நாமக்கல் மாவட்டம் கிட்னி திருட்டு வழக்கை விசாரிக்க சிறப்புக் குழு அமைத்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
கிட்னி திருடிய முறைகேடு வழக்கு தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர் நாமக்கல் மாவட்ட ஏழைக் கூலித் தொழிலாளர்களை சில புரோக்கர்கள் மூளைச்சலவை செய்து, சட்டவிரோதமாக சிறுநீரகத்தை தானமாகப் பெற்றனர். திருச்சிராப்பள்ளி, மற்றும் பெரம்பலுாரில் இயங்கும் இரண்டு தனியார் மருத்துவமனைகள் இந்த உல் உறுப்பு ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டன. ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரான திமுக பிரமுகருக்குச் சொந்தமான மருத்துவமனை என்பதால், தமிழ்நாடு அரசு முறையாக விசாரிக்க வாய்ப்பில்லை.
வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என சென்னை யர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ''கிட்னி விற்பனை முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மனுக்கள் உச்சநீதி மன்றத்தின் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது தமிழ்நாடு அரசு தரப்பில், ''சிறப்பு புலனாய்வுக்குழுவை எதிர்க்கவில்லை, சிறப்பு விசாரணை அலுவலர் நியமனத்தை மட்டுமே எதிர்க்கிறோம். நாங்கள் தரும் அதிகாரிகள் பட்டியலில் தகுதியானவர்களை நீதிமன்றம் நியமிக்க வேண்டும்'' எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. கிட்னி முறைகேடு குறித்து சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்த சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து வழக்கு விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டனர். தமிழ்நாடு
கிட்னி திருட்டு என்பது முதலில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனைக்கு தடை!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நெசவுத்தறி ஏழை கூலித் தொழிலாளர்களின் சிறுநீரகங்கள் விற்பனை மோசடி செய்யப்படும் சம்பவம் விஸ்வரூபம் எடுத்துது. இந்த மோசடியில் ஈரோடு திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூரில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் ஈரோட்டில் உள்ள அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் இது தொடர்பாக உயர் அலுவலர்கள் விசாரணை நடத்தினர். மேலும் ஏற்கனவே முறையற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான பிரச்சனையில், ஈரோடு அபிராமி கிட்னிகேர் மருத்துவமனை செயல்படுவதற்கு தற்காலிகத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது் உயிர் காக்கும் அவசர சிகிச்சையான டயாலிசிஸ் மட்டுமே மேற்கொள்ள அந்த மருத்துவமனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிறுநீரகத் திருட்டு முறைகேடு புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட குழுவின் முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தமிழநாடு அரசு தடை விதித்துள்ளது. இதேபோல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள திருச்சிராப்பள்ளி சிதார் மருத்துவமனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனை என்பது
திமுகவின் மண்ணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்குச் சொந்தமானது. திருச்சிராப்பள்ளி தில்லைநகரில் உள்ள சிதார் மருத்துவமனை,
திமுகவின் தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருக்கமான டாக்டர் .ராஜமாணிக்கம் நடத்தும் மருத்துவமனையாகும். இந்த நிலையில் நாமக்கல் கிட்னி திருட்டு வழக்கை விசாரிக்க பிரேம் ஆனந்த் சின்ஹா ஐபிஎஸ் தலைமையில் 4 ஐ.பி.எஸ். உயர் அலுவலர்கள் அடங்கிய குழுவை நியமித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் தற்போது மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது விசாரணை தீவிரமாக இனித் துவங்கும்.கிட்னி திருட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு திமுகவுக்கு சம்மட்டி அடி: என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணியும், ஒரே நாளில், டெல்லி முதல் மதுரை வரை, திமுகவின் மனசாட்சியை விட வேகமாக, நீதியும் தர்மமும் திமுகவைத் துரத்திக் கொண்டிருக்கின்றன.- என பாஜக வின் முன்னால் தலைவர் அண்ணாமலையும், திருப்புவனம் அஜித்குமார் வழக்கை சிபிஐக்கு மாற்றினோம் என்று பெருமை பேசிய நிலையில் இன்று ஒரு வழக்கில் சிறப்பு விசாரணை குழு வேண்டாம் எனவும் மற்றொரு வழக்கில் வேண்டும் எனவும் நிகழ்ந்த வாதம் தான் நகை முரனாகும் என மூத்த பத்திரிக்கையாளர்களும் பேசும் நிலையில் தான் மக்கள் மத்தியில் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.









கருத்துகள்