முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துவங்கும் தவெக தலைவர் விஜயின் எழுட்சியும், வீனர்களின் வீழ்ச்சியும்

தவெக தலைவரும் நடிகருமான விஜய் புதிய நிர்வாகக் குழுவை அறிவித்து மீண்டும் அரசியல் பயணம் துவக்குகிறார் இன்னும் எழுட்சியுடன்,


தமிழக வெற்றிக் கழகத்தின் தினசரி விவகாரங்களை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட செயற்குழுவை தலைவர் விஜய் அமைத்தார்.தமிழக வெற்றிக் கழகத்தின்  தலைவர் விஜய் செவ்வாய்கிழமை அக்டோபர் 28, 2025 ல் கட்சியின் அன்றாடப் பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட செயற்குழுவை உருவாக்குவதாக அறிவித்தார்.

அவரது வழிகாட்டுதலின்படி புதிய செயற்குழு செயல்படும் என்று விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்தக் குழுவில் கட்சியின் உயர்மட்டத் தலைவர் - என்.ஆனந்த், பொதுச் செயலாளர்; ஆதவ் அர்ஜுனா, பொதுச் செயலாளர் - தேர்தல் பிரச்சார மேலாண்மை; K. G. அருண்ராஜ், பொதுச் செயலாளர் - கொள்கை மற்றும் பிரச்சாரம்; சி.டி.ஆர். நிர்மல்குமார், இணைப் பொதுச் செயலாளர்; தலைமை நிலையச் செயலர் ஏ.ராஜசேகர்; மற்றும் துணைப் பொதுச் செயலாளர்கள் ஏ.ராஜ்மோகன், சி.விஜயலட்சுமி, எம்.அருள் பிரகாசம்.

கட்சியின் பிரபலம் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன் உள்ளிட்ட 18 மாவட்டச் செயலாளர்களும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். சென்னையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்துடன் தொடர்புடைய என். மேரி வில்சன் உட்பட கட்சியின் இரண்டு முதன்மை உறுப்பினர்களும் குழுவில் உள்ளனர்.


இந்த நிலையில் கரூர் சம்பவம் குறித்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்து, காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வரதராஜன் என்பவர், சமூக வலைதளத்தில் கருத்துகளை வெளியிட்டதாக, காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.அக்டோபர் மாதம்., 7 ஆம் தேதியில் அவர் கைது செய்யப்பட்டார். சென்னை உயர் நீதி மன்றத்தில், ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு, நீதிபதி கே.ராஜசேகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த
 போது, 'சமூக வலைதளத்தில் பதிவிட்டதை நீக்க வேண்டும்; மத்தியக் குற்றப்பிரிவுக் காவலர் முன், இரண்டு வாரங்களுக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்' என்ற நிபந்தனைகளுடன், ஜாமின் வழங்கி, நீதிபதி உத்தரவிட்டார். 41 பேர் பலியான கரூர் துயரம் தொடர்பான வழக்குகள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

நடிகர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் பிரசார பயணம் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகியதையடுத்து ரோடு ஷோ உள்ளிட்டவைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல கரூர் துயரம் தொடர்பான வழக்கில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஏற்கனவே முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவைக் நீதிபதி ஜோதிராமன் தள்ளுபடி செய்தார்.அதையடுத்து புஸ்ஸி ஆனந்த், முன்ஜாமீன் கோரி 2-வது முறையாக சென்னை  உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.


இந்தியாவிலும் GEN-Z புரட்சி ஏற்பட வேண்டும் என தவெகவின் மற்றொரு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடர்பாக அவர் மீது கரூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதவ் அர்ஜூனா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.மேலும் கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் மாவட்ட காவல்துறைக்  கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி கே.ராஜன் என்பவர் தாக்கல் செய்த ரிட் மனுவும் மதுரை கிளையிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது

