முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இட்லிக் கடை திரைப்பட விமர்சனம்.

தகப்பன் செய்த தொழிலை மகன் செய்த காலம்  ஒன்றுண்டு


அது விவசாயம் மற்றும் சில குலத்தின் பரம்பரைத் தொழிலாக நடந்த இந்தியா சுதந்திரமடைந்து மக்கள் 1947 ஆம் ஆண்டு கடந்து 1985 ஆம் ஆண்டு வரை 30 சதவீதமிருந்த கிராமத்து மக்கள் செய்த நிலை என்பது தற்போதில்லை காரணம் கல்வி சுதந்திரம், சமத்துவம், சட்டம் உள்ளிட்ட தற்சார்பு நிலை, ஆனால்  விவசாயமற்றுப்போய் புஞ்சை நிலங்களை மனையிடமாக மாற்றி தற்போது இடப்பற்றாக்குறை காரணமாக நஞ்சை நிலங்களையும் மனையிடமாக மாற்றும் நிலை வந்த பின்னர் இன்னும் கதாநாயகன் தகப்பன் அவித்த அதே இட்லிச் சட்டியில் அவிக்கும் ஆவி பறக்கும் இட்லி என்ற நிலை என்பது கிராமத்தில் தற்போது  எங்குமில்லை திண்டுக்கல் தலைப்பாக்கட்டி நாயுடு கடை தகப்பன் காலத்தில் சிறியது மகன் காலத்தில் விரிவடைந்து உலகம் முழுவதும் பரவியது வியாபாரத் தந்திரம் மூலம் ஒரு கார்பொரேட் வர்த்தக முறை விற்பனை

தந்தை காலத்தில் முதலில் இருந்த தொழில் தர்மமோ ருசியோ இப்போதில்லை. அதே போல் தான் மதுரை அண்ணாமலை பிள்ளை ஆரம்பித்து நடத்தி பின்நாளில் பல கிளைகள் உள்ள முருகன் இட்லி கடை ஆனால் அவர்கள் நியாயம் தர்மம் இல்லாமல் தற்போது பணம் பார்க்கிறார்கள்,  தந்தை காலத்தில் ஒரு தர்மமிருந்தது. அசைவ உணவை தர்ம நியாயப்படி வழங்கிய சுவை மனம் கொண்டு நடத்திய சென்னை வேலு மிலிட்டரி மற்றும் பொன்னுச்சாமி ஹோட்டல், தந்தை காலத்தில் சிறப்பாக இயங்கி மகன் காலத்தில் மறைந்து போனதே வடக்கம்பட்டி முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நிலை மறந்து தற்போது அஞ்சப்பர் ஹோட்டல் ஆரம்பித்து கார்ப்பரேட்  விலை முன் காணாமல் போகக் காரணம், மன்வாசனை மறந்துபோன அடுத்த தலைமுறை தான். எனது உறவினரில் கூட தந்தை செய்த உணவகத்தை மகன் நடத்தும் நிலையில் அதே அடுப்பு அதே ஆட்டுக்கல் எனக் கிடையாது ஏதோ கிராமம் அறியாமல் நகர வாழ்வியல் கொண்ட மக்களை ஏமாற்றி காதில் பூ சுற்றி ராஜ்கிரண் அவித்த இட்லியை பல முறை வேகவைத்த தனுஷ்  திரைக்கதையில் எதார்த்தமில்லை. தென்மாவட்டங்களில் வாஜ்பாய் வெளியுறவு அமைச்சராகி சாமானிய மக்களுக்கு கடவுச் சீட்டு வழங்கி பிழைத்து வந்த மக்கள் தான் கூரை வீடு ஓட்டு வீட்டுக்கும் ஓட்டு வீடு தார்சாவும் மாறியது தான் உண்மை காரணம் உழைப்பு யாரும் வெளிநாடே போகக்கூடாதா?  அப்படி வெளிநாடு சென்றுவிட்டு வந்தால் தாய் மறந்துவிடுவாரா?.. அப்பா செய்யும் தொழிலைத்தான் மகன் செய்ய வேண்டுமா? யாருமே அந்தக் கிராமத்தை விட்டு நகரக்கூடாதா? இந்த படத்தை தயாரித்தவரின் தாத்தா வாங்கியவரின் தாத்தா நடித்தவரின் தாத்தா எல்லோரும் கிராமத்தில் இருந்து புறப்பட்டு வந்நவர்களே 


