ரூபாய்.ஒரு லட்சத்து .20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊரக வளர்ச்சித்துறையின் அலுவலர்கள் மூவர் கைது
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிக்கான தொகையை விடுவிக்க ரூபாய்.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மூவரை ராமநாதபுரம் ஊழல் தடுப்புக் கணாகாணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
இராமநாதபுரம் மாவட் டம், பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்த முதல் நிலை ஒப்பந்ததாரர்....... மாவட்ட ஊரகவளர்ச்சித் துறையில் வேலைக்கான ஒப்பந்தம் உத்தரவு பெற்று தார்ச் சாலை அமைத்துள்ளார். சாலை பணி முடிந்து, அதற்கான தொகையை விடுவிக்க வேண்டி அக்டோபர் மாதம்.24ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள ஊரகவளர்ச்சித் துறை பொறியியல் பிரிவில் மூத்த வரைவு அலுவலர் வீரசேகரனிடம் சான்றுகளை ஒப்படைத்தார். அந்தத் தொகையை விடுவிக்க,
மூத்த வரைவு அலுவலர் வீரசேகரன் ரூபாய்.1.20 லட்சம் கமிஷனை லஞ்சமாகத் தருமாறு கேட்டுள்ளார். இது குறித்து ஒப்பந்ததாரர் இராமநாதபுரம் ஊழல் தடுப்புக் கண்காணிப்யு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகாரளித்தார்.
அவர்கள் அறிவுறுத்த லின்படி, நேற்று மாலை ஊரக வளர்ச்சித் துறை பொறியியல் பிரிவு அலுவலகத்தில், மூத்த வரைவு அலுவலர் வீரசேகரன் (வயது 55), இளநிலை வரைவு அலுவலர் நாகலிங்கம்(வயது 55), உதவியாளர் அருண் (வயது 41) ஆகியோரிடம் ரூபாய்.1.20 லட்சத்தை ஒப்பந்ததாரர் அரசு சாட்சி முன்னிலையில் கொடுத்த போது துனைக் கண்காணிப்பாளர் இராமச் சந்திரன், ஆய்வாளர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் தலைமையிலான ஊழல் தடுப்புக் கணகாணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் லஞ்சம் பெற்ற மூன்று பேரையும் பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர். அவர்களிடம் மேலும் விசாரணை செய்தனர். பின்னர் சாலை பணி ஒப்பந்ததாரரிடம் ரூபாய்.1,20,000 லஞ்சமாக வாங்கிய இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை பொறியியல் பிரிவு முதுநிலை வரைவு அலுவலர், இளநிலை வரைவு அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகியோர் சிறைக்கு அனுப்பிவைத்தனர்
.webp)
கருத்துகள்