கரூர் துயரம் தொடர்பான இந்த வழக்குகள் அனைத்தையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது.கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை தவெகவின் முக்கிய நிர்வாகிகள்  மாமல்லபுரத்துக்கு அழைத்து வந்தனர். தனியார் விடுதியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை சந்திக்க காலை 8:30 மணியளவில் விஜய் அந்த விடுதிக்கு வந்து சேர்ந்தார். காலை 9 மணியிலிருந்து அந்தக் குடும்பங்களைச் சந்தித்து கவலையுடன் உரையாட ஆரம்பித்திருக்கிறார். இந்தநிலையில், உயிரிழந்த குடும்பங்களின் மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் 'உங்கள் குடும்பத்துக்கு நான் பொறுப்பு!' என விஜய் உறுதியளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சில குடும்பங்களின் நிலையையும் அவர்களின் துக்கத்தையும் கேட்டு விஜய்யும் உடைந்து போய் கண்ணீர் விட்டதாகவும் அதில் 27 குடுப்பங்கள் பட்டியல் சமூகங்கள்ஸ என்ற நிலையில் அவர்கள் பாதிப்பு குறித்து கேட்டதாகத் தகவல் சொல்கின்றனர் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள்.ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 15-20 நிமிடங்கள் ஒதுக்கி அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அந்தக் குடும்பங்களை குறித்த முழு விவரங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறார். உயிரிழந்தோரின் குடும்பங்களை விஜய் தத்தெடுக்கப் போவதாக முன்னரே அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கூறியிருந்தார்.  இரங்கல் நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் அப்செட்டான நிகழ்வும் நடந்திருக்கிறது. விஜய்யுடன் நீண்ட காலமாக இணைந்து பணியாற்றி வரும் வெங்கட்ராமனுக்கு கட்சியின் பொருளாளர் பதவியை விஜய் கொடுத்திருந்தார். தவெக தலைவர் விஜய்யுடன் தனித்த முறையில் பேசக்கூடியவர் என்பதால் ஆரம்பத்தில் செல்வாக்கோடு வலம் வந்தார். ஆனால், கட்சிக்குள் நிலவும் பவர் சென்டர் மோதலில் வெங்கட்ராமன் ஓரங்கட்டப்பட்டார். மற்ற எந்த நிர்வாகியுடனும் இணைந்து செயல்படாமல் வெங்கட்ராமன் தனித்தே செயல்பட்டு வந்தார். இந்தநிலையில், அந்த சந்திப்பு நடக்கும் ரெசார்ட்டுக்கு வெளியே வெங்கட்ராமனின் காரை பாதுகாவலர்கள் மறித்திருக்கின்றனர். கட்சியின் பொருளாளர், முக்கிய நிர்வாகி எனக் கூறிய பிறகும் காரை அனுமதிக்காததால் அவர் கடும் அப்செட் ஆனார். ஓங்கி ஹார்ன் அடித்து, உள்ளே இருக்கும் நிர்வாகிகளை போனில் அழைத்த பிறசே வெங்கட்ராமனின் கார் உள்ளே அனுமதிக்கப்பட்டது. முக்கிய நிர்வாகி எனக் கூறிய பிறகும் வெங்கட்ராமனை 10 நிமிடங்கள் வாசலிலேயே காக்க வைத்ததால் அவர் கடும் அப்செட் என்கின்றனர்.தமிழ்நாடு அரசியலின் புதிய அத்தியாயங்களில் தேர்தல் சந்திக்காத ஒன்றாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க), அதன் தலைவர் விஜயின் தலைமையில் வளர்ந்து வருகிறது. ஆனால், செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி , 2025 ல் கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது, அந்த வளர்ச்சிக்கு ஒரு தடையாக மாறிய அந்தத் துயரத்தில் இழந்த உயிர்களின் குடும்ப உறுப்பினர்களை, ஒரு மாதத்திற்குப் பிறகு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதியன்று, மாமல்லபுரத்தின் அருகேயுள்ள ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தது த.வெ.க தலைவர் விஜய். செயல், முதல் பார்வையில் மனிதாபிமானமானதாகத் தோன்றினாலும், ஆழமாகப் பார்க்கும்போது பல கேள்விகளை எழுப்புகிறது. இது உண்மையிலேயே சரியானதா? முறையானதா? தலைமைப் பண்பைப் பிரதிபலிக்கிறதா? 

