சமூக வலைத்தளங்களில் யாரையும் விட்டுவைக்காமல் விமர்சிக்கின்றனர்.
சமூக வலைதள விமர்சனங்களை புறக்கணிக்கவேண்டும். உத்தரவுகளை பிறப்பித்தற்காக நீதிபதிகளும் விமர்சிக்கப்படுகிறார்கள் - நீதிபதி செந்தில்குமார் கருத்து
சமூக வலைதள விமர்சனங்களை புறக்கணிக்க வேண்டும்.
தனக்கு எதிராக அவதூறுக் கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள காணொளிக் காட்சிகளை நீக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் எனும் நடிகர் மற்றும் சமையல் கலைஞர் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என்.செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்ற போது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் கிரிசில்டா மீது தான் வைத்திருந்த நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்தி தன்னை ஏமாற்றிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஜாய் கிரிசில்டாவின் பேட்டி காரணமாக தனது 2 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு எதிராக அவதூறுக் கருத்துக்களைத் தெரிவிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டுமென்றும் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. வாதங்களைக் கேட்ட நீதிபதி செந்தில்குமார், இருவருக்கும் இடையிலான உறவு குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இடைக்காலத் தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. சமூக வலைத்தளங்களில் யாரையும் விட்டுவைக்காமல் விமர்சனம் செய்கின்றனர். உத்தரவுகளை பிறப்பித்ததற்காக நீதிபதிகளும் விமர்சிக்கப்படுகின்றனர். சமூக வலைதள விமர்சனங்களைப் புறக்கணிக்கவேண்டும் எனக் கூறி, மனுவுக்கு அக்டோபர் மாதம் 22- ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என ஜாய் கிரிசில்டாவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.
முன்னதாக, கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் த.வெ.க. தலைவர் விஜயை நீதிமன்றம் விமர்சித்தது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. தனக்கு எதிராக அவதூறுக் கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடந்த போது இக் கருத்து தெரிவிக்கப்பட்டது.சமூக வலைதளங்கள் தனிமனித சுதந்திரம் மற்றும் பல குளறுபடிக்கு காரணபாகிறது அதேபோல் சமூக வலைதளவாதிகள் தங்கள் அறிவுக்கு எட்டிய விபரங்களை சமயத்தில் குப்பை போல கொட்டி வைப்பதை தடுக்க வேண்டும். அதே போல் ஒருவர் பகிரும் தகவல்களை தபால்காரர் பணிபோல் பலருக்கும் பகிர்ந்து அதை ஒரு பொழுத்போக்காகவே செய்துவரும் செயல் தடுக்கவேண்டும் என்பதே பலரது கோரிக்கை... இது குறித்து பொதுநீதி கூறவேண்டுமானால் ,, "வழி தெரியாத...ஆறு இது..
இதை நம்பித் தானா... ஓடுவது..
புது வெள்ளம் சேரும் போது
வழி என்ன? பாதை என்ன?
காத்தாகி வீசும் போது
திசை என்ன தேசம் என்ன " என்ற பாடல் வரிகள் கூறும் நிலை தான் நிலவுகிறது.



கருத்துகள்