சமீபத்தில் அப்பல்லோ மருத்துவ மனையில் உடல் நிலை பரிசோதனைக்கும் சிகிச்சை னச் சேர்க்கப்பட்ட பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தரப்பு வெளியிட்ட சமீபத்தில் செய்தி அறிக்கையில்
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பா.ம.க. நிறுவனர் (மற்றும் தலைவர்) மருத்துவர் ராமதாஸ் மருத்துவச் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஹிருதயம் சம்பந்தமாக பிரச்சனைக்கு ஆஞ்சியோகிராம் செய்த சிறப்பு மருத்துவர்கள் எவ்வித பிரச்சனையும் இல்லை இரத்த ஓட்டம் சீராக உள்ளது இதயம் நன்கு செயல்படுகிறது என்று பரிசோதனை முடிவினை தெரிவித்துள்ளனர்.
அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள மருத்துவர் ராமதாஸை முதலமைச்சர் . மு. க. ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர்கள் ஏ. வ. வேலு, கே. என். நேரு மத்திய அமைச்சர்கள் எல். முருகன், முரளிதர் மோகல்ஜி ,
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், முன்னாள் செயலாளர் முத்தரசன், நாம் தமிழர் கட்சிமின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் , மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் எம்.பி, முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் எம்.பி., அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நடராஜன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தேமுதிக தலைவர். பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் , முன்னாள் அமைச்சர் கே. ஏ செங்கோட்டையன் எம்.எல்.ஏ.,,
மதிமுக துணை பொதுச் செயலாளர். துரை வைகோ எம்.பி., முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் எம்.பி., முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி, புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, வி சி கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி., பொது செயலாளர். ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, பாரதிய ஜனதா தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர்கள், வைஜெயந்தி பாண்டாஜி மற்றும் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, கன்னட தொலைக்காட்சி - உதயா உரிமையாளர் மு.க. செல்வி செல்வம், விஜயதாரணி முன்னால்.எம்.எல்.ஏ., மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செல்வி. சுதா எம்.பி., கொங்கு இளைஞர் பேரவை தலைவர். தனியரசு முன்னால்.எம்.எல்.ஏ.,, ஜனநாயக மக்கள் கட்சி தமிமுன் அன்சாரி முன்னால் எம்.எல்.ஏ., பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், தமிழ்நாடு சிவசேனா கட்சி தலைவர். சிவசக்தி , பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த முன்னோடிகள் மருத்துவர் ராமதாஸிடம் உடல் நலம் விசாரித்ததாகவும் மருத்துவர் ராமதாஸ் சிகிச்சை பெற்று நலமுடன் வாழ வாழ்த்து தெரிவித்தனர். என ஒரு பதிவு வந்த நிலையில்
மருத்துவர் ராமதாஸை உடல்நலம் விசாரித்து பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அவர் பேசத்தான் நேரம் இருந்திருக்கும் சிகிச்சை எப்படி ஓய்வு எப்படி என்ற வினா பலரிடம் உண்டு அதற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். என அறிக்கை வந்த நிலையில் தான் தொலைத்துவிடுவேன் என பாமக தலைவர்!” மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை! விடுத்தார்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு ஏதாவது ஒன்று நடந்தால்,"உடன் இருப்பவர்களைத் தொலைத்துவிடுவேன்!” என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்
குறிவைத்து,"மருத்துவ பரிசோதனைக்கு வந்தவரை வைத்து நாடகம் நடத்துவது என்ன கண்காட்சியா?” என அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார்.மருத்துவர் அன்புமணி தந்தை மருத்துவர் ராமதாசைச் சுற்றி நடக்கும் அரசியல் பேச்சுகளை
இந்த கடும் எச்சரிக்கை பா.ம.க.வட்டாரங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
கட்சித் தொண்டர்கள் தங்களது தலைவரின் குடும்ப நம்பிக்கையையும், உள்ளக அரசியல் பதட்டத்தையும் சமூக ஊடகங்களில் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். பமக தலைவர் மருத்துவர்
அன்புமணியின் முக்கிய வரிகள்:"அப்பாவுக்கு ஏதாவது நடந்தால், உடன் இருப்பவர்களை நான் தொலைத்துவிடுவேன்!”
"மருத்துவமனைக்கு வந்ததை வைத்து அரசியல் நாடகம் நடத்துகிறார்கள் இதை பொது மக்கள் நன்கு கவனிக்க வேண்டும்!” எனத் தெரிவித்து எச்சரிக்கை விடுத்தார் பாமக நிறுவனர் தந்தை மருத்துவர் ராமதாசையும் மகன் பாமக தலவவர் மருத்துவர் அன்பமணியையும் பிரித்தது கே மணி தான் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் அறிந்த நிலையில் மற்றவர்கள் அறியாத நிலை காரணம் பல ஆண்டு காலமாக தலைவராக இருந்த பின் செயல் தலைவராக பதவி இறக்கம் செய்யப்பட்ட ஜி. கே. மணி தான் காரணம் என்பதை முன்னால் சட்டமன்ற உறுப்பினர் காவேரி உள்ளிட்ட பலருக்கும் நீண்ட நாட்களாகத் தெரியும்.
சில மாதங்கள் முன்பு பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜிகே மணி எம்எல்ஏ, "என்னுடைய வலது கண் மருத்துவர் அய்யா என்றால்.. மருத்துவர் சின்னையா என்னுடைய இடது கண் இரண்டு கண்ணில் எந்த கண்ணை வேண்டும் என கேட்டால் நான் எந்தக் கண்ணை சொல்வது? என்ற கேட்ட
ஜி. கே. மணி தான் இந்தச் சண்டைகளுக்கெல்லாம் நான் தான் காரணம் என நீங்கள் கேள்வி கேட்பதை விட என்னை கத்தியால் குத்தி விடலாம் எனக்கு ஒரு பாட்டில் விஷம் வாங்கி கொடுத்து விடலாம் என உருக்கமாகப் பேசியவர் ஜி கே மணி. தற்போது பாமக தலைவர் மருத்துவர் அன்புமணிக்கு எதிராக தனியாக டெல்லி சென்று தேர்தல் அதிகாரிகளைச் சந்திக்கிறார் எனவும்,
தன்னுடைய 15 ஆண்டு கால திட்டமாக மகன் லைகா நிறுவனத்தின் சிஇஒ வான தமிழ் குமரனுக்கு கட்சியில் உயர் பொறுப்பைப் பெற்று தருவது அதனை சில நாட்களுக்கு முன் மருத்துவர் ராமதாஸ் மூலம் சாதித்து விட்டார்.
பாமகவில் நடைபெறும் அத்தனை பிரச்சனைகளுக்கும் தலைமை ஏஜென்ட் ஆக இருந்து செயல்படுபவர் இந்த ஜி கே மணியே தான். என தொண்டர்கள் இப்போது பேசத்துவங்கும் நிலையில்
ஜிகே மணி மகனை இந்த பொறுப்புக்கு கொண்டு வந்திருப்பதை மருத்துவர் அன்புமணி ஆதரவாளர்கள் மட்டுமல்ல மருத்துவர் ராமதாஸின் ஆதரவாளர்களும் தற்போது சமூக வலைதளங்களில் எதிர்த்து எழுதத் தொடங்கியுள்ளனர். என்பதே உண்மை. இந்த நிலையில் ஜி. கே. மணி மகனான தமிழ்குமரனுக்கு எதிராக செஞ்சி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் குமாரை நியமித்து ஆட்டத்தை நகர்த்தியுற்ளார் பாமகவின் தலைவர் மருத்துவர் அன்புமணி..



















கருத்துகள்