கரூர் சம்பவத்தின் விவரங்கள் இன்றும் நம்மைத் திகைக்க வைக்கின்றன. நடிகர் விஜயின் மாநில சுற்றுப்பயணத்தின் மூன்றாவது கட்டமாக, கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற அந்தப் பொதுக்கூட்டம், ஆர்வமூட்டியது. ஆனால், அதிகரித்த கூட்ட நெரிசல் கட்டுப்பாட்டை மீறி, மின் ஜெனரேட்டர் அமைந்திருந்த இடத்தில் ஏற்பட்ட பாதிப்பு சத்தம், 41 உயிர்களை பறித்தது. அவர்களில் ஒன்பது குழந்தைகளும் இருந்தனர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போதிய காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் வெத்து அறிவுரைகளைப் புறக்கணித்து, கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் தவறியதாக த.வெ.க தலைவர்கள் மீதே வழக்குப் பதிவானது. உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததாகவும், போக்குவரத்து விதிகளை மீறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தச் சம்பவம், நடிகர் விஜயின் அரசியல் பயணத்தின் முதல் சோதனையாக மாறியது. த.மு.க உள்ளிட்ட பிறக் கட்சிகள் இதை தங்களுக்கு சாதகமான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தின. மக்கள் நீதி தேசிய விரிவாக்கம் கமிட்டி போன்ற சிவில் சமூக அமைப்புகளும் த.வெ.கவை முதன்மையான பொறுப்பாளியாகக் குற்றம் சாட்டின. ஆனால் இதில் திமுக அணி தவிர மற்ற யாவரும் ஆதரிக்கும் நிலை வந்தது.



இந்தத் துயரத்திற்குப் பிறகு, த.வெ.கவின் முதல் பதில் நிதி உதவியாக இருந்தது. செப்டம்பர் 28 அன்றே அறிவித்து, அக்டோபர் 18 அன்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லட்சம் ரூபாய் முறையாக வங்கி வரைஓலை மூலம் வழங்கப்பட்டது. இது பாராட்டிற்குரியது. ஆனால், நிதி உதவி மட்டுமே போதுமா? உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், அந்தத் தினத்தின் மன உளைச்சலில் தவித்தனர். அவர்களுக்கு உடனடி ஆறுதல், உளவியல் ஆதரவு, சட்ட உதவி தேவைப்பட்டன. இந்த நிலையில், ஒரு மாதத்திற்குப் பிறகு அவர்களை மாமல்லபுரம் அருகே உள்ள ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்று சந்தித்தது விஜய். 50 அறைகளைப் புக் செய்து, அவர்களுக்கு வசதியான தங்குமிடம் ஏற்பாடு செய்தது த.வெ.க. விஜய் தனிப்பட்ட முறையில் அவர்களைச் சந்தித்து, ஆறுதல் கூறினார். இது, பொதுமக்களின் கண்ணில் ஒரு நல்ல செயலாகத் தோன்றலாம். ஆனால், விமர்சன ரீதியாகப் பார்க்கும்போது, இந்தச் செயலின் சரியான தன்மை குறித்து சந்தேகங்கள் எழுகின்றன.

முதலாவதாக, இது சரியானதா என்பதைப் பரிசீலிக்கலாம். சரியானது என்பது, நெறிமுறை ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பொருந்துமானால் தான். விஜயின் செயல், உண்மையில் ஆறுதல் தருவதாக இருந்திருக்கலாம். ஆனால், கரூர் சம்பவத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல், அந்தக் குடும்பங்களை ஒரு மாதம் கழித்து அழைத்துச் சென்றது, ஒரு தாமதமான பதிலாகத் தெரிகிறது. ஏன் உடனடியாக கரூரிலேயே சந்திக்கவில்லை? அல்லது சென்னையில் ஒரு சிறிய முறையில்? மாமல்லபுரம் போன்ற சுற்றுலா இடத்திற்கு அழைத்துச் சென்றது, துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு ஏற்றதா? உயிரிழந்தவர்களின் நினைவைப் பற்றி சிந்திக்கும்போது, குது ஒரு விசித்திரமானதாகவே உணரப்படலாம். சமூக விமர்சகர்கள் கூறுவது போல், இது துயரத்தை மறைக்கும் ஒரு பொழுதுபோக்கல்ல? உயிரிழந்தவர்கள் கரூரின் சாதாரண மக்கள் – விவசாயிகள், தொழிலாளிகள், சிறு வணிகர்கள். அவர்களை விஜய் சந்திக்க அரசு காவல்துறை பயண அனுமதி வேண்டும் குடும்பங்கள், இன்னும் அந்த இழப்பின் அதிர்ச்சியில் இருக்கும் போது, ரிசார்ட்டின் சூழலில் அழைத்துச் சென்றது, அவர்களின் உணர்வுகளை மதிக்கிறதா? சரியானது என்பது, அவர்களின் தேவையை முதன்மைப்படுத்துவதே. இங்கு, அது தோன்றவில்லை. மாறாக, விஜயின் படத்தின் ஸ்டைல் போல, ஒரு 'ஸ்பெஷல்' சந்திப்பாக மாறியிருக்கிறது.

