முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TASMAC ஊழல் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடையை நீடித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில்  TASMAC  அலுவலகத்தில்  அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்ட வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்றது. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தமிழ்நாடு அரசு சார்பாக வாதங்களை முன்வைத்தார்.

TASMAC நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் மார்ச் மாதம் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 41 முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் TASMAC money laundering case, provisions of PMLA. அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.எந்த வழிமுறையையும் பின்பற்றாமல் அமலாக்கத் துறையினர் மாநில அரசின் அலுவலகத்தில் சோதனை நடத்தி கணிப்பொறிகள் லேப்டாப்புகள் முதலிய தரவுகளை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இது அதிர்ச்சி அளிக்கக்கூடிய சம்பவம்" என தமிழ்நாடு அரசு சார்பில் குற்றம்சாட்டியது.

TASMAC  மது விற்பனைகளில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றிருக்கிறது. அதனால் தான் பண மோசடி கோணத்தில் நாங்கள் விசாரணையை தொடங்கினோம். எங்கள் விசாரணையில் ஒரு பகுதிதான் நடத்தப்பட்ட சோதனையாகும்” என அமலாக்கத்துறையினர் தரப்பில் வாதமும் முன்வைக்கப்பட்டது.TASMAC மது விற்பனைக் கடைகளில் MRP-யை விட அதிகக் கட்டணத்தை வாடிக்கையாளர்களிடமிருந்து ஊழியர்கள் வசூலிக்கிறார்கள். மேலும் அனுமதிக்கப்படாத வெளிநாட்டு மதுபானங்களையும் கூட டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் விற்கிறார்கள்.இவை அனைத்திலும் லஞ்சப் பணம் விளையாடுகிறது. இவை அனைத்தும் உயர் பணியில் மேல்மட்டத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து பகிர்ந்தளிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இது தினம் தோறும் நடக்கும் நடைமுறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு அமைந்ததுஇந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கி ய உத்​தரவை எதிர்த்து தமிழ்​நாடு அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தது. உச்ச நீதி​மன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.க​வாய் தலை​மையி​லான அமர்​வு, அந்த மேல்​முறை​யீட்டு மனுவை  மே மாதம் 22-ஆம் தேதி விசா​ரித்​த போது, அமலாக்கத் துறை விசா​ரணைக்கு இடைக்​காலத் தடை விதித்​த நிலை​யில், இந்த வழக்கு விசா​ரணை தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய், நீதிபதி கே.​வினோத் சந்​திரன் ஆகியோர் அடங்​கிய அமர்வின் முன்பு நேற்று விசாரணை மீண்​டும் நடந்​தது. தமிழ்​நாடு அரசு சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் கபில் சிபல் வாதாடிய​போது  மாநில அரசு நிறு​வனத்​தில் அமலாக்​கத் துறை எப்​படி சோதனை நடத்த முடி​யும்? டாஸ்​மாக் இயக்​குநர் வீட்​டில் சோதனை நடத்​தி​யுள்​ளது. டாஸ்​மாக் முறை​கேடு புகார்​கள் தொடர்​பாக தமிழ்​நாடு அரசே வழக்​குப் பதிவு  செய்து விசா​ரித்து வரு​கிறது.இந்த வழக்​கு​களை எப்​படி விசா​ரிக்க வேண்​டும் என்​பதை தமிழ்​நாடு அரசு​தான் முடிவு செய்​யும். முறை​கேடு வழக்​குப் பதிவு செய்​தால், உடனே அமலாக்​கத் துறை​யும் பண மோசடி வழக்​கைப் பதிவு செய்​கிறது. 2014  முதல் 2021  ஆம் ஆண்டு வரை கால கட்​டத்​தில் TASMAC  விற்​பனை கடைகளுக்கு எதி​ராக மாநில லஞ்ச ஒழிப்​புத் துறை 47 வழக்​கு​களை பதிவு செய்​துள்​ளது.ஆனால், 2025- ஆம் ஆண்டில் அமலாக்​கத் துறை  டாஸ்​மாக் தலைமை அலு​வல​கத்​தில் சோதனை நடத்​தி, ஆவணங்​களை எடுத்​துச் சென்​றுள்​ளது. அமலாக்​கத் துறை பதிவு செய்​துள்ள வழக்கு விவரத்தை மாநில அரசிடம் சட்​டப்​படி பகிர்ந்து கொள்ள வேண்​டும். ஆனால், எந்த விவரத்​தை​யும் அமலாக்​கத் துறை பகிர​வில்​லை என அவர் வாதிட்​டார்.



