ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் நேற்று முதல் பேச்சுவார்த்தை
20 அம்ச அமைதி திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கான கெடு முடிந்தநிலையில் ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் தரப்பு நேற்று திங்கட்கிழமை துவங்கி பேச்சுவார்த்தை இரண்டாம் நாளாக நடக்கிறது.; பாலஸ்தீனத்தை நிர்வகிக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்குமிடையே 2 ஆண்டுகளாக போர் நீடிக்கிறது. அதை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 20 அம்சம் கொண்ட அமைதித் திட்டத்தை பரிந்துரைந்தார்.
காசாவை ஒரு பயங்கரவாதமற்ற, அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் இல்லாத அமைதிப் பூங்காவாக மாற்றுவதை முக்கிய அம்சமாக இந்தத் திட்டம் கொண்டுள்ளது. செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதி வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல் தெரிவித்தார். ஹமாஸ் அமைப்பினர் ஒப்பந்தத்தை ஏற்க 72 மணிநேர கெடுவும் விதிக்கப்பட்டு கெடு முடிந்தநிலையில் ஹமாஸ் அமைப்பினர் 20 அம்ச திட்டத்தை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தது. குறித்து விரிவாகப் பேச மத்தியஸ்த நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தது. அதைத் தொடா்ந்து காசாவில் உள்ள சில பகுதிகளிலிருந்து படைகளைத் திரும்ப பெறுவதாக நெதன்யாகு அறிவித்தார். டொனால்ட் டிரம்பின் அமைதித் திட்டத்தை செயல்படுத்தத் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நெதன்யாகுவின் இந்த நடவடிக்கையை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, இஸ்ரேல் தனது படைகளை வெளியேற்ற ஒப்புக்கொண்டுள்ளது. இதனை ஹமாஸ் அமைப்பினரிடம் பகிர்ந்துள்ளோம். ஹமாஸ் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியதும், போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வரும். பணயக் கைதிகள் பரிமாற்றம் தொடங்கும். அமைதி நிலவும். 3 ஆயிரம் ஆண்டு பேரழிவின் முடிவு நெருங்குகிறது. அனைவருக்கும நன்றி. நல்ல செய்திக்காக காத்திருங்கள்” எனக் கூறியுள்ளார் .அனைத்துப் பணயக் கைதிகளையும் விடுப்பதாக ஹமாஸ் ஒப்புக்கொண்டதையடுத்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த டிரம்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து எகிப்து தலைநகர் கெய்ரோவில் பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் 20 அம்ச திட்டம் குறித்து விரிவாக பேசப்பட இருக்கிறது. இதில் இஸ்ரேல் தரப்பில் மூலோபய மந்திரி ரான் டோமர், கைதிகள் பரிமாற்ற விவகார மந்திரி கால் ஹிர்ஸ்ச் மற்றும் மொசட் உயரதிகாரிகள் கலந்து கொண்டார்கள். ஹமாஸ் தரப்பில் முக்கிய தளபதிகள் கலந்து கொண்டனர். மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்காக மத்திய கிழக்காசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்கோப், டிரம்பின் மருமகனும் அவரின் தனி ஆலோசகரான ஜேரட் குஷ்னர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர், சர்வதேச அளவில் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து போர் நிறுத்த பேச்சுவார்த்தை எகிப்தில் நேற்று தொடங்கியது. இன்று இரண்டாவது நாளாக பேச்சுவார்த்தை நீடிக்கிறது.இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய பிரதிநிதிகளுக்கு இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் ஷர்ம் எல்-ஷேக்கில் நேற்று தொடங்கியது. அமெரிக்கா முன்மொழிந்த போர்நிறுத்தத் திட்டத்தின் நிபந்தனைகளை இரு தரப்பும் விவாதிக்கத் தொடங்கின.ஹமாஸ் கைது செய்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பது, பதிலுக்கு இஸ்ரேல் கைது செய்து வைத்திருக்கும் பாலஸ்தீனக் கைதிகளை விடுதலை செய்வது, என இரு தரப்பும் கைதிகள் பரிமாற்றம் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக எகிப்து உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையை எகிப்து மட்டுமல்லாது கத்தார் தலைவர்களும் வழி நடத்தி வருகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்த போர்நிறுத்தம் மற்றும் பரந்த அமைதி செயல்முறையைத் தொடங்குவதற்கான திட்டத்தின் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடுவது, காசாவிலிருந்து இஸ்ரேலிய படைகளை கொஞ்சம் கொஞ்சமாக வாபஸ் பெறுவது, பணயக்கைதிகள் விடுதலைக்கு பதிலாக, காசாவில் அரசியல் மாற்றம் ஏற்படுத்துவது ஆகியவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முன்வைத்துள்ள திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஹமாஸின் பேச்சுவார்த்தைக் குழுவை மூத்த தூதர் கலீல் அல்-ஹய்யா வழிநடத்துகிறார். இவர் சமீபத்தில் தோஹாவில் நடந்த இஸ்ரேலிய தாக்குதலிலிருந்து தப்பினார். பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன் அவர் எகிப்திய உளவுத்துறை அதிகாரிகளைச் சந்தித்தார். பாலஸ்தீனம் இஸ்லாமியர்களின் நிலப்பரப்பாகும். ஆனால் இங்கு குறிப்பிட்ட அளவுக்கு நிலத்தை வாங்கிக் குடியேறிய இஸ்ரேலியர்கள், கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்தனர். குறிப்பாக காசாவை ஒரு திறந்தவெளிச் சிறையாக மாற்றினர். இதற்கு எதிராகக் குரல் எழுப்பியவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில்தான் கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேல் மீது, பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. அன்று துவங்கி இன்று வரை இஸ்ரேல் ராணுவம், பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் 60,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். போர் நிறுத்தம் தொடர்பாக சர்வதேச நாடுகள் பல வகையில் வலியுறுத்தியும் இஸ்ரேல் ராணுவம் அதை ஏற்கவில்லை என்பதே.








கருத்துகள்