கரூர் கூட்ட நெரிசல் பழி குறித்து 7 பொதுநல வழக்குகள் ஙென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய மனுக்கள் முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, செப்டம்பர் மாதம் 27-ந்தேதி பிற்பகல் 3 மணி முதல் 10 மணி வரை அனுமதி கோரப்பட்டது. கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தான் அனுமதி கோரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை அருகே அல்ல. அறிவித்த இடத்தில்தான் அனுமதி வழங்கப்பட்டது. அனைத்து கட்சிகளுக்கும் விதிமுறைப்படியே அனுமதி தரப்படுவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
பொதுக்கூட்டத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு இந்த உத்தரவு பொருந்தாது. யார் மீதும் குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளை முன் வைக்க வேண்டாம். கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது மக்களின் நலனே முக்கியம் என கூறிய நீதிபதிகள், பொதுக்கூட்ட வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது குறித்த மனு, சென்னை அமர்வில் நிலுவையில் உள்ளது. இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அதை பாதிக்கும். அந்த மனுவுடன் இவற்றையும் சேர்க்கக்கோரி இடையீட்டு மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில், காவல்துறை விசாரணையில் திருப்தி இல்லை என்றால் மாற்றாலாம். ஆனால், ஆரம்ப கட்டத்திலேயே சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றால் எப்படி?. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என்ற நீதிபதிகள் சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதையடுத்து, கரூர் கூட்ட நெரிசலில் இழப்பீடு தொடர்பான மனுக்களுக்கு பாதிக்கப்பட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், 2 வாரங்களில் அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர். சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பூதக்குடி என்ற பகுதியைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர் எனக் கூறி கதிரேசன் என்ற நபர் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “சாலைகளில் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் நடத்துவதற்குச் சர்வதேச அமைப்புகளான ஐ.நா. சபை மற்றும் உலக சுகாதார நிறுவனம், தேசிய அளவில் பேரிடர் மேலாண்மை நிறுவனம் உள்ளிட்டவை பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளன. ஆனால் அதில் எவற்றையும் இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பின்பற்றவில்லை. எனவே இந்த கூட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதுஎனவே உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வல்லுநர் உள்ளிட்டோர் அடங்கிய வல்லுநர் குழு ஒன்றை அமைத்து உரிய வழிமுறைகளை வகுக்க வேண்டும். அதன்படி போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், சாலைப் பேரணிகள் நடத்துவதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை வகுக்க வேண்டும். இந்த வழிமுறைகளில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனைத் தடுக்கும் வகையிலும், அதற்கு நிவாரணம் அளிக்கும் வகையில் முன்வைப்பு தொகை, இழப்பீட்டுத் தொகை, குழு காப்பீடு (குரூப் இன்சூரன்ஸ்) என பல்வேறு விதிமுறைகளை வகுக்க வேண்டும்.
அந்த விதிமுறைகளை அரசு உறுதி செய்ய வேண்டும். இதன் பிறகு இது தொடர்பாக அரசாணை வெளியிட வேண்டும். அதன் தொடர்ச்சியாக த.வெ.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சாலைகளில் பொதுக்கூட்டம், தொண்டர்கள் சந்திப்பு, ரோட் ஷோ உள்ளிட்ட அனைத்து விதமான பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும். அதுவரையில் இது போன்ற கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதற்குத் தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனு வரும் 3ஆம் தேதி (03.10.2025 - வெள்ளிக்கிழமை) இன்று நீதிபதிகள் தண்டபாணி மற்றும் ஜோதி ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கைத் தாக்கல் செய்த கதிரேசனுக்கு, பூதக்குடியைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகி வினோத் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது. அதாவது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து இது குறித்து அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் கதிரேசன் அளித்த புகாரின் பேரில் வினோத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.சென்னை உயர்நீதிமன்றம் WP (MD) 27540/2025 வழக்கு கே. கதிரேசன் என்ற நபர் அவரது வக்கீல் - ஏ.கே. அமரவேல் பாண்டியன் மூலம் தாக்கல் செய்ததில்
எதிர் தரப்பினராக
1) தமிழ்நாடு மாநிலம்
2) இந்தியத் தேர்தல் ஆணையம்,
3) அரசு தலைமை தேர்தல் அலுவலர்/செயலகம்.