அமலாக்​கத் துறை சார்​பில் கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் எஸ்​.​வி.​ராஜு ஆஜராகி, இந்த விவ​காரத்​தில் பண மோசடியை அமலாக்​கத் துறை விசா​ரித்து வரு​கிறது. டாஸ்​மாக்​கில் பெரு​மள​வில் முறை​கேடு​கள் நடை​பெற்​றுள்​ளது. இது தொடர்​பாக பதிவு செய்​யப்​பட்ட பெரும்​பாலான வழக்​கு​கள் கைவிடப்​பட்​டுள்​ளன’’ என வாதிட்​டார்.

TASMAC சார்​பில் மூத்த வழக்​கறிஞர் முகுல் ரோத்​தகி வாதிடும் போது, ‘‘ TASMAC தலை​மையகத்​தில் நடத்​தப்​பட்ட சோதனை​யில் அதி​காரி​களின் செல்​லுலர் பேசிகளை அமலாக்​கத் துறை எடுத்து சென்று தரவு​களை நகலெடுத்​துள்​ளது. இது வாழும் உரிமை, தனி மனித சுதந்​திரம் போன்ற அடிப்​படை உரிமைக்கு எதி​ரானது’’ எனவும் வாதிட்​டார்.

அனைத்துத் தரப்பு வாதங்​களை​யும் பதிவு செய்து கொண்ட நீதிப​தி​கள், அமலாக்​கத் துறை அதி​காரத்தை உறுதி செய்த விஜய் மதன்​லால் தொடர்​பான வழக்​கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய மனு வி​சா​ரணை​ இப்போது வரை நிலுவையிலுள்​ளது. அந்த மேல்​முறை​யீடு மனுக்​கள் வி​சா​ரணைக்கு எடுத்​துக் கொள்​ளப்​படும். அது​வரை, அமலாக்​கத் துறை வி​சா​ரணைக்​கு வி​தித்​த இடைக்​காலத் தடையை நீட்டித்து வி​சா​ரணை​யை நிறுத்​தி வைக்​கிறோம்​. என நீதிபதிகள்​ உத்​தரவிட்​டனர்​.இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு, மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வை அடிப்படையாகக் கொண்டது. இந்த அமைப்பின் சமநிலையைப் பாதுகாக்கும் பொறுப்பு நீதிமன்றங்களுக்கு உண்டு. அண்மையில், தமிழ்நாட்டின் மது விற்பனை நிறுவனமான டாஸ்மாக் (TASMAC) தொடர்பான ஊழல் வழக்கில், மத்திய அமலாக்கப் பிரிவின் (ED) விசாரணையை உச்ச நீதிமன்றம் தடை செய்து, அதன் அதிகாரப் பயன்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளது. இது வெறும் ஒரு வழக்கின் விளைவல்ல; இது மாநில உரிமைகளையும் மத்திய அதிகாரங்களின் வரம்பையும் சோதிக்கும் முக்கிய விடயமாகும்.



இந்த வழக்கின் பின்னணி, தமிழ்நாட்டில் மது விற்பனை அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையது. 2014 முதல் 2021 வரை, மாநில அரசே 41 முதல் 47 வரை முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்துள்ளது. இவை தனியார் மது விற்பனைக்காரர்கள் மீது, பணம் பெற்றுக்கொண்டு அனுமதிகளை வழங்கிய குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டவை. இந்த ஊழல், ஆயிரம் கோடி ரூபாய் முதல் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை பரவியிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. மாநில ஊழல் தடுப்பு காவல்துறை  கண்காணிப்பு அமலாக்கத் துறையும் இந்த வழக்குகளை விசாரித்து வருகின்றன. ஆனால், 2025-ஆம் ஆண்டு, அமலாக்கத் துறை TASMAC தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தி, அதிகாரிகளின் தொலைபேசிகளையும் சாதனங்களையும் பறிமுதல் செய்தது.  மத்திய சட்டமன்றப் பிரிவின் PMLA விசாரணையாகத் தொடங்கியது.

இந்த நடவடிக்கைக்கு TASMAC மற்றும் தமிழ்நாடு அரசு எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. உயர் நீதிமன்றம், ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி, அமலாக்கத் துறையின் விசாரணையை அனுமதித்து, மாநிலத்தின் மனுவை நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு செய்யப்பட்டது. மே மாதம் 22-ஆம் தேதி, முதன்மை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, ED-வின் விசாரணையைத் தற்காலிகமாகத் தடுத்து, கடுமையான கருத்துகளைப் பதிவிட்டது. "ED எல்லா வரம்புகளையும் கடக்கிறது. நீங்கள் நாட்டின் கூட்டாட்சி அமைப்பை முற்றிலும் மீறுகிறீர்கள்," என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி  கவாய் கூறினார். ஒரு நிறுவனம் எப்படி கிரிமினல் குற்றத்தைச் செய்யும்? தனிநபர்கள் மீது வழக்கு போடலாம், ஆனால் நிறுவனத்தின் மீது எப்படி வழக்கு தொடர முடியும்? என்று அவர் கேட்டார்.

அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றம் தடையை நீட்டித்தது. CJI கவாய் மீண்டும் கேள்வி எழுப்பினார்: "இது மாநிலத்தின் விசாரணை உரிமையில் தலையீடாகாதா? கூட்டாட்சி அமைப்பு என்ன ஆகும்? உள்ளூர் காவல் துறை விசாரிக்க முடியாதா?" என்று. PMLA-வின் 66(2) பிரிவின்படி, ED மாநில அதிகாரிகளுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும், அது செய்யப்படவில்லை என்றும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபால் வாதிட்டார். ED-யின் தரப்பில், கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, மாநிலம் 37 முதல் தகவல் அறிக்கைகளை முடித்து வைத்து விட்டதாகவும், அது ED-வின் வழக்கை அழிக்க முயல்வதாகவும் வாதிட்டார். ஆனால், நீதிமன்றம், PMLA தீர்ப்புக்கு எதிரான மறு ஆய்வு மனுக்கள் தீர்ப்பளிக்கப்படும் வரை விசாரணையைத் தொடர அனுமதி மறுத்தது.

இந்தத் தீர்ப்பு, வெறும் சட்டரீதியானது அல்ல; அது இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படை கோட்பாடுகளை நினைவூட்டுகிறது. சட்டம் மற்றும் ஒழுங்கு, மாநிலப் பொறுப்பு என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் 7-ஆவது அட்டவணையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மத்திய அமலாக்கப் பிரிவுகள், பண மதிப்பழிப்பு பண சூதாட்டம் போன்ற தேசியக் குற்றங்களில் தலையிடலாம், ஆனால் அது மாநில உரிமைகளை மீறாமல் இருக்க வேண்டும். இந்த வழக்கில், அமலாக்கத் துறையின் நடவடிக்கை, மாநிலத்தின் விசாரணைகளை புறக்கணித்து, அரசியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுவதாகத் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு, மத்திய பாஜக அரசுடன் மொழி, தொகுதி வரம்பு மாற்றம் போன்ற விவகாரங்களில் மோதல் கொண்டுள்ளது. இத்தகைய சூழலில், அமலாக்கத்துறைவை, மாநிலங்களை இலக்காக்கி, கூட்டாட்சியின் சமநிலையைத் தகர்க்கின்றன.

இது போன்ற சம்பவங்கள், மாநிலங்களின் சுயாட்சியை பலவீனப்படுத்தும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. தமிழ்நாடு போன்ற மாநிலங்கள், தங்கள் உள்ளூர் சட்டங்களை அமல்படுத்தும் உரிமையை இழக்கக் கூடாது. ஊழல் விசாரணை தேவைப்படுகிறது என்பதில் ஐயமில்லை; ஆனால், அது நியாயமான, பாரபட்சமற்ற முறையில் நடக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தலையீடு, அமலாக்கத் துறையின் அதிகாரங்களுக்கு வரம்பு விதிக்கும் முன்னுதாரணமாக அமையும். இது மற்ற மாநிலங்களுக்கும் பாடமாக இருக்கும்.

கூட்டாட்சி அமைப்பின் செயல்பாடு, ஒரு தேசத்தின் வலிமையை அளக்கும் அளவுகோல். தலைமை நீதிபதி  கவாயின் "உள்ளூர் போலீஸ் விசாரிக்க முடியாதா? கூட்டாட்சிக்கு என்ன ஆகும்?" என்ற கேள்விகள் – அனைத்து அரசியல் தலைவர்களுக்கும், அமலாக்க அதிகாரிகளுக்கும் கூட்டாட்சி தத்துவத்தை நினைவு படுத்தும் எச்சரிக்கை. ஊழலை வேரறுப்பதற்காக, அரசியல் ரீதியான ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள், தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் இந்த நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்க வேண்டும். இது ஒரு வெற்றி அல்ல; இது சமநிலையின் தொடக்கமாகும். SC extends stay granted on investigation into alleged TASMAC money laundering case,case to be heard post the final adjudication on pleas seeking review of Vijay Madanlal Choudhary judgement which upheld provisions of PMLA.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...