர் தவறாக நுழைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு காருண்யா ஸ்ரீதர்ஷினி, மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது தந்தை சொக்கநாதர், தாயார் விஜய முருகேஸ்வரி ஆகிய மூவரையும் அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி காவல் நிலையத்தில் வழக்கு பதிந்த நிலையில் கைது செய்து சிறையிலடைத்தனர். அது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சில அலுவலர்கள், “ நீட் தேர்வில் தோல்வியடைந்த காருண்யா நண்பர் ஒருவரின் உதவியால் நீட் தேர்வில் தேர்வான மாணவியின் மதிப்பெண் சான்றிதழை வாங்கி தன்னுடைய பெயர் மற்றும் புகைப்படத்தை அதில் வைத்து போவியாக தயார் செய்துள்ளார். நீட் தேர்வு மையத்தின் மின்னஞ்சல் முகவரியின் ஒரு எழுத்தை மாற்றி புது மின்னஞ்சல் தயாரித்து அதில் தான் தயாரித்த போலிச் சான்றிதழை இணைத்து அதிலிருந்து தன்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளார் இந்த மதிப்பெண் சான்றிதழுடன் முதலில் கன்னியகுமாரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் சென்றுள்ளார். அப்போது அந்த கல்லூரி நிர்வாகத்தினர் போலிச் சான்றிதழ் தயாரித்துள்ளார் எனக் கண்டறிந்து உடனே ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து முதல் தகவல் அறிக்கை செய்துள்ள நிலையில். அங்கிருந்து எப்படியோ லஞ்சம் கொடுத்து தப்பிய
காருண்யாவும் அவரது குடும்பத்தினரும் திண்டுக்கல் மருத்துவக் கல்லூரிக்கு சேர்க்கைக்கு பெற்றோருடன் சென்றுள்ளார்.அங்கு காருண்யாவிற்கு அட்மிஷன் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கப்பட்ட நிலையில், மாணவர் சேர்க்கை விவரங்கள் குறித்து சென்னை மருத்துவக்கல்வித் துறை இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடந்த மெய்த்தன்மை சரிபார்ப்புப் பணியில் காருண்யா ஸ்ரீதர்ஷினி, நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் மற்றும் கவுன்சிலிங் இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ்களை போலியாக தயாரித்துக் கொடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்திருப்பதாகக்" கூறுகிறார்கள. இது குறித்து திண்டுக்கல் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரதீப் கூறுகையில் , “ இந்த விவகாரம் குறித்து தெரிய வந்ததும் உடனே அந்தக் குடும்பத்தினரிடம் விசாரணை செய்து காருண்யா ஸ்ரீதர்ஷினி மற்றும் அவருடைய பெற்றோரையும் கைது செய்ததாகவும் . திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த போலி சான்றிதழ் வழக்கு தான் முதன்முறையாக நடந்துள்ளது. அதில் முறைகேட்டில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என விசாரித்து வருகிறோம். நீட் முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.





கருத்துகள்