தலைமை நீதிபதி மீது காலணி வீசிய ராகேஷ் கிஷோரை மன்னித்து விட்ட நிலையில் நடவடிக்கை தேவையில்லை என நீதிபதிகள் கருத்து
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது
கிரிமினல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை அக்டோபர் மாதம்.27 ஆம் தேதி நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது
வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது கிரிமினல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மனுத்தாக்கல் செய்த நிலையில் நேற்று நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்த நிலையில்
அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த சம்பவத்திற்கு எதிராக கிரிமினல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க இந்திய அட்டர்னி ஜெனரல் ஒப்புதல் அளித்ததாக, மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி அன்று நீதிபதி காந்தின் அமர்வு முன்பு தெரிவித்தார். இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் இந்த மனுவிற்கு ஆதரவு, இந்த விவகாரம் மீண்டும் கவனத்திற்கு வருவதைத் தவிர்ப்பதற்காக, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்வதில் அமர்வு தயக்கம் காட்டியது. தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்த நிலையில், இந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிடுவது புத்திசாலித்தனம் என்று அமர்வு குறிப்பிட்டது.
மேலும், முக்கியத்துவம் வாய்ந்த வேறு பல வழக்குகளுக்கு பயன்படுத்தக்கூடிய நேரத்தை இந்த விவகாரத்திற்காக செலவிடுவது சரியா என்றும் அமர்வு கேள்வி எழுப்பியது. ஆனால், இந்த சம்பவம் நிறுவனத்தின் கௌரவத்துடன் தொடர்புடையதென்று சிங் வலியுறுத்தினார்.நீதிமன்ற அமர்வில், கோஷம் எழுப்பியது, காலணி வீசியது நிச்சயமாக நீதிமன்ற அவமதிப்புதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இதில் சம்பந்தப்பட்ட நீதிபதி தான், இந்த வழக்கைத் தொடர வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று கூறினர்.
சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு, இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்புவது, தலைமை நீதிபதி மீது காலணியை வீசிய வழக்குரைஞருக்கு தேவையற்ற முக்கியத்துவத்தை அளிக்கவே உதவும். மேலும் அந்த சம்பவத்தின் ஆயுளை அதிகரிக்கும் என்று கூறிய நீதிபதிகள், இந்த சம்பவம் இயற்கையான மரணத்தை அடைய அனுமதிக்க வேண்டும் என்றனர்.
அப்போது பார்க்கவுன்சில் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி ‘காலணி வீசியவர், தான் செய்த செயலை நியாயப்படுத்தி பேசி வருகிறார். மீண்டும் அதுபோன்ற செயலை செய்வதாகக் கூறியுள்ளார். தலைமை நீதிபதி தனிப்பட்ட முறையில் மன்னிப்பு வழங்கி இருக்கலாம். சமூக ஊடகங்களில் பாராட்டு தெரிவிக்கும் வகையில் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.தலைமை நீதிபதி மீது காலனி வீசித் தாக்குதல் நடந்த அன்றே "இது என்னைப் பாதிக்காது" என தனது வேலைகளைத் தொடர்ந்தார் நீதிபதி கவாய். பின்னர் இந்த சம்பவத்தை "மறக்கப்பட்ட அத்தியாயம்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நீதிபதி கடவுளை தவறாக பேசி நிந்தனை செய்ததாக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தெரிவித்திருந்தார் இந்த நிலையில்,
வழக்கறிஞர் விகாஸ் சிங், அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி தாக்குதலுக்கு பிறகான ராகேஷ் கிஷோரின் நடவடிக்கைகளையும், ஊடகங்களில் தான் செய்ததை பெருமைக்குரியதாகப் பேசியது உள்ளிட்டவற்றைக் குற்றமாகக் கருதலாம் என வாதாடினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதைக் கைவிட்டு, இதுபோன்ற செயலை பெருமைக்குரியதாக கருதுவதைத் தடுக்க வழிமுறைகளை உருவாக்குவது குறித்து பார்க்கலாம் என முடிவானது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், காலணி வீசிய ராகேஷ் கிஷோரை மன்னித்து விடுவிக்க தலைமை நீதிபதியே கூறிவிட்டார். எனவே மேலும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறோம். அதே நேரத்தில் உரிய வழிகாட்டி நெறி முறைகளை வகுத்து வெளியிடலாம் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.









கருத்துகள்