இந்தப் படத்தில் யார்தான் மாவாட்டவில்லை: கதை நடக்கும் ஊரில் 40 பேர்கூட இல்லை. ஆனால் எஞ்சாமி பாடலுக்கு 4,000 பேர் திருவிழா என ஆடுகிறார்கள். அவர்கள் யார் கதைக்கு தொடர்பில்லை கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் இப்போதெல்லாம் இந்தாப்பா என்று கொடுத்தால் நடித்துவிடுகிறார். அந்தப் படத்தில் வரும் ஆட்டுக்கல்லில் நடிகர் சமுத்திரகனியைத் தவிர்த்து எல்லோருமே மாவாட்டுகிறார்கள். மாவாட்டாத ஆளே இல்லை. இட்லி ஆறிப் போய்விட்டது. ஷோவெல்லாம் இனி பட்டினி கிடக்கும் என்ற விமர்சனம். படம் எப்படி இருக்கிறது என்று என்னை கேட்டால் இந்த இரண்டு இட்லிக்கு எதற்காக நான்கு வகை சட்னி" என்கிறார் ஒரு நடிகர். தகப்பன் மகன் கதைப்படி  இனக்கமான காட்சி அமைப்பு இல்லை,  இருந்தாலும் புரிந்து கொள்ளாமல் வாழும் பணம் படைத்த அயல் நாட்டு வாழ்வில் திளைத்த ஒரு குடும்பத்தின் உறவுக்கும் கிராமத்தில் ஏழை தகப்பன் மகன் உறவுக்கும் பாசத்திற்குமான நிலையில் எது இறுதி அளவுகோள் என கதை உணர்த்தும் நிலை. பார்த்திபன் பாத்திரம் நிறைவு  இந்தப்படம் தற்போது அணைத்து மக்கள் பார்க்கும் வகையில் எடுத்து அது வெற்றி பெற்றால் தொடர்ந்து மற்றவர்கள் தோசைக்கடை, இடியப்பக் கடை. வடநாட்டு சப்பாத்திக் கடை எனப் பெயர் கொண்ட படங்கள் இனி வரும்.               இட்லி கடையில் கன்றுக் குட்டி கூட நடிப்பில்  நித்யா மேனன் போல வாழ்கிறது "என் அப்பா இறந்து 1வருடம்,அம்மா இறந்து 6மாதம் ஆகிறது.அவங்க இன்னும் என் வீட்டில் வாழ்கிறார்கள்.


"இட்லி கடை" என்னை இன்னும் என்னை      எனர்ஜியாக ஓட வைக்கறது" தனுஷ் வார்த்தை 90s கிராமத்தில் இருந்து புலம் பெயர்ந்த கிட்ஸ்க்கு இட்லி கடை’யில் தானும் ஒரு பாத்திரமாக அதுவும் கைதட்டல் வாங்கும் ஒரு கதாபாத்திரமாக உள்ள நிலையில் அஹிம்சை வெல்லும் என இன்று அக்டோபர் 2 மக்கள் நினைவில் வாழும் மகாத்மா காந்தி கூட இப்படி ஒரு திரைப்படத்தை எடுக்கத் தயங்குவார். காரணம் ரிவேஞ் இரத்தம்தான் box office-ன் வண்ணமாகவே உள்ளது. 

பூவிற்கு நாரின் பெருமையை விட தன் வேரின் பெருமை தெரிய வேண்டும் தற்காலத்தில் சொந்த அப்பத்தா பெயர் கூடத் தெரியாத பிள்ளைகள் பலர் வந்து விட்ட நிலைமயில் அதுபோல பிள்ளைகளுக்கு தங்களின் பெற்றோரையும் பூர்வீகத்தையும், குலதெய்வத்தையும் அடையாளப்படுத்தும் விதமாய் செய்திருப்பது பேசு பொருள். கண்கலங்கியது பல இடங்களில். நம் மண்ணின் கலைஞன் இளவரசு பாத்திரமாகவே பிரகாசிப்பார். அதுபோல நித்யா மேனன் நடிப்பு சிறப்பு.


அன்பால் வளர்க்கப்பட்ட மகனுக்கும், வசதியாய் வளர்த்து அடம் பிடிக்கும் மகனுக்குமான மோதலை மையமாக உள்ள கதை மொத்தத்தில் கருத்து வசனம் கொஞ்சம் குறைவாக, காட்சிகள் மூலம் திரைக்கதை சற்று தெளிவாக நிறைவாக இருந்திருந்தால் படம் குறை கூற முடியாது

இட்லி ஆவி போல் ஜீவி இசை நன்று                  ஒரு தலைமுறையாக கிராம வாழ்வியல் மறந்து போன மக்களுக்கு ஏதோ அறைகுறையாக பண்பாட்டை கலாச்சாரத்தை அறைத்து இட்லி கடை மாவுகள் வந்து கொண்டிருக்கும். இதில் கதைக் களத்தில் ஒரு உண்மை மறைந்து போனது இட்லிக் கடை ராஜ்கிரண் நடத்தும் காலத்தில் கிராமத்தில் மக்கள் ஹோட்டல் செல்லும் பழக்கம் போன தலைமுறை மக்கள் மத்தியில் அறவே இல்லை என்பதை தடம் பதிவு செய்யத் தவறியது தான் இயக்குனர் செய்த பிழை, மொத்தத்தில் இது வேகாத இட்லி வியாபார இட்லி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...