4) காவல் துறை இயக்குநர் ஜெனரல் (காவல் படையின் தலைவர்)
5) தமிழக வெற்றிக் கழகம்,
6) ஜோசப் விஜய், என இவர் தாக்கல் செய்த வழக்கு
விசாரணைக்கு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி இற்று வந்தது..இந்த வழக்கை நீதிமன்றம் தக்க அபராதம் விதித்து தள்ளுபடி செய்தால் நல்லது என்பதே பலரது கருத்து தகுதியே இல்லாமல் பலரும் இதுபோல போலி சமூக நல ஆர்வளராக மாறி வருகிறார்கள் அவர்கள் பின்னணி குறித்து தகவல் வெளியிட இந்த வழக்கு முடிவில் தரலாம். உரிமை இல்லாத பலரும் பொதுநல வழக்கு தாக்கல் செய்யாமல் உரிமை வழக்கு தாக்கல் செய்வது சரியா என்பதை மூத்த சட்ட வல்லுநர்கள் சட்டக் கருத்து இதில் தேவை இந்த நிலையில் செந்தில் பாலாஜி பதட்டப்படுவதுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புவதாக
தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளப் பதிவை வெளியிட்டார். அந்தப் பதிவில், "கரூர் தவெக பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் குழு, பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து, இந்தத் துயர நிகழ்வு தொடர்பான விசாரணை, பதவியிலிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நடைபெற, பரிந்துரைத்துள்ளது.
இந்த நிலையில் இன்று ஊடகங்களைச் சந்தித்த கரூர் திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சாராய அமைச்சருமான செந்தில் பாலாஜி, புதிய கதைகளைக் கூறியுள்ளார். தவெக சார்பில், சிபிஐ விசாரணை கோரிய வழக்கு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது. கூட்டத்தில்,விஜய் மீது செருப்பு வீச்சு உள்ளிட்ட அசம்பாவிதங்களுக்கான ஆதாரங்கள் இருப்பதாக தவெகவினர் தெரிவித்துள்ளனர். விசாரணையின் போது தவெக வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்கும் ஆதாரங்களை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டியது.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை அறியும் குழுவிடம் பெண்மணி ஒருவர், கூட்டத்தில் கத்திக்குத்து நடந்ததாகக் கூறியிருக்கிறார். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கையில், இவர் இப்போது ஊடகச் சந்திப்பு நடத்தி, அவை எல்லாம் வதந்தி என்று கூற வேண்டிய அவசியம் என்ன?
கூட்டம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரம், கூட்டம் நடைபெறத் தகுதியான இடமா என்பதை விசாரிக்க, திமுக அரசே ஒரு ஆணையம் அமைத்துள்ள நிலையில், அதைக் குறித்து செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் என்ன? கருத்துத் திணிப்பு ஏற்படுத்துவதன் நோக்கம் என்ன என்ற கேள்விகள் எழுகின்றன.
யார் எங்கே சென்றார்கள், செல்லவில்லை என்று கேட்கும் தகுதி முதலில் திமுகவிற்கு இருக்கிறதா? கள்ளக்குறிச்சியில், திமுக கள்ளச்சாராய வியாபாரிகளால் விற்கப்பட்ட கள்ளச்சாராயம், 66 உயிர்களைப் பலிகொண்ட போது அங்கு போகாத முதலமைச்சர், தென்மாவட்டங்கள் பெருமழையால் பாதிக்கப்பட்டபோது, அங்கு சென்று மக்களைச் சந்திக்காமல், இந்தி கூட்டணி உடன்பாடுகளுக்கு டெல்லி சென்ற முதலமைச்சர், தற்போது மட்டும் ஓடோடி வந்ததன் பின்னணியை மக்கள் அறிவார்கள்.
நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், முன்னாள் சாராய அமைச்சர் இத்தனை பதட்டப்படுவது தான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது". எனத் தெரிவித்துள்ளார்.தவெ.க எனும் அரசியல் கட்சியின் செயலை நீதிமன்றம் கடுமையாக கண்டிக்கிறது. குழந்தைகள், பெண்கள் இறந்து கிடந்தபோதும் சம்பவ இடத்தில் இருந்து தப்பிவிட்டனர். தவெக தலைவருக்கு தலைமைத்துவ பண்பே இல்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. கரூர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு கருணை காட்ட முடியாது.
கரூரில் நடைபெற்ற இந்த நிகழ்வு மனிதனால் நிகழ்த்தப்பட்ட பேரழிவு. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், அரசு அமைதியாக இருக்க முடியாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் இருந்து எது கட்சியை தடுத்தது. குடிநீர் வழங்குவதற்கு கூட ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.அனைத்தும் நடைபெற அனுமதித்துள்ளீர்கள், காவல்துறை கண்மூடிக்கொண்டிருக்க முடியாது. சம்பவம் தொடர்பான வீடியோக்களை பார்க்கும்போது வேதனை அளிக்கிறது. நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. கலவரம் நடைபெறுவதை போல நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர்.
ஒன்றிரண்டு தவிர மற்ற நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளன. கட்சி தொண்டர்களை விட்டுவிட்டு தலைவரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் மறைந்துவிட்டனர். சம்பவம் நடைபெற்றதும் மற்ற கட்சியினர் உதவிக்கு விரைந்த போது தவெக நிர்வாகிகள் காணாமல் போனது ஏன்?
