நாம் தமிழர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலக்ஷ்மி என்பவர் தொடர்ந்த வழக்கை இன்று முடித்து வைத்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகர் மற்றும் இயக்குனருமான சீமானுக்கு எதிராக நடிகை விஜயலக்ஷ்மி என்பவர் தொடர்ந்த வழக்கை இன்று முடித்து வைத்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்
! " சீமான் மன்னிப்புக் கேட்ட நிலையில் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது" எனத் தான் செய்தி வருகிறது.
நடிகை விஜயலக்ஷ்மி தொடர்ந்த வழக்கில் 376 IPC முகாந்திரம் இல்லை (Merit of the Case) என்பதால் உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
Out of the Court முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக மட்டுமே. உச்சநீதிமன்ற உத்தரவில் இருவரும் ஒருவருக்கொருவர் மன்னிப்புக் கோர வேண்டும், "Tender Apology Against Each Other" எனவும் உள்ளது. இந்த நிலையில்
மேற்படி உத்தரவு தெளிவாக இருக்கையில் தமிழ்நாட்டு ஊடகங்கள் சீமானுக்கு எதிராக ஒரு தலைப்பட்சமாக செய்தி வெளியிடுவது அபத்தமானதும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதும் ஆகும் (Contempt of the Court) என தெரிவித்து வருகின்றனர். ஆனால் There is a huge difference in disposed and allowed. ன்ற வாசகம் உள்ள நிலையில்
சீமானின் வழக்கு முடித்து மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான முடிவுக்கு வர வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி மன்னிப்புக் கோரத் தவறினால், சீமானின் கைது தடைஉத்தரவு ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தத நிலையில், சீமானின் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிக்கையைத் தொடர்ந்து, நடிகை விஜயலட்சுமி தரப்பும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி, நடிகர் சீமானுக்கு எதிரான புகாரைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தது.
இரண்டு தரப்பினரின் பரஸ்பர மன்னிப்பு மற்றும் சுமூக உடன்பாட்டை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டதுடன், பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்ட உறுதிமொழியைப் பின்பற்றி, இரண்டு தரப்பினரும் இனி எந்தவிதமான குற்றச்சாட்டுகளையோ, அவதூறுகளையோ பரப்பக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.நடிகரும் இயக்குனருமான சீமான், உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், சீமானுக்கு எதிரான வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
பிரமாணப் பத்திரத்தில் சீமான் கூறிய உறுதி:
"எனது சொல் மற்றும் செயல்களால் நடிகை விஜயலட்சுமிக்கு வலி அல்லது காயம் ஏற்பட்டிருந்தால், நிபந்தனையின்றி மன்னிப்புக் கோருகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், விஜயலட்சுமிக்கு எதிராக தான் வெளியிட்ட அனைத்து அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறுவதாகவும், இனி எந்தவொரு ஊடகத்திலும் அவர் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் என சீமான் தரப்பு உறுதியளித்துள்ளது. அதன் அடிப்படையில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.





கருத்துகள்