இரண்டாவதாக, இது முறையானதா என்பதைப் பார்க்கலாம். அரசியல் தலைவர்களின் செயல்கள், எப்போதும் ஒழுங்குபடுத்தப்பட்டவையாக இருக்க வேண்டும். கரூர் சம்பவத்திற்குப் பிறகு, த.மிழ்நாடு அரசு ஒரு தனி நீதிபதி கமிட்டியை அமைத்தது. அருணா ஜகதீசன் தலைமையில் நடைபெறும் விசாரணை, நீதிமன்றம் இல்லை எனக் கூறினாலும் இன்னும் நடக்கிறது. சிபிஐயின் தலையீடும் உள்ளது. இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களை அழைத்துச் சென்று சந்திப்பது, விசாரணையை பாதிக்குமா? அல்லது அது ஒரு அழுத்தமா? விஜய், காவல்துறை அறிவுரைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர். ஆனால் காவல்துறை சரியாக அங்கு கடமை ஆற்றியதா என்பதே பலரது கேள்வி, அந்தக் குடும்பங்கள், சட்ட உதவிக்கு த.வெ.கவை நாடியிருக்கலாம். ஆனால், ரிசார்ட்டில் சந்தித்தது, அது ஒரு தனிப்பட்ட சந்திப்பா, அல்லது கட்சியின் பொது நிகழ்ச்சியா என்பதில் குழப்பம் இருக்கிறது. முறைப்படி, அத்தகைய சந்திப்புகள் அரசு மருத்துவமனை அல்லது சமூக நல அலுவலகத்தில் நடக்க வேண்டும். தனியார் ரிசார்ட்டில் நடத்துவது, வெளிப்படையின்மையை ஏற்படுத்துகிறது. யார் அழைக்கப்பட்டனர்? அனைவரும் சமமாக சந்திக்கப்பட்டார்களா? இது குறித்து விரிவான அறிக்கை வெளியிடப்படவில்லை. முறையானது என்பது, வெளிப்படைத்தன்மை, சமநிலை, சட்டப்படி நடப்பதே. இங்கு, அது பற்றி சந்தேகங்கள் உள்ளன. அரசியல் கட்சிகள், தங்கள் தவறுகளை மறைக்க, இத்தகைய நிகழ்ச்சிகளைப் பயன்படுத்துவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். விஜயின் செயலும், அதன் ஒரு உதாரணமாகத் தெரிகிறது.

மூன்றாவதாக, இது தலைமைப் பண்பைப் பிரதிபலிக்கிறதா என்பது மிக முக்கியம். தலைமை என்பது, பொறுப்பு, வெளிப்படைத்தன்மை, மக்களுடன் நேரடி தொடர்பு என்பதோடு, தவறுகளை ஏற்கும் தைரியத்தையும் உள்ளடக்கியது. விஜய், திரையுலகின் 'தளபதி' என்று அழைக்கப்படுபவர். அவரது படங்கள், நீதி, சமூகநீதி, ஏழை மக்களின் உரிமைகளைப் பற்றியவை. ஆனால், அரசியலில், கரூர் சம்பவம் அவரது முதல் பெரிய சோதனை. அவர், தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டு, "இது நமது தவறு, நாங்கள் கற்றுக்கொள்கிறோம்" என்று கூறியிருந்தால், அது உண்மையான தலைமையாக இருந்திருக்கும். ஆனால், அது நடக்கவில்லை. மாறாக, நிதி உதவியும், தாமதமான சந்திப்பும் மட்டுமே நடந்துள்ளது. ரிசார்ட்டில் சந்தித்தது, அவரது ஸ்டார் இமேஜைப் பயன்படுத்தி, பொது மக்களின் அனுதாபத்தைப் பெற முயல்வதாகவேத் தோன்றுகிறது. தலைமைப் பண்பு, சோகத்தில் இருக்கும் மக்களை அவர்களின் சூழலில் சந்திப்பதே.காவல்துறை அனுமதிக்க மறுத்து வழியில் கைதாகி இருந்தால் கூட பேசப்படும். கரூருக்கு சென்று, அந்த இடத்தில் நின்று, உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் விழுந்து அழுதிருந்தால், அது உண்மையான தலைமையாக இருந்திருக்கும். ஆனால், மாமல்லபுரம் ரிசார்ட் என்பது, அரசியல் ஸ்ட்ராடஜி போலத் தெரிகிறது. விஜய், தனது படங்களில் காட்டும் தைரியத்தை அரசியலிலும் காட்ட வேண்டும். இல்லையெனில், அரசியலில் முதிர்ச்சியற்றவர் என்ற தோற்றமே ஏற்படும்.