2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. தவெக இதற்காக காட்டிய பொறுப்பு என்ன? காவல் துறையும் தனது கைகளை கழுவி விட்டது. தவெக தலைவர் விஜய் வாகனத்தால் விபத்து ஏற்பட்டது தொடர்பாக வழக்கு பதியப்பட்டதா? விஜயின் வாகனம் மோதியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாவிடில் மக்கள் எப்படி நம்புவார்கள்? வழக்குப்பதிவு செய்ய என்ன தடை? புகார் இல்லாவிட்டாலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்கலாம்.
கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு நியமிக்கப்படுகிறது. வழக்கின் ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக்குழு விடம் உடனே ஒப்படைக்க கரூர் காவல் துறைக்கு உத்தரவிடப்படுகிறது.கரூர் சம்பவத்தில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது சென்னை உயர்நீதிமன்றம்! வழக்கறிஞர்கள் முன் வைத்த வாதத்தில்
"கரூரில் 41 பேர் பலி தொடர்பாக தவெகவினர் மீது காவல் துறையால் புனையப்பட்ட வழக்கு என்பது நடந்த சம்பவத்தில் மாநில அரசுக்கும் பொறுப்பு உள்ளது. தவெக மீது வழக்கு தொடர்ந்ததில் காவல் துறைக்கு உள்நோக்கம் உள்ளது. எங்களுக்கு அறிவுரை கூறியதாக FIR ல் கூறியுள்ள காவல் துறை என்ன அறிவுரை எனக் கூறவில்லை.
நடிகர் ஷாருக்கான் அனுமதியின்றிக் கூட்டிய கூட்டத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட போது அவர் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. அவ்வாறு இருக்கும் போது புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மீது மட்டும் ஏன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என தவெக தரப்பு வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியது மேலும் காவல்துறை ஏன் தடியடி நடத்தியது. தலைவர் விஜய் பரப்புரைக்கு காலியான ஆம்புலன்ஸ் வந்தது ஏன், எதற்காக தவெக பொதுச் செயலாளர் மீது எப்படி வழக்குப் பதிவு செய்ய முடியும்?
கூட்டத்தை கட்டுப்படுத்துவது அரசின் கடமைதான். எங்களுக்கு சம்பந்தமில்லை. எனவும் வாதம் நடந்தது. இது குறித்து பிரதிவாதம் முடிந்து நீதிபதி கருத்தாக தமிழ்நாட்டில் உள்ள பல கட்சியில் யார் யாருக்கு தலைமைத்துவ பண்பு இருக்கிறது என்பதை ஆராய்வது நீதிமன்றத்தின் வேலை கிடையாது. சட்டம் மீறப்பட்டிருந்தால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கலாம். மற்ற கருத்துக்கள் அவசியமற்றது மேலும் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் போது இது விவாதம் ஆகலாம்.
திருவள்ளூர் மாவட்டம் ஒரு பையன் கடத்தப்பட்ட வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் பூவை மூர்த்தி, தன்னை விட உயர் அலுவலர் ஏடிஜிபி ஜெயராமன் சம்பந்தப்பட்டதில் நடவடிக்கை எடுத்தார். ஆனால் மதுரையில் பணியில் இருந்த போது இவர் மீது ஏகப்பட்ட குற்ச்சாட்டுகள் இருந்தது. இதனையடுத்து விசாரணையின் நிறைவாக, விதிகளை வகுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை முடித்துவைத்தார் நீதிபதி செந்தில் குமார். இந்த நிகழ்வு இனி மேல்முறையீடு செல்லுமா என்பதை அக்கட்சியின் முடிவு தான் வெளிப்படுத்தும் இந்த நிலையில் கரூரில் பார்வையிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தூதுக்குழுவின் ஒரு பிரதிநிதியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பினர். அனுராக் தாக்கூர், தமிழ்நாடு முதல்வருக்கு
அவர்கள் ஆய்வு செய்த ஆரம்பக் கண்டுபிடிப்புகளின்படி, தடுப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், சோகத்திற்கு பங்களித்த குறைபாடுகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகள் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்த மாநில அரசால் திட்டமிடப்பட வேண்டும்" என கடிதம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயி Y பிரிவின் பாதுகாப்பு குளறுபடி பற்றி, சி.ஆர்.பி .எப்., இடம், மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது. தவெக தலைவர் விஜய்க்கான பாதுகாப்பு பணியில் குளறுபடிகள் நீடிப்பதால், அது பற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சி.ஆர்.பி.எப்., உயர் அலுவலர்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. Y பிரிவு பாதுகாப்பு. பாதுகாப்பு பெறும் நபருடன் 8 ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள். இவர்களில் 1அல்லது 2 கமாண்டோக்கள் இருப்பார்கள்.
இந்நிலையில், சி.ஆர்.பி.எப்., வீரர்களிடம், டில்லியிலிருந்து சென்னை வந்த உள்துறை அமைச்சக அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அனேகமாக Y பிரிவில் இருந்து Z பிரிவு கொடுக்க வாய்ப்பு உள்ளது.
























கருத்துகள்