இந்தச் செயலின் தாக்கங்கள், த.வெ.கவின் எதிர்காலத்தைப் பாதிக்கும். கரூர் சம்பவம், கட்சியின் ஷட்டவுன் நிலையை ஏற்படுத்தியது. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தலைவர்கள் ஜாமீன் காரணமாகத் தலைமறைவு. தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இப்போது, இந்தச் சந்திப்பு, சில அனுதாபத்தைப் பெறலாம். ஆனால், அது நிலைத்திருக்காது. ஏனென்றால், உண்மையான ஆறுதல், செயல்பாட்டில்தான். உளவியல் ஆலோசகர்கள், சட்ட உதவி, கல்வி உதவி போன்றவற்றை அறிவித்திருந்தால், அது சிறந்தது. மேலும், அரசியல் எதிரிகள் இதை 'ஷோ' என்று விமர்சிக்கலாம். சிவில் சமூகம், பெண்கள் பாதுகாப்பு அமைப்புகள், த.வெ.கவின் பொறுப்பின்மையை மீண்டும் எடுத்துக்காட்டலாம். தலைமைப் பண்பு, தவறுகளைத் திருத்தி, முன்னேறுவதே. விஜய், இது ஒரு வாய்ப்பு. அவரது கட்சி, இளைஞர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. ஆனால், அது தொடர வேண்டுமானால், உண்மையான பொறுப்பு தேவை.

விஜயின் இந்தச் செயல், நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், சரியானது, முறையானது, தலைமைப் பண்புடையது என்று ஏற்க இயலவில்லை. தாமதமானது, வெளிப்படையற்றது, பொறுப்பை ஏற்காதது என்ற எண்ணமே ஏற்படுகிறது. அரசியல் தலைவர்கள், மக்களின் துயரத்தில் அவர்களுடன் இருப்பதே உண்மையான தலைமை. கோவில் காளைக்கு போடப்பட்ட மூக்கனாங்கயிறு போல அவிழும் வரை காத்திருந்த விஜய் நீதிமன்றம் மூலமே தீர்வு வரவேண்டும் என நினைத்து பணியற்ளிய நிலைமை யாரும் அறியாதது,                   தவெக நடிகர் விஜயை எதிர்க்கும் அளவில் மைய்யம் நடிகர் கமலஹாசனுக்கு பலமகல்லை மக்கள் மத்தியில்  எதிர்பார்ப்புகள் இல்லை மேலும் விஜயின் பயணம் இரண்டு கட்சிகளை முழுமையாகவே பாதிக்கும் ஒன்று விசிக மற்றொன்று நாம் தமிழர். ஆகவே பயத்தில் அவர்கள் விஜயை சாடும் காரணமும் அதுவே இனி போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் துள்ளி வரும் வேலாக முன்பிருந்த நிலையை விட தீவிரமாக அரசியல் களம் காண வருகிறார் விஜய்.



.யாரும் தூற்றட்டும் விட்டு விடு!, 
பொய் எது? மெய் எது? தீர்மானிக்கட்டும் அரசியல் புயல் காற்று!,  இப்போது பதர்கள் விலகி நெல்மணிகளைப் போல மிஞ்சிய தொணடர்கள் துணை கொண்டு துவங்கும் விஜயின் எழுட்சியும் வீனர்களின் வீழ்ச்சியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...